ஞாயிறு, 19 ஜூலை, 2020

பறிபோன 11927 மருத்துவ படிப்பு வாய்ப்புக்கள் .. கந்தசஷ்டி குத்தாட்டத்தில் பறிபோகும் இட ஒதுக்கீடு .

A Prabhakar TheKa : எனக்கு என்ன பெரிய வியப்புன்னா, எப்பொழுதெல்லாம் மிக முக்கியமான சமூக நீதி சார்ந்த தீர்ப்புகள் அல்லது பிரச்சினைகள் சமூகத்தில் எழுகிறதோ அப்பொழுதெல்லாம், பைசாவிற்கு பெறாத மத நம்பிக்கை, கடவுளை காப்பாத்தணுங்கிற ஜல்லியடிகளைக் கொண்டு இத்தனை பெரிய கூட்டத்தை திசை திருப்பி விட முடிகிறதே அதெப்படி என்பதுதான். அப்படிப்பார்த்தா நாம இன்னும் கற்கால மனித மூளை கட்டமைப்பில இருந்து நம்மை வளர்த்து எடுத்துக்கவே  இல்லையா?
கீழே உள்ள ஓர் அட்டவணையைப் பாருங்க...   மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி வைத்திருக்கோம்,
இருந்தும் கண்ணிற்கு முன்னாடியே உருவிகிட்டு இருக்கானுங்க.
 நான்கு ஆண்டுகளில் 11, 207 இடங்களை பிற பிற்படுத்தப் பட்ட (BC + OBC) இட ஒதுக்கீட்டில் படிச்சிருக்க வேண்டியவங்க இழந்திருக்காங்க.
இதனுடைய தாக்கம் இன்னும் ஒரு பத்தாண்டுகளில் தெரிய வரும். அனுபவிக்கும் போது பெரும் கொடுமையாக இருக்கும். நாமல்லாம் எப்போ முழிச்சிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக