வியாழன், 2 ஜூலை, 2020

சாத்தான்குளமும் தூத்துக்குடியும் கூறுவதென்ன? இந்துத்வாக்களின் நச்சு கரங்கள் ...

சாத்தான் குளம் காவல் துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு
கொடுமையாக கொலை செய்யப்பட்ட திரு ஜெயராஜும் அவரது மகன் பெனிக்சும் உலகத்திற்கு  மிக முக்கியாமான   செய்திகளை கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
அரச பயங்கரவாதம் என்பது தமிழ்நாட்டிலும் வந்து விட்டது என்ற முக்கிய செய்தி இவர்களின் கொலையில் இருந்து அழுத்தமாக தெரிய வந்துள்ளது .
நாட்டின் எந்த சட்டஒழுங்கு முறைக்கும் அடங்காத ஒரு  சமுகவிரோத சக்தியின் நச்சு கரங்கள் அரசு நிர்வாக பொறி முறைக்குள் காலூன்றி விட்டது தெரிய வந்துள்ளது.
சேவாபாரதி அல்லது  friends of police என்பது அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட .  எதற்கும் துணிந்த ஒரு சமுக விரோத வன்முறை  இயக்கமாக காவல் துறைக்குள்ளேயே ஊடிருவி விட்டிருக்கிறது .
இது நாசிகளின் தன்மையை ஒத்திருக்கிறது .
சாத்தான் குளத்தில் தங்கள் உயிரை கொடுத்து இந்த உண்மையை மக்களுக்கு ஓங்கி உரைத்துள்ளார்கள் தந்தை செல்வராஜும் மகன் பெனிக்சும்.
இவர்கள் ஒரு திருப்பு முனையின் அடையாள சின்னமாகி விட்டார்கள்.
தம்பி பெனிக்ஸ் தமிழ் பற்றாளராகும் .
இந்த இளைஞர் போன்ற பலரின் தமிழ் உணர்வை பயன்படுத்தி இவர்களை தவறான பாதையில் தள்ளி விட்டுள்ளது நாம் தமிழர் இயக்கம் .
இந்த தம்பியும் தனது முகநூலில் திமுக பற்றியும் ஸ்டாலின் உதயநிதி பற்றியும் பல கேலிகளை பதிவேற்றி உள்ளார்.
ஈழத்தமிழர்களின் வரலாறு பற்றி இந்த தம்பி போன்றவர்கள் அறிந்ததெல்லாம் சீமான் கூறியவே . அவற்றில் எள்ளளவும் கூட உண்மை கிடையாது.


இவரின்  நாம் தமிழர் தோழர்கள் அல்லது தலைவர் சீமான்  போன்றோர் இவர்கள் போலீசால் கைது செய்து சித்திர வதைகளை ஆரம்பித்த போதே பெரிய அளவில் ஆர்பாட்டம் செய்து உலகின் கவனத்தை ஈர்த்திருக்கலாம் .
சீமான் பிரபாகரனுக்கே ஈழப்போராட்டம் பற்றி வகுப்பு எடுக்கும் ரேஞ்சுக்கு அளந்து விடுபவர்.
 எப்படி தனது தம்பிக்கு நடந்த கொடுமையெல்லாம் நடந்து முடியட்டும் என்று காத்திருந்தார்?
அது மட்டுமல்ல சீமானின் பாஜக முதலாளிகள் இந்த இரட்டை கொலைகளை மிகவும் கொச்சை படுத்தி இதை அப்படியே மூடி மறைக்க முயன்றதை ஊடகங்களில் உலகமே பார்த்தது.
பாஜகவின் அடியாள்தான் சீமான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருந்தால் அவர்கள் பொறுமையாக நடக்கும் சம்வங்களை அவதானிக்கவும் . விரைவில் அவை அம்பலமாகும்.
கிட்டத்தட்ட தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்திலும் இது போன்ற ஒரு நிலைதான் இருந்தது.
தன்னார்வ அமைப்புக்களாகட்டும்  நாம் தமிழர்  போன்ற கட்டை பஞ்சாயத்து கட்சிகளாகட்டும் உருப்படியாக எதுவும் செய்ய முடியாத கையறு நிலைதான் தொடருகிறது.
அந்த அமைப்புக்களின் தலைவர்களுக்கு கல்லா நிறைந்ததை தவிர மக்களுக்கு அவர்களால் பெரிதாக எந்த நன்மையையும் விளைந்து விட்டனவா?
சாத்தான்குள கொலைகளுக்கு தகுத்த நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளிக்கு உரிய தண்டனை கொடுக்கா விட்டால் .இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகிவிடும்.
பாசிஸ்டுகளின் நோக்கங்கள் அத்தனையும் நிறைவேறி விடும் .
நிரந்தர இந்த்துவா பாசிச ஆட்சிதான் இந்த பாசிட்டுகளின் நோக்கம்.
அதன் ஆரம்ப படிதான் தூத்த்துக்குடி ஸ்டெர்லைட் கொலைகளும் சாத்தான் குளம் கொலைகளும்.
இந்த இரண்டு சம்பவங்களின் பின்னணியில் அசுரத்தனமான சக்தியும் பயங்கர நோக்கங்களும் இருப்பது அச்சத்தை ஊட்டுவதாக உள்ளது.
திமுகவை மக்கள் விரும்புகிறார்களோ இல்லையோ என்ற கேள்வி தற்போது காலாவதி ஆகிவிட்டது .
திமுகதான் மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைதான் தற்போதுள்ள நிலைமை.
கடந்த ஒரு நூற்றாண்டு திராவிட பாரம்பரிய சங்கிலி தொடர் இன்னும் உயிர்ப்போடு இருப்பது ஒன்றே தமிழ்நாட்டின் பலம் .
இந்த பலத்தை பற்றி கொள்ளவேண்டும் ..
உதிரிகளின் சொல்கேட்டோ?  .
சுய நலமிகளின் பசப்பு வார்த்தைகளில் மயங்கியோ ?
எதிரிகளின் கைகளில் சிக்கி விடாதீர்கள்.
தமிழர்களை காக்கும் காவல் கோட்டையாக திராவிட முன்னேற்ற கழகம்.
இந்த கோட்டை பலமாக இருக்கும் வரைதான் தமிழ்நாடு தமிழர்களின் நாடாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக