புதன், 29 ஜூலை, 2020

வனிதா விஜயகுமாரும் அண்ணாமலை ஐ பி எஸும் ! சுயமரியாதை பெண்ணும் ஆரிய அடிமைத்தன ஆணும் !

Devi Somasundaram   :  அண்ணாமலை ஐ பி எஸும் வனிதா விஜயகுமாரும்.
ஏன் இந்த இரண்டு பேரையும் ஒப்பீடுன்னு கேட்கிறீர்களா ? .பெரிசா ரீஸன் எதும் இல்லை .கடந்த பத்து நாட்களா இவர்கள் இருவரின் வீடியோ தான் மாறி மாறி கண்ல பட்டது .
இருவரும் ஓ பி சி , well brought up( வசதியான எஜுகேஷன் , கவனிப்பு ) பின் புலத்தில் இருந்து வந்தவர்கள் . ஒருவர் பெண் ,சினிமா நடிகை என்ற அடையாளம் கொண்டவர். இன்னொருவர் இந்திய அரசின் தகுதித் தேர்வில் பாஸ் செய்து அதிகாரத்தில் இருந்தவர்.
இருவர் வீடியோவும் மாறி மாறி பார்த்தப் போது என் கண்ல பட்ட விஷயங்களை வைத்து சகோதரர் அண்ணாமலை நிறைய இன்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உள்ளவரோ என்று தோன்றியது .
சரி அவர் அரசியல பார்த்து பய்ந்து இந்த கம்பேரிசனானு கேள்வி வரும் ..வரலாறு அறியாதவர்களுக்கு வேணா அவர் அரசியல் செய்வார்ன்னு தோணலாம் ..தமிழ் நாட்ல அரசியல் செய்ய அவர் தினம் மக்களோடு பழகுகிறவரா இருக்கனும்..மக்கள் பிரச்சனை பேசனும்...வலுவான அமைப்பும், கொள்கையும் இருக்கனும் . ஓரளவு இதுல எல்லாம் ஒத்து வர சீமானே 1% ஓட்டு தான் வாங்குறார் . இன்னும் வலுவான சித்தாந்தம் கொண்ட இயக்கம்லாம் தனித்து ஜெயிக்க முடியல ...

இதுக்கு முன்னாடி 2009 ல சரத்பாபுன்னு நினைக்கிறேன்..இப்படி தான் ஆரிய கூட்டம் அவர தூக்கி பிடிச்சுது .ஐ ஐ எம் ல டிகிரி ஹோல்டர், அம்மா இட்லி சுடற அளவு ஏழைத்தாயின் மகன், லஞ்ச லாவண்யமற்ற ஆச்சிய அமைக்க போறார்னு காக்க வந்த ரட்சகர் மாதிரி போஸ்லாம் குடுக்க வச்சாங்க . 2009 தென் சென்னை தேர்தல்ல சுயேட்சையா நின்றார் . இட்லி வடை இருக்கு தென் சென்னை யாருக்குன்னு பன்ச் டயலாக்லாம் ப்ளாக் எழுதி 100 சொச்ச ஓட்டு வாங்கிகாணாமலே போய்ட்டார் .
.தமிழக மக்கள் யாரை எப்ப கவிழ்ப்பார்கள்னு அவர்களுக்கே தெரியாது ...ரஜினியே நேரடியா பிரச்சாரம் செய்தாலும் ஆயிரம் ஓட்ட தாண்ட மாட்டார் ..கருணாஸ் ஜெயிச்சார், விஜயகாந்த் டெபாஸிட் இழந்தார், அன்புமணி மூன்றாம் இடம் தந்த ஊர் இது ..
அதோட உங்கள மாதிரி வெளி அரசியல வச்சு மட்டும் அரசியல் பேசறதில்ல .அல்ரெடி திமுக 200+ ஜெயிக்கும்னு உளவுத்துறை மற்றும் தனியார் ரிப்போர்ட்ல கைய பிசைஞ்சு காங்கிரஸ கழட்டி விடு, நாங்க கண்டுகல , ஜெகன் மாதிரி உன் நாடு உன் ஆட்சின்னு பாத்துக்கன்னு பி ஜே பிசைட்ல பேரம்லாம் ஆரம்பிச்சாச்சு . ஸ்டாலின் சைட்ல இருந்து எந்த பதிலும் இல்லன்றதால ஆபர் அப்டியே நிக்கிது ....அதனால இது அரசியல் பதிவு இல்லை .
எனக்கு மனிதர்கள கவனிப்பது பிடிக்கும் ..அப்படி கவனிச்சதில் தோன்றியதை பகிர்ந்துகலாமேன்னு இந்த பதிவு.
நியுஸ் 18 பேட்டில நொடிக்கு 100 சார் போட்ட அவர் பேட்டி பார்த்தேன் ... மரியாதை நிமித்தம் சார் சொல்வது எப்பவோ ஓரிரு முறை வரும் . இல்ல சார், அது சார், வந்து சார் , போயி சார்ன்னு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சார் போட்டு பேசினார்
ந்ல்லா யோசிச்சு சொல்ங்க ..போலிஸ் டிரைனிங் எடுத்து ,அதிகாரத்தை அனுபவித்தவர் சார், சார்ன்னு பேசுவாரா ? . நம்ம ஊர்ல தேவாரமோ, விஜயகுமாரோ, ஒரு எஸ் பி கூட தன் அதிகார கெத்தோட தான் இருப்பார் .ரிடையர்ட் ஆகிட்டாலும் அந்த கெத்து போய்டாது .
போலிஸ்ன்றது அப்படி ஒரு அதிகாரம். போலிஸ்னா கொம்பான்னு கேட்டதுக்கு தான் ரெண்டு உயிர் போனதுன்னு நமக்கு தெரியும் .
ஆக ஒரு டிரைண்ட் அதிகாரி கிட்ட இந்த சார் தொனி இயல்பு இல்லை.. பத்திரிக்கையாளர்னா புத்திசாலின்ற நம்பிக்கைல பேசி இருந்தாலும் அது தன் புத்திசாலித்தனம் குறித்த அவ நம்பிக்கை தான் .. சற்று உடலை குறிக்கி கொண்டு, நிமிர்ந்து பாக்காம , சார், சார்ன்றது அடிமை கலோனியல் மனனிலை தாண்டி ஒரு இன்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸின் வெளிபாடா தோணுச்சு ...
இதே வனிதா விஜயகுமார் பத்திரிக்கையாளரை சந்திக்கும் போது தெளிவா ,பதட்ட படாம , தொடர்ந்து வரும் கேள்விகளுக்கு குழப்பம் இல்லாம பதில் சொல்கிறார் ..ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டு இருக்கும் போதே குறுக்கிட்டு வரும் அடுத்த கேள்விக்கு உளறிலாம் கொட்டாம தெளிவா பதில் சொல்ற அளவு தன் பக்கம் தகவலோட ரெடி யா இருக்கார் ..சார், மோர்லாம் இல்லை ..பத்திரிக்கையாளரை பெரிய ஆள் அப்டின்ற ஓவர்ஹைப் இல்லாம நீயும் என்னை மாதிரி தான்ற அந்த தெளிவு அண்ணாமலை கிட்ட இல்லை .
இந்திய சிவில் சர்விஸ் தேர்வுக்கு தயாரானவர் எத்தனை வாசித்து தயார் ஆகி இருக்கனும்.. அவர் கிட்ட அவர் சார்ந்த துறை குறித்தே தப்பும் தவறுமான தகவல் தருகிறார் .
வனிதா தன் பிரச்சனை சார்ந்து தகவல்களை சரியா அறிந்து வைத்து இருக்கின்றார் . விவாகரத்து வழக்கு, சட்டம், காம்பன்சேஷன் , செயல்படும் முறை என்று எல்லாத் தகவலும் தெளிவா அறிந்து உள்ளார் ..அவர் வக்கிலுக்கு தெரிந்து இருந்தால் அதில் ஒரு லாஜிக் இருக்கு .ஆனா அவரே தேடி அறிந்து தெளிவா பேசுவது அவரின் தெளிந்த நிதானத்தை காட்டுகிறது .
கான்பிடன்ஸ், தன்னம்பிக்கை என்பது எப்பவும் தன்னை தன்னை விட குறைவான ஆட்களோடு மோத அனுமதிக்காது . நம்ம ஊர்ல ஆடு திருடின ,மாடு திருடின கேஸ்லாம் விசாரிக்க மிஞ்சி போனா கான்ஸ்டபிள் போவார் .
.ஒரு ஐ பி எஸ் அதிகார வர்க்கத்தோட மோதனும் . சரியோ தவறோ கிரண் பேடி இந்திரா கூட மோதி யதாக தான் புகழ் பெற்றார் , அந்த லஞ்சம் தவிர்த்து நெஞ்ச நிமிர்த்தின அதிகாரி க்ரானைட் கும்பலோட தான் மோதினார் ..அண்ணாமலை அப்படி தன்னை விட மேல உள்ள அதிகாரத்தோட மோதவில்லை . ..ஏழை விவசாயிகள அடிச்சு தர தரன்னு இழுத்திட்டு போறார் . அதுவா ஒரு ஐ பி எஸ் வேலை ...அதுக்கு கான்ஸ்டபிள் போதாதா ? ..தன் மேல நம்பிக்கை உள்ளவர் தன்னை விட பெரிய அதிகாரத்தோட மோதுவார் .
(..பெரியார் ஒற்றை ஆளா பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தோட தான் மோதினார் ( தனக்கு பிரச்சனை வந்த போது சிறுபான்மை சாதி மறுப்பு, சமத்துவம் பேசும் கொள்கையாளர்கள் தன்னை காப்பாத்த்லன்னு கூப்பாடு போடல, ஜாமின் தந்தாலும் திரும்ப போய் பேசினதையே தான் பேசுவேன்னு நின்றார் .அய்யோ திமுக காப்பாத்தலனு தன் ஆட்களையே குற்றம் சொல்ல வில்லை ...அந்த அளவு அவர் தன் மீது நம்பிக்க்கை வைத்து செயல்பட்டார் ) ..
அண்ணாமலை ரெட்டி சகோதரர்கள் கூடவோ, லேண்ட் மாபியா கூட்வோ மோதல, சாதாரண எளிய மக்களிடம் மோதி இருக்கார் .
இன்றய தேதில லஷ்மி ராம கிருஷ்ணனுக்கு பி ஜே பி செல்வாக்கு எத்தனை அதிகம்னு குழந்தைக்கு கூட தெரியும் . வனிதா அந்த வலுவான அதிகாரத்தோட மோதுகிறார் .நீ பெரிய ஆளா இருந்தா என்ன . என் கிட்ட தப்பு இல்லை .நான் ஏன் பயப்டனும் என்ற கான்பிடன்ஸ் அவர் கிட்ட அசாத்தியம்.
கல்வி அறிவு இல்லாத கிட்ஸ் மாதிரி வாட்ஸ் அப் தகவல் பேசுகிறார் அண்ணாமலை . தஞ்சாவூர் கோவில் கார்பன் டேட்டிங், சாதி வெள்ளைகாரன் கொண்டு வந்தான், நமது பாரம்பரியம் ஆன்மீகம்னு குழந்தை தனமா அரசியல் சொல்கிறார் ...மக்கள் பிரச்சனை என்னன்னு தெரியாதவர் அரசியலில் அரை நாள் கூட குப்பை கொட்ட முடியாது .
அவர்கிட்ட நேர்மை இல்லை.மோடிய பிடிக்கும்னு சொல்றார் .ஆனா பி ஜே பில சேராம ரஜினி கட்சில நிக்க விரும்பறார் .மோடி தன் கொள்கைகல வெளிப்படையா இருக்கார் .அவர் கொள்கை இந்துத்துவான்னா அதை வெளிப்படையா ஆதரிக்கும் பி ஜே பில இருக்கார் ..
ஆன்மீகம்னு கதை விடல..காங்கிரஸே ஒரு ஆன்மிக கட்சி தான் ராம் ராம்னு ராமரை கொண்டாடின காந்தியோட கட்சி ஆன்மிக கட்சி இல்லாம வேறு என்ன ?
காங்கிரஸ் மென்மையான இந்துத்துவா கட்சி தான்..அவர்கள் கொண்டு வந்த ஜீ எஸ் டி, நீட் , போன்ற திட்டங்களை தான் மோடி முன்னெடுக்கிறார் எனும் போது அவை ஒன்றும் 100% ஜன நாயகம் என்று அர்த்தமில்லை ..
பின் ஏன் மோடி காங்கிரஸ்ல சேரல ...காங்கிரஸ் கிட்ட இருந்த கொஞ்ச ஜன நாயத்தன்மை அவருக்கு பிடிக்கல ..ஜீ எஸ்டில இருந்த மாநில உரிமை, நீட்ல தரப்பட்ட மாநில விலக்கு போன்ற ஜன நாயகத்தனம் அவருக்கு ஏற்பில்ல .. ஆரியம் மட்டுமே வாழனும் என்ற நாஜிக் கொள்கை மோடிக்கு பிடித்தது .அதனால் அவர் தன் கட்சி பி ஜே பி என்பதில் தெளிவா இருந்தார் ...அவரை விரும்பும் அண்ணாமலைகிட்ட ஏன் அந்த தெளிவு இல்லை..
வனிதா தனக்கு எது தேவைன்றதுல தெளிவா இருக்கார் ..முதல் ரெண்டு டைவர்ஸ்லயும் காம்பன்சேஷன் கேக்கல ..தன் சுதந்திரம் முக்கியம் என்றே முடிவெடுத்துள்ளார் .
சினிமா நடிகைன்னா கூத்தாடி, அறிவுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை..
நடிகைக்கு என்ன தெரியும், படிச்சவர்ன்னா புத்திசாலி , க்ருப் தேர்வு எழுதுறவன் அறிவாளி, ரிசைன் செய்த அதிகாரின்னா நேர்மையாளர் என்ற அரத பழசான தத்துவங்களை உடைத்து எரிகிறார்கள் இருவரும்..
சுய மரியாதை , சுதந்திரத்துடன் வாழும் பெண்ணுக்கும் ..ஆரிய அடிமைதனத்தால் சுயம் இழந்த ஆணுக்குமான வித்தியாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக