திங்கள், 13 ஜூலை, 2020

கேரளா 30 கிலோ தங்க கடத்தல் .. பாஜகவின் மறைக்கப்படும் ஊழல் ...?

Muthu Krishnan : போகிற போக்கை பார்த்தால், கடைசியில் இந்த ஒரு கம்யூனிஸ்ட் தொகுதியும் கைநழுவி சங்கிகள்வசம் போயிடும்
போலயிருக்கே!
கீழே நண்பரின் கட்டுரையை பாருங்கள்...> கேரளாவின் காவி தங்கங்கள்... கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிடிப்பட்ட 30கிலோ தங்கம் தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள சந்தீப் நாயர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். என் மகன் சந்தீப் நாயர் பாஜக கட்சியின் உறுப்பினர் என அவரது தாயார் பேட்டியளித்துள்ளார்.
இதே வழக்கு தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளால் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிற சரக்கு கையாளும் நிறுவனத்தை நடத்தும் ஓ.ஜீ.ஹரி பாஜக கட்சியின் முக்கிய ஆதரவாளர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் தொடர்புடையவர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பி.எஸ். சரித் பாஜக தலைவர் குமனம் ராஜசேகரனை கட்டித்தழுவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
முதலில் தங்கம் இருந்தது ஒரு ராஜதந்திர சரக்கு பெட்டகம் என்றார்கள், அப்படித்தான் செய்தியே பரவியது, இப்பொழுது இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சரும் கேரளாவின் முக்கிய பாஜக தலைவருமான வி.முரளீதரன் அவர்கள் இந்த பெட்டகம் ராஜதந்திர பெட்டகம் அல்ல என்று பேட்டியளித்துள்ளார்.

இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷிற்கு ஆதரவாக வாதாட ஒரு வழக்கறிஞர் ஆஜராகியுள்ளார், அவர் எர்னாகுளம் மாவட்ட Hindu Economic Forum அமைப்பின் தலைவர். ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் நேரடியாக அவர்களே குற்றம் சாட்டிய குற்றவாளிக்கு ஆஜராகிறார் என்றால் நீங்களே இது என்ன விவகாரம் என்று அறிந்து கொள்ளலாம்.
இந்த வழக்கு அவசர அவசரமாக மத்திய அரசின் NIA விற்கு "ஏன்" மாற்றப்பட்டது என்பதை நீங்கள் இந்நேரம் அறிந்திருப்பீர்கள்.
பிரதமர் மோடி உடன் தலையிட்டு தங்கம் கடத்தல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் துணிவுடன் கடிதம் எழுதியதன் பின்னனி இப்பொழுதாகவது புரிகிறதா???
Thanks: Muthu Krishnan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக