ஞாயிறு, 19 ஜூலை, 2020

`எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது!' - மாணவியைக் கொலைசெய்த கோவை இளைஞர்

ரத்த வெள்ளம்ஐஸ்வர்யாரித்தீஸ்vikatan : குருபிரசாத் : கோவை பேரூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை,  இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, பேரூர் அருகே ஆறுமுகக் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரித்தீஷ் (24). இவர் அந்தப் பகுதியில் ஓர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் ஐஸ்வர்யா (17). ஐஸ்வர்யா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே, ரித்தீஸ்க்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது
ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு சக்திவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், படிக்கிற வயதில் காதல் எல்லாம் வேண்டாமென தன் மகளுக்கு சக்திவேல் அறிவுரை கூறியுள்ளார்.
இதனால், ரித்தீஸிடம் பேசுவதை ஐஸ்வர்யா நிறுத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஐஸ்வர்யா வீட்டுக்குச் சென்ற ரித்தீஷ் ``என்னிடம் ஏன் பேசவில்லை? மீண்டும் என்னை காதலி. நாம் திருமணம் செய்துகொள்ளலாம்" என வலியுறுத்தியுள்ளார். ஆனால், ``இந்தக் காதலில் எனக்கு விருப்பமில்லை'' என ஐஸ்வர்யா கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

அப்போது, ``எனக்குக் கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது" எனச் சொல்லிக்கொண்டே, கத்தியால் ஐஸ்வர்யாவின் வயிற்றில் 4 முறை அவர் குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த சக்திவேலையும், ``உன்னாலதான்டா காதல் தடையானது. நீ உயிரோட இருக்கக் கூடாது" என ரித்தீஸ் குத்தியுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ரித்தீஸ் தப்பியோடிவிட்டார். ஐஸ்வர்யா மற்றும் சக்திவேல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஜஸ்வர்யா நேற்று உயிரிழந்தார். சக்திவேலுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.





ரித்தீஸ்





ரித்தீஸ்
இந்நிலையில், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி, தப்பியோடிய ரித்தீஸை பேரூர் போலீஸார் தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய கொலை சம்பவத்தால் கோவையில் பதற்றம் நிலவுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக