வியாழன், 30 ஜூலை, 2020

ராமர ஜென்ம பூமி தீட்சிதர், பணியிலிருக்கும் 16 காவலர்களுக்கு கொரோனா!

tamil.indianexpress.com : ஆகஸ்ட் 5ம் தேதி அன்று நரேந்திர மோடி,
உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை புரிய உள்ளார். அங்கு புதிதாக கோவில் கட்டப்பட இருக்கும் நிலையில் அதற்கான பூஜைகள் 5ம் தேதி நடைபெற உள்ளது.
அன்று காலை 11:30 மணிக்கு ஆரம்பித்து 12:30 மணி வரைக்கும் பூஜைகள் நடைபெறும்.  இந்நிலையில் அங்கு பூஜை நடத்த இருக்கும் தீட்சிதர் குழுவில் ஒரு நபருக்கும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த 16 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 
5ம் தேதி நடைபெற இருக்கும் பூமி பூஜையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இருக்கும் தடைகளை கணக்கில் கொண்டு, 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மடங்களிலும், கோவில்களிலும் அன்று சிறப்பு பூஜைகள் நடத்தவும் ராமர் கோவில் அறக்கட்டளை கேட்டுக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக