புதன், 29 ஜூலை, 2020

தங்கம் தென்னரசு : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மனிதாபிமானமற்ற செயல்


 தினகரன் : சென்னை: கல்வித்துறை ஒருபோதும் கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது என்று Cதெரிவித்துள்ளார். இது குறித்து விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்துவிட்டதாகக் கூறி, ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.


ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று காரணம் சொல்லி, அவர்கள் மீது கல்வித்துறையே நடவடிக்கை மேற்கொள்வதென்பது ஒரு வகையில் நகை முரணாகத் தோன்றினாலும், அவர்கள் அதற்கான முன் அனுமதியினைத் துறையிடம் இருந்து பெறவில்லை என விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது வேதனையானது, கண்டிக்கத்தக்கதாகும். அனுமதி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது, கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல. ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும் ஏற்க முடியாத செயலும் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக