விகாஸ் துபே கொல்லப்பட்ட நிமிடங்கள் .. எது உண்மை ? ஒரு போதும் வெளியே வராது .
tamilondeindia : தமிலோன்டிந்திய உத்தர பிரதேசத்தை உலுக்கிய தாதா விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை
செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் நேற்று நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்த
விவரங்கள் வெளியாகி உள்ளது. <
இந்தியாவையே அதிர வைத்த ரவுடி... Vikas dubey சிக்கியது எப்படி?<உத்தர
பிரதேசத்தை உலுக்கிய போலீஸ் கொலை வழக்கில் தற்போது முக்கிய திருப்பம்
ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை உத்தர பிரதேசத்தை சேர்ந்த முக்கிய
கேங்ஸ்டர் விகாஸ் துபேவை கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைத்து சென்றது.
தன்னை
கைது செய்ய வந்த போலீசார் மீது விகாஸ் துபே துப்பாக்கி சூடு நடத்தினார்.
விகாஸ் துபேவின் கேங் மொத்தமாக சேர்ந்து போலீஸார் மீது துப்பாக்கி சூடு
நடத்தினார்கள்.
எங்கே நடந்தது?
கான்பூரில்
இருக்கும் சோபேபூர் போலீஸ் நிலையத்திற்கு அருகே இருக்கும் டிக்கூர்
பகுதியில் துபே தங்கி இருப்பதாக தகவல் வந்தது. அவரை கைது செய்ய 20 போலீசார்
சம்பவ இடத்திற்கு சென்றார்கள்.இந்த நிலையில் போலீசார் விகாஸ் துபேயின்
வீட்டை நெருங்கிய போது, அங்கு இருந்த துபேயின் கூட்டாளிகள் போலீசார் மீது
சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அங்கு துபேயின் ஆட்கள் 20க்கும்
அதிகமானோர் இருந்தனர். போலீசார் மீது சரமாரியாக அடுத்தடுத்த துப்பாக்கியால்
சுட்டனர்.
தேடினார்கள்
இதில்
சோபேபூர் டிஎஸ்பி தொடங்கி வரிசையாக 8 போலீசார் பலியானார்கள். இது தொடர்பாக
தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. சரியாக ஒரு வாரம்
போலீசார் இவரை தேடினார்கள். இவரை போலீசார்தேடி வந்த நிலையில் இவரின்
உறவினர்கள், நண்பர்கள் , சக ரவுடிகள் எல்லோரும் கைது செய்யப்பட்டனர்.
நெருக்கமான கூட்டாளிகள் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
கைது
இந்த
நிலையில் நேற்று மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் பகுதியில் விகாஸ் துபே கைது
செய்யப்பட்டார். ஆனால் இவர் உண்மையில் கைது செய்யப்பட்டாரா அல்லது சரண்டர்
ஆனாரா என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. இவர் கோவிலுக்கு செல்லும்
போது கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இவர்
நேற்று உத்தர பிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
என்ன விசாரணை
இந்த
நிலையில் இன்று உத்தர பிரதேச போலீசார் அவரை கைது செய்து காரில் கான்பூர்
அழைத்து வந்தனர். கான்பூர் அருகே வந்த போது போலீசார் வாகனம் கவிழ்ந்து
விபத்து உள்ளாகி உள்ளது. அப்போது விபத்தை பயன்படுத்தி போலீசார் வாகனத்தில்
இருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தப்பிக்க விகாஸ் முயன்று
இருக்கிறார் . அப்போதுதான் என்கவுண்டனர் நடந்து உள்ளது.
போலீஸ் என்கவுண்டர்
விகாஸ்
துபேவை போலீசார் துரத்திக் கொண்டு சென்று துப்பாக்கியால் சுட்டு
இருக்கிறார்கள். சரியாக விகாஸ் துபே நெஞ்சில் துப்பாக்கியால் அவர்கள்
சுட்டு இருக்கிறார்கள். விகாஸ் துபே கொடுத்த ஒரு வாக்குமூலமும் போலீசாரை
கோபத்திற்கு உள்ளாக்கியது. இதுவும் கூட என்கவுண்டருக்கு காரணம் என்று
கூறுகிறார்கள். நேற்று இரவு விசாரணையின் போது போலீசாரிடம் விகாஸ் இந்த
வாக்குமூலத்தை அளித்து உள்ளார்.
அதில்,
நீங்கள் அன்று என்னை கைது செய்ய போகிறீர்கள் என்று தெரியும். அதனால்தான்
ஆட்களை வைத்து துப்பாக்கியால் சுட்டேன். எனக்கு அங்கிருந்து தப்ப எண்ணம்
இல்லை. எல்லோரையும் சுட்டுவிட்டு, எல்லோரையும் அங்கேயே புதைக்க நினைத்து
இருந்தேன். ஆனால் நிறைய போலீசார் இருந்ததால் எல்லோரையும் சுட முடியவில்லை.
அதனால் அங்கிருந்து தப்பித்தேன்.
நேரம் இல்லை
எனக்கு
போலீசாரை புதைக்க நேரம் இல்லை. என்னுடைய திட்டம் அதுவாகவே இருந்தது. ஆனால்
நிறைய பேர் வரவில்லை என்றால் எல்லோரையும் கண்காணாத இடத்தில் புதைத்து
இருப்பேன், என்று விகாஸ் துபே கூறி இருக்கிறார். போலீசாரை இந்த வாக்குமூலம்
கடுமையாக கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதை தொடர்ந்தே போலீசார்
என்கவுண்டரும் நடந்து உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக