புதன், 22 ஜூலை, 2020

இது பார்ப்பனீயத்துக்கு எதிரான போர்.. சவுக்கு சங்கர்

savukkuonline.com : பெரியார் தொடங்கிய ஆரிய / பார்ப்பனீயத்துக்கு எதிரான போரை மீண்டும் தமிழர்கள் கையிலெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மத்தியில் மோடியின் ஆட்சி இருந்தாலும் கூட, ஜெயலலிதாவோ, கருணாநிதியோ உயிரோடு இருந்த வரையில், பார்ப்பனீய சக்திகள் அடக்கியே வாசித்தன.   கருணாநிதி, தன் வாழ்நாளின் இறுதி வரையில் பார்ப்பனீய சதியை புரிந்தே வைத்திருந்தார்.  சமயம் கிடைக்கும்போதெல்லாம்பார்ப்பனீயத்தின்ஆபத்தை சுட்டிக்காட்ட கலைஞர் தவறியதேயில்லை.
‘ஆமாம் நான் ஒரு பாப்பாத்தி தான்’ என்று சொன்னாலும், பார்ப்பனர்கள் குருவாக வணங்குகிற ஜெயேந்திரனையும், விஜயேந்திரனையும் சிறையில் அடைத்தது ஜெயலலிதா தான் என்பதை நாம் மறுக்க முடியாது.
ஜெயலலிதா மீதும், கருணாநிதி மீதும் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கிறது.   ஆனால்,  இவர்கள் இருவருமே, , இந்துத்துவா அமைப்புகள் எத்தகைய தீயசக்திகள் என்பதை உணர்ந்தே இருந்தனர்.   
இதனால்தான் அவர்கள் தமிழகத்தில் இந்துத்துவ, மதவாதசக்திகளை காலூன்ற விடாமல் தொடர்ந்து தடுத்து வந்தனர். இருவரின் ஆட்சியின்கீழும் பணியாற்றிய ஒரு மூத்த உளவுத்துறை அதிகாரி,  சொன்னது குறிப்பிடப்படவேண்டியது. “வட இந்தியா போல தமிழ்நாடு ஒரு மதவாதபூமியாக மாறி விடக் கூடாது என்பதில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருமே மிக மிகக் கவனமாக இருந்தனர். இவ்விஷயத்தில் இருவருமே சமரசம் செய்துகொள்ளமாட்டார்கள்.  இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்து தீவிரவாதம் இரண்டுமே ஒன்றுக்கொன்று நீர் ஊற்றி வளர்ப்பவை என்ற புரிதல் அவர்கள் இருவருக்கும் இருந்தது.   அவர்கள் ஆட்சியில்உளவுத்துறைக்கு எந்த சிக்கலும் இருந்தது இல்லை. ஒரு சிறு விவகாரம் பின்னாளில்எப்படி பூதாகரமாக வளர்ந்து சிக்கலை உருவாக்கும் என்பதை எடுத்துரைத்தால், இருவருமே புரிந்து கொள்வார்கள்.” என்றார்.
இன்று தமிழகம் சந்திக்கும் சிக்கல், ஆளுமை இல்லாத தலைவர்களைப் பெற்றதே.  , சசிகலாவின் கால்களைத் தேடி, கண்களில் ஒற்றிக் கொண்டு முதல்வர் பதவியை அடைந்த நபரின் ஆளுமை எப்படி இருக்கும் ?   மக்கள் தலைவரா அவர் ?  தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு போட்டியிட்டு வென்றவரா அவர்?
இந்தியாவின் பிரதமர்கள் பலர் நமக்கு நினைவிருந்தாலும், குல்சாரிலால்நந்தா என்ற பிரதமர் இருந்தது எத்தனை பேருக்குத் தெரியும்?.  நேரு இறந்தபோது 13 நாட்கள் பிரதமராக இருந்தார்.   இரண்டாவது முறை லால்பகதூர் சாஸ்திரி இறந்தபோதுமீண்டும் 13 நாட்கள் என இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக இருந்தவர்தான் குல்சாரிலால்நந்தா.   நம் யாருக்காவது இவரை நினைவிருக்கிறதா?   இவருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பெரிய வேறுபாடு இல்லை.   இப்படிப்பட்ட நபர்களிடம், ஒரு வளர்ந்த மாநிலத்தின் தலைமை பொறுப்பு கிடைத்தால் மட்டும் ஆளுமை வந்து விடுமா என்ன ?


குல்சாரிலால் நந்தா
ஆளுமை உள்ள தலைவன், காலத்தை கடந்து சிந்திப்பான்.   தன்னை தலைவனாக கற்பனை செய்து கொள்பவன் “இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர்” என்று போஸ்டர் அடித்து அதைப் பார்த்து ரசித்தே அழிந்து போவான்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுமையும் இல்லை. தொலைநோக்குபார்வையும் இல்லை.   தன் சொந்தக் கட்சியில் ஒரு நிர்வாகியையோ, ஒரு ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ்அதிகாரியையோ கூட மாற்ற முடியாத ஒரு நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.    இவரால் தமிழகம் இன்று எதிர்நோக்கி வரும் ஆபத்துகளைஉள்வாங்கவும் முடியவில்லை.   அது குறித்து நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை.
இன்று தமிழகம் முன்னெப்போதும் இல்லாத பெறும் ஆபத்தை சந்தித்து வருகிறது.   அது பார்ப்பனீயத்தின் கொடும் ஆபத்து.  நூறு ஆண்டுகளாக அடக்கப்பட்டு இருந்த பார்ப்பனீயம் தன் கொடும் கரங்களை விரித்திருக்கிறது. இப்போது மத்தியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பகுத்தறிவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தீவிர முனைப்பில் இருக்கிறது.   அது எதிர்நோக்கி இருக்கும் களம் 2021 சட்டமன்றத் தேர்தல்.
தமிழகம் பல்வேறு சிக்கல்கபசுமாட்டைபாதுகாப்போம் என்று மோடி அறிவித்தால், இதை பயன்படுத்தி மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று இஸ்லாமியர்களை கூட்டமாக சேர்ந்து அடித்துக் கொலை செய்வது, சீன எதிர்ப்பு என்ற பெயரில் வடகிழக்குப் பகுதியை சேர்ந்தவர்களைஅடிப்பது, சாலையில் தொப்பி போட்டுக் கொண்டு வரும் இஸ்லாமியரை பிடித்து, அடித்து மொட்டை அடித்து ஜெய் ஶ்ரீராம் சொல்ல வைப்பது போன்ற எந்த செயல்களும்தமிழகத்தில்நடைபெறவில்லை. கோமியம் கொரொனாவைகுணப்படுத்தும் என்றால் வட இந்தியாவில் வரிசையில் நின்று குடிப்பார்கள்.  தமிழர்கள் இதை கேட்டாலேசிரிப்பார்கள்.
இது போன்ற மூடநம்பிக்கைகளையும், மதவெறிகருத்துக்களையும், வெகுஜனஊடகங்களில் பரப்ப வேண்டும் என்பதே வலதுசாரிகளின் திட்டம்.   ஆனால் இது வரையில் தமிழகத்தில்இத்தகைய கருத்துக்களைவெகுஜனஊடகங்களில் இவர்களால் புகுத்த முடியவில்லை.    அவர்களின் தொடர் முயற்சி தோல்வி அடைந்தேவந்துள்ளது. மோடி அறிமுகப்படுத்தும் 2000 நோட்டில்சிப் இருக்கிறது.  அதை வைத்து சேட்டிலைட் மூலம் கருப்புப்பணத்தை கண்டுபிடிக்கலாம் என்பதை வடஇந்தியாவின் பிரபல இந்தி சேனல், ப்ரைம்டைமில் விவாதம் நடத்தியது.   ஆனால் தமிழகத்திலோதொலைக்காட்சி சேனல்கள், ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையால் எப்படி கருப்புப் பணம் ஒழியும் என்றே விவாதம் நடத்தியது.
நான் முன்பே குறிப்பிட்டதை போல 2019 தேர்தலில் பிஜேபி மற்றும் கூட்டணி அடைந்த மாபெரும் தோல்விக்கு தமிழக ஊடகங்கள் ஒரு முக்கிய காரணம் என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது.    அதன் ஒரு பகுதியே, 2021 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்தை சேர்ந்த முக்கிய ஊடகவியாளர்கள் மீது தொடுக்கப்படும் தனிப்பட்ட தாக்குதல்.
இந்த தாக்குதலைத் தொடுப்பவர்கள், பார்ப்பனஅடிவருடிகளாகசுயலாபத்துக்காக செயல்படும் கைக்கூலிகள்.   இது போல, பார்ப்பனர் அல்லாத சாதியைசேர்ந்தவர்களை, அடியாள் வேலைக்கு பயன்படுத்துவதுஆர்.எஸ்.எஸ்அமைப்புக்கு புதிது அல்ல.   2002 குஜராத்கலவரத்தில், இந்தியாவிலேயே முதல் முறையாக பழங்குடியினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக  வன்முறையில்இறங்கினர் என்று அவுட்லுக் இதழ் அந்த சமயத்தில் கட்டுரை வெளியிட்டது.
இது போலவே, பார்ப்பனீயம் இன்று தமிழகத்தில் முக்கிய ஊடகவியலாளர்களுக்கு எதிராக, பார்ப்பனீயஅடிவருடிகளை இறக்கி விட்டுள்ளது.    அப்படிப்பட்ட அடியாட்களில்ஒருவர்தான்மாரிதாஸ்.    மாரிதாஸ் பற்றிய விரிவான தகவல்கள் ஏற்கனவே சவுக்கு தளத்தில்வெளியிடப்பட்டுள்ளது.
மாரிதாஸ் நியூஸ்18 தலைமை நிர்வாகி குணசேகரன் குறித்து வெளியிட்ட காணொலியின் விளைவாக, குணசேகரன் இனி செய்தி தொடர்பான விவகாரங்களை பார்க்க வேண்டாம் என்று நியூஸ் 18 நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக அறிகிறேன்.  நேற்று நியூஸ்18 விவாதத்தைகுணசேகரனுக்கு பதிலாக வேறு ஒரு பெண் நடத்தினார்.
அதில் அப்பாவுஎன்பவர் மட்டும் திமுக பிரதிநிதி. ஒருவர் பிஜேபி.  ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.  ஒருவர் அதிமுக.  ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.ஆதரவாளர்.  மருத்துவர் சுமந்த்சி. ராமன், தீவிர திமுக எதிர்ப்பாளர்.    நான்கு பேரும் சேர்ந்து ஒருவரை அடித்து துவைக்கும்விவாதத்தை நடத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் விருப்பம். இது போல ஒரு சார்பு விவாதங்களை தமிழ் ஊடகங்களில் நடத்த வேண்டும் என்பதே பார்ப்பனீயத்தின் திட்டம்.   இதற்கு நியூஸ்18 நிர்வாகம் பலியாகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
நியூஸ்7, நியூஸ்18தமிழ், புதிய தலைமுறை.  இதுவே இவர்களின் இலக்கு.   நேரடியாக இத்தொலைக்காட்சிகளின் பிரபல நெறியாளர்களை குறிவைத்து தாக்கி, நிர்வாகத்துக்கு அழுத்தம்  கொடுத்து, இவர்களை பணி நீக்கம் செய்து, மாலன், கோலாகல ஶ்ரீனிவாஸ், ரங்கராஜ்பாண்டே போன்ற தீவிர பார்ப்பனவெறியர்களைஇத்தொலைக்காட்சிகளில் பணியில் நியமிக்க வேண்டும் என்பதே இவர்களது  நோக்கம்.  அந்நோக்கத்தில் இவர்கள் வெற்றி பெறுவார்கள்என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.  பார்ப்பனர்கள் மக்கள் தொகையில் சிறு அளவு இருந்தாலும், இவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருக்கின்றனர்.   ஆதிக்கம் செலுத்துகின்றனர்.   இந்த அதிகாரத்தின் காரணமாகவே இவர்களால் இது போன்ற விவகாரங்களில் வெற்றி பெற முடிகிறது.
இந்த பத்திரிக்கையாளர்களில், குணசேகரன் மீது முதல் தாக்குதல் தொடுக்க காரணம் என்ன ?
ஜனவரி 2018ல் சென்னை ஐ.ஐ.டியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.    அந்த நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர், காஞ்சி மடத்தை சேர்ந்த ஜெயேந்திரன்.    நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகையில், ஜெயேந்திரன் மட்டும் எழுந்து நிற்கவில்லை.    இந்நிகழ்ச்சியை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்கள் பலரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு முன்பே கிளம்பிவிட, தந்தி டிவியை சேர்ந்த செய்தியாளர் எழில் என்பவர் மட்டும், நிகழ்ச்சியை இறுதி வரை படம் பிடித்துக் கொண்டிருந்தார். ஜெயேந்திரன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறபோது அதற்குரிய மரியாதை செலுத்தவில்லை என்பதை அவர் தான் படம்பிடிக்கிறார்.
எக்ஸ்க்ளூசீவாக கிடைத்த அந்த வீடியோவை தந்தி டிவியில் அப்போது எடிட்டராக இருந்த ரங்கராஜ்பாண்டேவிடம் எழில் கொடுக்க, அதை வெளியிடாததுமட்டுமில்லாமல், செய்தியாளர் எழிலை வேலையை விட்டேதுரத்தினார் பாண்டே.
அந்த வீடியோ  நியூஸ்18 தொலைக்காட்சியில் முதலில் வெளிவந்து பின்னர் நியூஸ்7, புதிய தலைமுறை ஆகிய தொலைக்காட்சிகளும் தொடர்ந்து அந்த வீடியோவை வெளியிட்டது. அது பெரும் சர்ச்சை ஆனது.   நியூஸ் 18 ‘காலத்தின் குரல்’ விவாத நிகழ்ச்சியில், குணசேகரன், இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தினார்.  எல்லாத் தரப்பிலிருந்தும் காஞ்சி மடத்தை நோக்கி கேள்வி எழுப்பப்பட, வேறு வழியில்லாமல் சமாளிப்பு விளக்கத்தை மடம் வெளியிட்டது.
இதுதான் பார்ப்பனர்களை உறுத்தியிருக்கிறது. அர்த்தமில்லாத சர்ச்சைகளை, பார்ப்பன அடிவருடி மாரிதாஸ்போன்றவர்களை பயன்படுத்தி பெரிது படுத்துவதன் காரணம், அன்று குணசேகரன் விஜயேந்திரன் குறித்து நடத்தியநிகழ்ச்சியே. எப்போதோ நடந்ததற்கு இப்போது குணசேகரன் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஆச்சரியம் எழலாம். அவர்கள் நிதானமாகவே ஒவ்வொன்றையும் நிகழ்த்துகிறார்கள். அதிகார ரீதியிலான அழுத்தம் தரப்பட்டதாலேயே  நியூஸ் 18 பணிந்து போயிருக்கிறது. எதையும் ஊடக சுதந்திரத்தோடு வெளிப்படுத்த முடியாத நிலை தான் இங்கு நிலவுகிறது என்பது புரிகிறதா? மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவால் குணசேகரன்  இருட்டடிக்கபப்டுகிறார் என்பதை விட அவரை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக மாரிதாஸ் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார் என்பது தான் உண்மை.
சமீப காலங்களில், இந்தியாவில் செய்தி ஊடகங்களின் முகங்கள் மாறி வருகின்றன. வெளிப்படையாக ஆளும்கட்சிக்கு ஜால்ரா போடும் ஊடகங்கள் எந்தத் தடையுமின்றி பெருத்த இலாபத்தோடு இயங்குகின்றன. இதற்கு மாற்றாய் எந்த பெரிய இலாபமும் இன்றி சில இணைய ஊடகங்கள் இயங்கி வருகின்றன. அரசாங்க விளம்பரங்கள், பெரு முதலாளிகளின் விளம்பரதார நிகழ்ச்சிகள் இவை இல்லாமல் வாசகர்களின் சந்தா கட்டணம் மற்றும் நன்கொடையை மட்டுமே நம்புகிற ஊடகங்கள் தான் தைரியமாக அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுகின்றன.   The Wire, Scroll, Caravan, NewsLaundry, HW NEWS, போன்ற ஊடகங்களை இதற்கு உதாரணங்களாக சொல்ல இயலும்.  இது போன்ற இணையதளங்களைதவிர்த்தால், வெகுஜனஊடகங்கள் அனைத்தும்யாராவது ஒரு பெருமுதலாளியின்கையில்தான் வட இந்தியாவை போல அல்லாமல், தென்னகத்தில் மக்கள் வெறுப்பின் அடிப்படையில் வாழவில்லை.  அவர்களுக்கு வெறுப்புணர்வு தெரியாது.    திராவிட தலைவர்களாலும், தமிழக மக்களின் அறிவாலும் மதவெறி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  “தள்ளி வைக்கப்பட்டுள்ளது” மட்டுமே.
கருணாநிதி, ஜெயலலிதா என்ற மாபெரும் ஆளுமைகள் மறந்த பிறகு, ஒரு பலவீனமான அரசு தமிழகத்தில் இருக்கிறது என்பதை பயன்படுத்தி, மதவாத சக்திகள் வீறு கொண்டு தமிழகத்தில் எழுகின்றன.   இந்து-முஸ்லீம் என்ற அரசியலை தமிழகத்தில் திணிக்க வட இந்திய சேனல்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.   ஆனால் தமிழகத்தில் இந்த முயற்சி துளியும் எடுபடவில்லை.
திராவிட கட்சிகள் தமிழகத்தில் இருப்பதனால் மட்டுமே, வலதுசாரி அரசியல் தமிழகத்தில் எடுபட முடியாமல் போகிறது என்பதை வலதுசாரி அமைப்புகள் புரிந்தே வைத்திருக்கின்றன.   திராவிட அரசியலை இழிவுபடுத்தி, அந்த அரசியல்தான் தமிழகத்தின் பிணிகளுக்கு காரணம் என்பதை நிறுவ வலதுசாரி சக்திகள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சுயமரியாதை கொள்கை, இட ஒதுக்கீடு, திராவிட அரசியல், இவை அனைத்தையும் மூர்க்கமாக எதிர்க்க வேண்டும் என்று வலதுசாரி சக்திகள் விரும்புகின்றன.
இதன் ஒரு பகுதியே பெரியார் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்”. என்கிறார் தமிழக அரசியல் நிலவரத்தை கூர்ந்து கவனித்துவரும் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்.
இந்துவாகஒன்றிணைவோம் என்று பிஜேபி சொல்கிறது. அப்படி சொல்கிறபோது  ‘ஒன்றிணைகிறோம், மாரியம்மன் திருவிழாவுக்குகருவாட்டுகுழம்போடு உணவு உண்ண வா’ என்று அழைக்க வேண்டும்.   ‘இந்துவாக ஒன்றிணைவோம் என்று பார்ப்பனர்கள்சொன்னால், எல்லை சாமிக்கு கிடா வெட்டுகிறோம் நீயும் வா’ என்று அழைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவனை கருவறைக்குள் அழைத்துப் போ என்று சொல்ல வேண்டும்.    தமிழில் அர்ச்சனை செய்வதற்கு எங்களோடு குரல் கொடு என்று பார்ப்பனர்களை நாம் அழைக்க வேண்டும்.
இது ஆரியத்துக்கும் / பார்ப்பனீயத்துக்கும், திராவிடத்துக்குமான போர்.  இந்த போரைமுன்னெடுப்பதில் சுயமரியாதை கொண்ட ஒவ்வொருவரும் பங்கெடுக்கத் தான் வேண்டும். இதில் திமுகவும் விதிவிலக்கல்ல. ஆனால் கட்சி இதனை விடுத்து உதயநிதி ஸ்டாலினை வளர்த்துவிடுவதில் தீவிரம் காட்டுகிறது.
திருமாவளவன் போன்றோர் இந்த போரில் முன்னிலைக்கு வரவேண்டியிருக்கிறது. இடதுசாரிகளுக்குதமிழகத்தில் பெரும் அளவுக்கு Stakes இல்லை.  அவர்களை இப்போரில் முன்னிற்க உத்வேகம் தேவைப்படுகிறது.

பார்ப்பன ஆதிக்கமும், இந்துத்துவ சக்திகளும் தமிழ்நாட்டின் பலமென்று இருக்கும் சிந்தனை மரபில் தங்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக நீதிக்கு எதிரான சதி இங்கு நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் நாம் ஒன்றிணைய வேண்டியது இந்துவாக மட்டுமல்ல சுயமரியாதை உள்ளவர்களாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக