புதன், 1 ஜூலை, 2020

மாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி! வீடியோ


மின்னம்பலம் : மாஸ்க் அணிந்துகொண்டு பேச வேண்டும் என்று கூறிய பெண் ஊழியரை ஆந்திர சுற்றுலாத் துறை துணை மேலாளர் கொடூரமாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சுற்றுலாத் துறை விடுதியில் துணை மேலாளராகப் பணியில் இருப்பவர் பாஸ்கர் ராவ். அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் உஷாராணியிடம் பேச வந்துள்ளார். அப்போது முகத்துக்குக் கவசம் அணிவதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அணியாமல் தன்னிடம் பேசக் கூடாது என்றும் உஷாராணி கூறியிருக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் ராவ், அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். உஷாராணி அலறி துடித்துக் கீழே விழுந்ததையும் பொருட்படுத்தாமல், அவரை உதைத்து துன்புறுத்திய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தர்க்கா மிட்டா காவல் நிலையத்தில், உஷாராணி அளித்த புகாரின்பேரில், துணை மேலாளர் பாஸ்கர் ராவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, ஆந்திர மாநில சுற்றுலாத் துறை உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக