ஞாயிறு, 5 ஜூலை, 2020

"நடுத்தெருவில் நிறுத்துவது நவீனமா?" - ஜெ.ஜெயரஞ்சன்

மின்னம்பலம : பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் அவதிகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார். இந்த நிலையில் இன்று (ஜூலை 5) இந்த நெருக்கடி காலத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசு எடுக்கும் அவசர நடவடிக்கைகள் பற்றி ஜெயரஞ்சன் பேசினார். தொழிலாளர்கள் நல சட்ட திருத்தங்களை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் வாதங்கள், எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் காரணங்களை பட்டியலிட்ட அவர், தொழில் தொடங்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் குறித்தும் விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக