வியாழன், 9 ஜூலை, 2020

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஒடுக்கப்பட்டோரை முதலில் அழைத்துச் சென்றது சுயமரியாதை இயக்கங்களே!

பெரியார் அழகன் :
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஒடுக்கப்பட்டோரை முதலில் அழைத்துச் சென்றது  சுயமரியாதை இயக்கங்களே!
8 ஜீலை 1939 தமிழக வரலாற்றில் முதன் முதலாய் தாழ்த்தப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வைத்தியநாத அய்யர், ராஜாஜி, முத்துராமலிங்கம் அழைத்து சென்றார்கள் என்ற அப்பட்டமான பச்சை பொய்யை எத்தனை முறை நாம் உடைத்தாலும் மீண்டும் மீண்டும் அதே பொய்யை சொல்லி வருகின்றனர் இந்த பச்சைத் தமிழ் ரத்தம் தேடும் கும்பல்..
அந்த கும்பலுக்கும் மீண்டும் பதில் தருகிறோம். அது பச்சை பொய் என்று!
1920 காலங்களில் 100க்கணக்கான ஆலைய நுழைவு போராட்டங்கள் பெரியாரும், சுயமரியாதை இயக்கக்கார்கள் நடத்தியுள்ளனர். இதை பல முறை எடுத்துக்காட்டியுள்ளேன். மீண்டும் படிக்க இதோ...
https://www.facebook.com/1157684166/posts/10217725806914410?sfns=mo
மாபொசி எனது போராட்டம் என்ற சுயசரிதையில் ஆலைய நுழைவு போராட்டம் குறித்து எழுதிய குறிப்பில் நாட்டார்கள் பலர் நாத்திகர்களாக மாறினார்கள் என்றும், நீதிகட்சிக்கு சென்றார்கள் என்றும், கிறுஸ்துவ மதத்திற்கு சென்றார்கள் என்றும், காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற செய்த தந்திரம் என்பது புரிய வரும். அவர் சுயசரிதை வரிகளை படிக்கவும்!
ஆர்எஸ் நாயுடு என்பவர் மதுரை நகரசபை தலைவராக இருந்தவர். நீதிக்கட்சியின் ஆட்சியில் அவர் மதுரை மீனாட்சி கோயில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவர் கோயிலுக்குள் பல சீர்திருத்தம் செய்கிறார். அதை அறிந்து நீதிக்கட்சியை வீழ்த்த ராஜாஜி, வைத்தியநாத பார்ப்பன கூட்டம் திட்டம் தான் ஆலைய நுழைவு.
அவரின் நெருங்கிய நண்பர் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் தந்த பிரித்தானிய பிரதமர் க்லெமண்ட் அட்லி. அவர் ஆரெஸ் நாயுடு வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்!
ஓட்டுக்காக நாடார்களை கோயிலுக்கு அழைத்து வருவதாக நாடகமாடும் இந்த கும்பல் கோயிலுக்கு வருவதற்காக அனைத்தையும் ஏற்படுத்தி கொடுத்தவர் ஆரெஸ் நாயுடு. இதை மாபொசி சுயசரிதையை படித்தால் புரியும்.
இந்த கும்பல் கோயிலுக்குள் இருந்தது அரை மணிநேரம் தான்(30நிமிடம்) மறுநாள் கோயிலை பூட்டி கிளர்ச்சி செய்த கூட்டத்தை எதிர் கொண்டது ஆரெஸ்.
கிளர்ச்சி செய்தவர்களை பணி நீக்கம் செய்தவரும் அவரே... பூசைகளைத் தொடர்ந்து செய்ய திருநெல்வேலியிலிருந்து 12 ஆதி சிவாச்சாரியார்களை வரவழைத்தவரும் இவரே.
CJ Fuller என்ற ஆங்கிலேய எழுத்தாளர் “Servants of Goddess” என்ற புத்தகத்தில் அம்பேத்கர் 1936ல் தொடங்கிய ஆலைய போராட்டத்தின் தாக்கத்தினாலும், 1937ல் திருவணந்தபுரத்தில் நடந்த கிளர்ச்சியும் தான் மதுரை மீனாட்சி கோயில் நுழைவுக்கு காரணம் என்றும், ஆர்எஸ் நாயுடுவால் தான் இது சாத்திய பெற்றது என்றும் பதிவு செய்துள்ளார். அம்பேர்கரின் ஆலைய நுழைவு போராட்டம் வைக்கம் போராட்டத்தின் வெற்றி தான் தனக்கு உந்துதலாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார் என்பதும் வரலாறு!
இந்த ஆலைய நுழைவு போராட்டம் பிராமணர் மற்றும் உயர்சாதி மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த வைத்தியநாதய்யர்தான், 1922ல் தாழ்த்தப்பட்டோர் கோவிலில் நுழைவதைக் கடுமையாக எதிர்த்தவர் என்று திரு.வி.கவின் வாழ்க்கைக் குறிப்புகளில் இது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் 1938 இவரும் ராஜாஜியுமி நடத்தும் ஆலைய நுழைவு நாடகத்தி எதிர்த்து கேள்வி கேட்டவர் பெரியார். இதை கண்டு அடுத்த வருடமே ராஜாஜி முதல்வரான பிறகு அதற்கு “Madras Temple Entry Authorisation and Indemnity Act in 1939” என்ற ஒன்று கொண்டு வந்து தன்னையும் தன் சமூகத்தை பாதுகாத்து கொண்டார். இந்த சட்டத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லாததால் 1947ல் இது திருத்தி எழுதப்பெற்றது. (சட்டத்தின் புகைபடம் கீழே)
பெரியார் இந்த குள்ளநரிகள் மீது வைத்த விமர்சனம் ” எனது நண்பர் கனம் ஆச்சாரியார் கோவில் பிரவேசம் சம்பந்தமாக பேசுவதும் செய்வதும் எல்லாம் சூழ்ச்சி என்றே எனக்குப் படுகிறது. அவர் செய்த அவசரச் சட்டத்தில் கோவிலில் ஆதி திராவிடர் நுழைவது கிரிமினல் குற்றம் என்று வியக்தமாகச் சொல்லிவிட்டார். ஆனால், தன்னால்தான் சிலர் மன்னிக்கப்படக்கூடும் என்கிறார். இது ஜனநாயகமா, பொது ஜன அபிப்பிராயமா?
இத்தனை மேற்கோள்கள் காட்டியும் அடுத்த வருடமும் பழைய பொய் வரலாற்று குப்பையை மீண்டும் தூக்கி கொண்டு வருவார்கள். எத்தை பொய்கள் சொன்னாலும் நாம் உண்மையை தொடர்ந்து சொல்லி கொண்டே இருக்க வேண்டும். இவர்களுக்கு பதில் தருவதற்காக அல்ல அடுத்த தலைமுறைக்கு உண்மை வரலாற்றை சொல்ல...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக