திங்கள், 13 ஜூலை, 2020

அன்னை இந்திரா காந்தி மிகவும் நேசித்த உற்ற தோழர் கலைஞர்

மறைந்த இந்திய பிரதமர் அன்னை இந்திரா காந்தி  அவர்கள் இளமை காலங்களில் பெரிதும்   ராஜதந்திர வட்டாரங்களோடுதான்  வளர்ந்தவர்.
 தந்தை ஜவகர்லால் நேரு மகாத்மா காந்தி போன்றோரின் அரசியல் வட்டாரங்களில் மிகவும் துடிப்பாக வளைய வளைய வந்தே வளர்ந்தவர் .
அவரின் பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் ஒரு புரோட்டோகால் எனப்படும் அரசியல் சம்பிரதாயங்களை மிக நேர்த்தியாக கையாளும் பழக்கம் உள்ளவர்..
அவரின் உடல் மொழியும் முக பாவங்களும் மிகவும் உன்னிப்பாக கவனிக்க பட்டது . அவரது ஆங்கில இந்தி மொழியாற்றல்களுக்கு  இணையாக பிரெஞ்சு மொழி ஆற்றலும் வரப்பெற்றவர் . இந்த தகுதி வேறு எந்த இந்திய பிரதமருக்கும் கிடையாது .  அவரின் பிரெஞ்சு மொழி பேட்டியை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள் ..  ( எனக்கு ஓரளவ பிரெஞ்சு மொழி தெரியும் அதனால்தான் கூறுகிறேன்)
தன்னை சந்திக்கும் ஒவ்வொரு அரசியல் ஆளுமைகளோடும் அவர் வெறுமனே மொழியால் மட்டும் உரையாடியவர் அல்ல .. அதற்கு மேலாக தனது முக பாவனைகளாலும் உடல் மொழியாலும் கூட தொடர்பாடல் கருத்துக்களை பரி மாறியவர்.
அவர் கட்டமைத்த மக்கள் கூட்டம் பெரும்பாலும் அவரின் முக பாவங்களில் பொதிந்திருந்த உணர்வுகளையும் உடல் மொழி கூறும் செய்திகளையும் உள்வாங்கியே அவர் பின்னால் திரண்டது என்றால் மிகை இல்லை.
இந்த படத்தில் இந்திரா அம்மையர் கலைஞரின் மிக அருகில் அமர்ந்து அவரது முகத்தை நோக்கும் இந்த பார்வை    பல கதைகளை கூறுகிறது.
எனக்கு தெரிந்து இவ்வளவு வாஞ்சையோடு ஒரு சக அரசியல் தலைவரை  நோக்கி அவர்  பேசுவது கிடையாது .

எப்போதும் ஒரு இடைவெளியை கொண்டிருப்பார் . காந்தி நேரு போன்ற வயோதிப குரு ஸ்தானத்தில் இருப்பவர்களோடு என்றால் சகஜம்தான் . ஆனால இங்கே இருப்பவர் அவரோடு ஒட்டியும் முட்டியும் மோதியும் பின்பும் சேந்தும் பலவித அரசியல் சதுரங்க விளையாட்டுக்களில் திணறடித்தவர்..
இந்த நேசம் சாதாரண அரசியலையும் தாண்டி ஒரு உற்ற தோழனோடு உள்ள வாஞ்சையாகத்தான் எனக்கு தெரிகிறது.
இந்த படத்தில் தெரிவது போல இந்திரா அம்மையார் வேறு எவரோடாவது இப்படி காட்சி அளித்ததாக தெரிந்தால் கூறுங்கள் .. எனது தோல்வியை ஒப்பு கொள்கிறேன்
 கலைஞருக்கும் இந்திரா அம்மையாருக்கும் உள்ள உறவின் வரலாறு ஆழமானது..
1967 இந்திய பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி   283  இடங்களில் வெற்றி பெற்றது .
திராவிட முன்னேற்ற கழகம் 25 இடங்களில் வெற்றி பெற்றது.
1969 இந்திராகாந்தி அம்மையாருக்கும் மொரார்ஜி காமராஜர் போன்றவர்களுக்கும் இடையே பிளவு   ஏற்கபட்டது.
இந்தியாவின் பதினான்கு வங்கிகளையும்  அரசுடமை ஆக்கினர் . அதற்கு திமுக ஆதரவு கொடுத்தது.
மன்னர்களுக்கு வழங்கப்பட்டு கொண்டு வந்த மான்யத்தை நிறுத்த சட்டம் கொண்டு வந்தார் . அதையும் திமுக ஆதரித்தது .
ஆனால அது மாநிலங்கள் அவையில் தோற்கடிக்க பட்டது . அதுவும் ஒரே ஒரு வாக்கால்  . அந்த ஒற்றை வாக்கு திமுகவின் வாக்கு . திமுகவின் மானிலங்கள அவை உறுப்பினரான  நடிகர் எஸ் எஸ் ராஜெந்திரன் வயிற்று போக்கு காரணமாக உரிய நேரத்தில் வாக்களிக்க செல்ல முடியவில்லை என்று சமாதானம் கூறினார்.
அதானால் இந்திரா காந்தியின் ஆட்சி கவிழ்ந்தது .
இந்த காலக்கட்டங்களில் எல்லாம் இந்திரா அம்மையாரின் முற்போக்கு திட்டங்களுக்கு திமுக உறுதுணையாக பணியாற்றியது .
அதிலும் வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்டத்தில் கலைஞரின் ஆலோசனை பெரிதும் உண்டு . ஏற்கனவே அந்த பாதையில் கலைஞர் பயணத்தை ஆரம்பித்து இருந்தார் .
1971 இல் நடந்த  மத்திய மாநில தேர்தல்களில் இந்திரா அம்மையாரும் கலைஞரும் பிரமாண்ட வெற்றியை பெற்றார்கள்.
இருவரும் போட்டி போட்டுக்கொண்டு முர்போக்கு திட்டங்களை செயல் படுத்தி கொண்டிருந்த பொற்காலங்கள் அவை .
இந்தியாவுக்கு உள் இருந்தே கொல்லும் வியாதியான பார்பனர்கள் திமுகவை பிளவு படுத்தும் முயற்சியில் மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறினார்கள் .
எம்ஜியாரின் அந்நிய செலாவணி குளறுபடிகளை காட்டி அவரை பயமுறுத்தி திமுகவை பிரித்தார்கள் .
அந்த சகுனி வேலையை செய்துவிட்டு மீனம்பாக்க விமான நிலையத்தில் வைத்து மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் கூறியது:
திமுகவை நாங்கள் கவிழ்க்க மாட்டோம் . ஆனால் அவர்கள் தாங்களாகவே கவிழ்ந்து போவார்கள் !
181 எம் எல் ஏக்களை கொண்ட ஒரு ஆட்சியை கவிழ்ந்து போவார்கள் என்று அவர் கூறினால் அதன் அர்த்தம் என்ன ? சகுனி வேலையை ஆரம்பித்து விட்டார்கள் என்பது தானே ?
ஆனால் அப்படி கூறிய மோகன் குமாரமங்கலமும் அவரோடு கூடவே சதியில் ஈடு பட்ட கம்யுனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதமும் அந்த விமானத்திலேயே பலியானார்கள . அந்த விமானம் விபத்துக்கு உள்ளானது .

 Indian Airlines Flight 440 on May 31, 1973 at the age of 56.
48 of the 65 passengers and crew on board Flight 440 perished in the accident

அதன் பின்பு வரலாறு எங்கெங்கோ எல்லாம் சுற்றி மீண்டும் இந்திரா காந்தி கலைஞரின் உதவியை நாடி வந்தார்.
தேர்தலில் தோற்று இருந்த இந்திரா அம்மையார் தஞ்சாவூருக்கு நடக்க இருந்த இடைதேர்தலில் போட்டியிட விரும்பினர்.
அபோது அவர் எம்ஜியரோடு கூட்டணியில் இருந்தார்.  ஆனால்ஆட்சியில் இல்லை.
மொரார்ஜி ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
இந்திரா அம்மையார் எம்ஜியாரின் ஆதரவோடு தஞ்சவூரில் போட்டி இட்டால் நானே அந்த தொகுதியில் களம் இறங்குவேன் என்று அறிவித்தார் கலைஞர்.
இதற்கு இடையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் எம்ஜ்யரை மிரட்டினர்.
உடனே எம்ஜியாரி பல்டி அடிக்க முடிவு செய்தார்.
தமிழகம் வந்த இந்திரா எம்ஜ்யாரிடம் . . என்ன மிஸ்டர் எம்ஜியார் எல்லாம் சரிதானே என்று வினவினர்.
அதற்கு எம்ஜியார் . கலைஞரை இலகுவாக எடை போட்டு விட முடியாது .அவரே இந்த தொகுதில் நிற்பதாயின் நாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்று  பின்வாங்கினர்
இந்த கால் வாரலை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத இந்திரா அம்மையார் உடனே சரி  நீங்கள் கவலை படவேண்டாம்  என்று கூறிவிட்டு . திரும்பி விட்டார்
அப்போதுதான் அந்த பிரபலமான வாக்கியத்தை இந்திரா அம்மையார் கூறினார்
" கலைஞர் நம்மை எதிர்த்தாலும் சரி ஆதரித்தாலும் சரி அதில் உறுதியாக நிற்பார்  அவரை நம்பலாம் "
அந்த நிமிடத்தில் இருந்து கலைஞரும் இந்திரா அம்மையாரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர் .
எந்த காலத்திலும் கலைஞரை விட்டு விலகும் எண்ணமே அவருக்கு இருந்ததில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக