புதன், 1 ஜூலை, 2020

அமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந்தர் அய்யர்) Cisco மீது வழக்குப் பதிவு

சுந்தர அய்யர்

ரமணா கொம்பெலா
tamil.samayam.com:: அமெரிக்காவில் தலித் ஊழியர் மீது பாகுபாடு காட்டியதாக சிஸ்கோ நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. க்ரிட்டிக் விமர்சனம்" ;அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வரும் சிஸ்கோ
நிறுவனத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஊழியர் மீது ஜாதி ரீதியான பாகுபாட்டு காட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர் ஒரு தலித் என்று கூறப்படுகிறது.
இவ்விவகாரத்தில் சிஸ்கோ நிறுவனம் மீது கலிபோர்னியா மாகாண அரசு வழக்கு தொடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை. சிஸ்கோ நிறுவனத்தை சேர்ந்த இரு மேலாளர்களின் பெயர்கள் இம்மனுவில் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதி ரீதியான பாகுபாடுகள் அமெரிக்காவுக்கு புதிதல்ல. 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் தலித் ஊழியர்களில் 67 விழுக்காட்டினர் நியாயமாக நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். எனினும், இந்த ஜாதி பாகுபாடு பிரச்சினைகள் குறித்து இத்தனை ஆண்டுகளாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.



இந்நிலையில் அமெரிக்காவில் முதல்முறையாக ஜாதி ரீதியான பாகுபாட்டை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த ஊழியரும், அவரது மேலாளர்களும் சேன் ஜோஸில் உள்ள சிஸ்கோ தலைமையகத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். சிஸ்கோ நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.


குற்றம்சாட்டப்பட்டுள்ள மேலாளர்கள் அந்த தலித் ஊழியர் மீது பாகுபாடு காட்டி, தொந்தரவு கொடுத்ததாக கலிபோர்னியா அரசு தெரிவித்துள்ளது. மேலும், அந்த தலித் ஊழியர் பணிமனையிலும் ஜாதி படிநிலையை ஏற்றுக்கொண்டு குறைவான சம்பளம், குறைவான வாய்ப்பு வசதிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென மேலாளர்கள் எதிர்பார்த்ததாக கலிபோர்னியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தில் சிஸ்கோ நிறுவனத்தின் மீதும், சம்பந்தப்பட்ட மேலாளர்கள் மீதும் அமெரிக்க சிவில் உரிமைச் சட்டம் 1964-ன் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனம், நிறம், மதம், பாலினம், பிறந்த தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிமனையில் பாகுபாடு காட்டுவதை தடுப்பதற்கான சட்டப் பிரிவு VIIஇன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது கலிபோர்னியா அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக