செவ்வாய், 28 ஜூலை, 2020

பா.ஜ.க முருகனின் பச்ச துரோகப் பேட்டி தாழ்த்தப்பட்ட மக்களே எச்சரிக்கை!

Thangaraj Gandhi : · பன்றிகளுக்கு சாக்கடை சொர்க்கமே! மலமள்ளும் சமூகத்தில் பிறந்த எல்.முருகன் சொல்கிறார் #வர்ணாசிரம் சமூகநீதியாம். அதைவிட அது அறிவியலாம்..! நாசாவுக்கு தெரியுமா? எங்க அய்யா அதியமான் சொல்வார். "சாதி அமைப்பினாலும் தலைவிதி முன்ஜென்ம பாவம் போன்ற இந்து மதத்தின் மூடநம்பிக்கையால் தான் மலமள்ளும் தொழிலில் அவர்களை அமிழ்த்து வைத்துள்ளது"
Manjai Vasanthan :  பா.ஜ.க தலைவர் முருகனின்
பச்ச துரோகப் பேட்டி
தாழ்த்தப்பட்ட மக்களே எச்சரிக்கை!
தாழ்த்தப்படடோருக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை  இந்துத்துவா அமைப்பினர் அக்காலத்திலிருந்து இக்காலம் வரைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்களாக ஏற்பதில்லை, சகமனிதர்களாகவும் ஏற்பதில்லை.இன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருக்கும் தாழ்த்தப்பட்டவரான ராம்நாத் கோவிந்தின் நிலையும் அதுவே!
ஆனால், இவற்றையெல்லாம் அறவே மறைத்துவிட்டு, அண்ணல் அம்பேத்காரின் புகழ்பரப்ப பி.ஜே.பி அரசு என்னென்ன செய்துள்ளது என்று பட்டியலிட்டு தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை ஏமாற்றுகிறார் முருகன்.
இவர்கூறும் அம்பேத்கார் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை இந்துத்வாதிகள் எப்படி கேவலப்படுத்தி அடக்கி, ஒடுக்கி, நசுக்கி,ஒதுக்கி,இழிவுப்படுத்துகின்றனர் என்பதை கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்.

1) தீண்டத்தகாதோர் இந்துக்கள் வசிக்கும் இடத்துக்கு அப்பால் வசிக்க வேண்டும். இவ்விதியை மீறுவது குற்றமாகும்.
2) தீண்டாதோர் இருக்கும் பகுதி தெற்குத் திசையில் இருக்க வேண்டும். ஏனெனில், தெற்குதான் நான்கு திசைகளில் அமங்கலமானது. இந்த விதியை மீறி நடப்பது குற்றமாகும்.
3) தீண்டாதோர் தீட்டு ஏற்படுத்தும் தூரம் அல்லது நிழல் தீட்டு பற்றிய விதிகளை பின்பற்ற வேண்டும். இவ்விதியை மீறுவது குற்றமாகும்.
4) தீண்டத்தகாதோர் நிலம், கால்நடைகள் போன்று செல்வங்கள் சேர்ப்பது குற்றமாகும்.
5) தீண்டத்தகாத சமுதாயத்தினர் ஓட்டுக்கூரை உள்ள கட்டுவது குற்றமாகும்.
6) தீண்டத்தகாத சமுதாயத்தினர் சுத்தமான சுத்தமான உடை உடுத்துவது, செருப்பு அணிவது, கைக்கடிகாரம் அல்லது தங்க நகை அணிவது குற்றமாகும்.
7) தீண்டத்தகாத சமுதாயத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு கம்பீரமாக ஒலிக்கும் பெயர்களை வைப்பது குற்றமாகும். அவர்களின் பெயர் இழிவைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.
8) தீண்டத்தகாத சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஓர் இந்துவின் முன்னால் நாற்காலியில் உட்காருவது குற்றம்.
9) தீண்டத்தகாத சமுதாயத்தினர் கிராமத்தின் வழியே குதிரையின்மீதோ, பல்லக்கிலோ அமர்ந்து செல்வது குற்றம்.
10) தீண்டத்தகாத சமுதாயத்தினர் கிராமத்தின் வழியே தங்கள் ஊர்வலத்தை நடத்திச் செல்வது குற்றம்.
11) தீண்டத்தகாத சமுதாயத்தினர் இந்துவுக்கு வணக்கம் தெரிவிக்காமலிருப்பது குற்றம்.
12) தீண்டத்தகாத சமுதாயத்தினர் பண்பட்ட மொழி யொன்றைப் பேசுவது குற்றம்.
13) தீண்டத்தகாத சமுதாயத்தினர் யாரேனும் இந்துக்கள் உண்ணாவிரதமிருக்கிற புனிதநாளிலும், உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டு உணவு உண்ணப்போகும் நேரத்திலும் செல்ல நேர்ந்தால் பேசிக்கொண்டு செல் வது குற்றம். ஏனெனில் அவர்கள் மூச்சுக்காற்று ஊரின் காற்றையும் இந்துக்களின் உணவையும் மாசுபடுத்துவதாகக் கருதப்படுகிறது.
14) தீண்டத்தகாத ஒருவர் தீண்டத்தக்கவரின் புறச்சின்னங்கள் எதையும் அணிந்து தன்னைத் தீண்டத்தக்கவர்போல் காட்டிக் கொள்வது குற்றம்.
15) தீண்டாதவர் தன்னுடைய தாழ்ந்த அந்தஸ்துக்குத் தக்க வாறு நடந்துகொண்டு பொதுமக்கள் அவரை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணம் பின்வருவன போன்ற புறச்சின்னங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
அ) இழிவான பெயரைக் கொண்டிருப்பது.
ஆ) சுத்தமான உடை அணியாதிருப்பது.
இ) வீட்டுக்கு ஓட்டுக்கூரை இல்லாதிருப்பது.
ஈ) வெள்ளி, தங்கநகை அணியாதிருப்பது.
அதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்களாக 1934 வரை அவர்கள் ஏற்கவே இல்லை.தாழ்த்தப்பட்டோரை இந்துக்களாக ஏற்பதா வேண்டாமா என்று பலமுறை இந்துத்துவாதிகள் கூடிவிவாத்துள்ளார்கள்.தற்போது இந்துக்களின் பெரும்பான்மையைக் காட்டுவதற்கும், தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளைப் பெருவதற்கும் சில கபடநாடகங்களை நடத்திவருகின்றனர் என்பதே உண்மை!
அண்ணல்  அம்பேத்கர் அவர்கள், முதல் வட்ட மேசை மாநாட்டில், தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதி ஒதுக்கும் முறையை ஆங்கில ஆட்சியாளர்களுடன் வாதாடிப் பெற்றார்.இதை ஆர்.எஸ்.எஸ் கடுமையாக எதிர்த்தது. ஒரு தலித் தலைவரைவிட்டே அந்த எதிர்ப்பைத் தெரிவித்தது.ஆர்.எஸ்.எஸ் க்கும், இந்துத்வாவாதுகளுக்கும் முருகன்கள், பங்காருலட்சுமணன்கள், கிருபா நிதிகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சங்கிகளுக்குக் கையாலாய்ப் பயன்பட்டு தங்கள் சமுதாயத்துக்குத் துரோகம் செய்துவருகின்றனர்.
எனவே, இவர்களிடம் தாழ்த்தப்பட்டோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் மிக எச்சரிக்கையாய் இருந்து, இந்துத்வா வாதிகளின் சதியை முறியடிக்கவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக