வியாழன், 11 ஜூன், 2020

பணிய மொழி தமிழ் சொற்களஞ்சியம் தொகுப்பு.. வயநாடு, எரநாடு, கள்ளிக்கோட்டை, கோட்டயம்

Murugesan Maruthachalam : பணிய மொழி தமிழ் சொற்களஞ்சியம் தொகுப்பு பணியர்:- இவர்கள் கறுத்த உருவமும் அகன்ற மூக்கும் சுருண்ட மயிரும் உள்ள சாதியார். இவர்கள் வயநாடு, எரநாடு, கள்ளிக்கோட்டை, கோட்டயம் முதலிய காபித் தோட்டங்களில் வேலை செய்து அடிமைகளாக உள்ள சாதியார். இவர்கள் ஆப்பிக்காவிலிருந்து இங்கு வந்து குடிபுகுந்தவராகக் கூறப்படுகின்றனர். இவர்களின் பெண்களும் கிழங்கு முதலிய தோண்டித் தின்று வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் நம்பிக்கையுள்ள வேலையாட்கள். (தர்ஸ்டன்)
- அபிதான சிந்தாமணி பதிவு பக்கம் 1235.< கத்துக்காரன் - தபால்காரர்,
பைசெபைங்குத்தாளு - நடத்துனர்,
படிபலிக்குஞ்ஞாளு - சுங்கச்சாவடி அதிகாரி,
பண்டி ஓட்டுத்தாளு - ஓட்டுனர்,
அடிச்சுபாராளி - தூய்மை பணியாள்,
ஆளு - ஜனம்,
ஏமக்காற - காமுகன், கமக்காரன் (ம).

ஏமக்காரத்தி - காமுகி, கமக்காரத்தி(ம).
ஒன்னரகண்ணெ - கோங்கண்ணன் ( ம), ஒன்னரைக் கண்ணன்.
இளாபுள்ளெ - இளைய புள்ளை/ குட்டி.
கசாவெரு - ஆதிவாசி,
கண்ணபொட்டாத்தி - குருடி,
நொணயெ - நுணயன்(ம), பொய்யன்,
கனஏச்சாளி - சுமை தூக்குவோன்,
குணாக்காறெ - நல்லவன், குணக்காரன்.
கோச்சரகண்ணெ - கோங்கண்ணன்.
செப்புடபாறெ - குடவயிரன், பானை வயிரன்.
திலெ (தலை) முறிக்காளி - முடி திருத்துபவர்,
நேர - சூரியன்.
பாவெகாறெ - ஆனை பாப்பான்(ம), யானைப் பாகன்.
புள்ளெ - குட்டி.
பாறுகாறெத்தி - கர்ப்பிணி.
மூக்கடெபெச்சுளபுள்ளெ - மூக்கு சப்பை புள்ளை.
அப்பெலி - முக்கனெலி(ம), மூஞ்செலி.
ஆமெ - ஆமை.
காட்டிபோத்து - காட்டுபோத்து(ம), காட்டெருமை.
காட்டுமுயாலு - காட்டுமுயல்.
காட்டுபஞ்சி - காட்டு பன்றி.
காளிச்சி - பிடியானை(ம), பெண் யானை.
குராங்கு - குரங்கு.
குரெ பஞ்சி - குரன் பன்னி(ம), பெண் பன்றி.
கொடிச்சி நாயி - பெண் பட்டி/ நாய்.
கொடியெநாயி - ஆண் பட்டி/ நாய்.
தாடிபெச்சநெரி - சிங்கம் (தாடி வைத்து நரி).
பஞ்சி - பன்றி.
பணிச்சிநாயி - பெண் நாய்.
பணியெநாயி - ஆண் நாய்.
பயு - பசு.
புள்ளிநெரி - குறுநரி(ம), குள்ளநரி.
போக்களெ - காட்டுப் பூச்ச/பூனை.
ஆவிலு - கடவாதில்(ம), வௌவால்.
கம்பியெ - மைனா.
காறாளெபக்கி - காறுகாரன்(ம), காறு - மேகம்.
காறாளேபக்கி - மயில்?
குமெ - கூமன்(ம), கூகை, ஆந்தை.
குரிபக்கிச்சி - குருவி.
குளாகோயி - குளகோழி(ம), நீர் நிலைகளில் குளம் குட்டைகளில் வாழும் கோழி வகை குளகோழி - water fowl - நீர்கோழி?.
பக்கிச்சிபுள்ளெ - பறவைக் குஞ்சு.
பக்கிமறி - பக்சி புஞ்சு.
பக்கிச்சி - பக்‌ஷி - பறவை.
பக்கிபுடியெ - பிராபிடியன்(ம), வல்லூறு, இராசாளி.
பச்செபக்கிச்சி - தத்த(ம), பச்சைக்கிளி.
பீப்பெ - மரங்கொத்தி.
புள்பக்கி - புள்ளு(ம), வல்லூறு, இராசாளி.
புறாவு - புறா.
பல்யபக்கிச்சி - ஒட்டகபக்‌ஷி(ம), நெருப்புக்கோழி/தீக்கோழி, Ostrich.
ஆமறபோக்கெ - பெரிய தவளை.
இத்துளு - கல்லும்மகாய(ம), mussel, oyster.
இரே - கிருமி.
உறுளி - சிலந்தி.
கப்பெ உறும்பு - நெய் எறும்பு.
சிலாண்டி - கம்பிளி புழு.
தீயாமினிக்கெ - மின்மினி பூச்சி.
தெல்லு - தெள்ளு பூச்சி. செல் பூச்சி.
நீருபலியெ உறுப்பு ( நீர்வழியும் எறும்பு) - கட்டெறும்பு (கட்டெறும்பு நசுக்கிப் பார்த்தால் நீர் வரும்) பழங்குடிகளின் அறிவியல் அறிவு.
பச்சபோக்கெ - பச்சைத் தவளை.
பச்செமுட்டிலு - பச்சத்துள்ளன்(ம), வெட்டுக்கிளி.
பாச்செ/குருவெ - பாற்ற/கூற(ம), கரப்பான் பூச்சி.
பாச்செ/ புறுக்கெ - கொதுகு(ம), கொசு.
போளெகண்டி உறுப்பு - சிவப்பு எறும்பு.
முண்டெ போத்து - குழியானை(ம), புழுதி மண்ணில் புனல் போல் துளையிட்டு வாழும் சிறு பூச்சி.
முளிபஞ்சி - வெட்டுக்கிளி.
ஒளெ - நீர் கோழி.
கச்செலெ பாம்பு - பச்சைப் பாம்பு.
கெட்டுமுண்டிலு - வளையரப்பன் பாம்பு.
கோணியபுரயி - சேனைத்தண்டன்(ம) பாம்பு. Elephant yam.
பநெதேளு - பூரான்.
மண்டிலு - அணலி (ம), கட்டுவிரியன் பாம்பு.
முறுக்கெ - நாகப்பாம்பு.
சேரெ - சாரப்பாம்பு.
அத்துதட்டெ - இஞ்ச (ம), அரப்பு மரம்.
அயினி - ஆஞ்ஞிலி (ம), அயனிப்பலா மரம்.
ஆமுளுக்கு - ஆமணக்கு.
ஈச்சி பனெ - பேரிச்சம் மரம். ஈச்சமரம்.
உஞ்ஞெமர - ஊஞ்சமரம், இலவம் பஞ்சு மரம், பஞ்ஞிமரம் (ம).
உறாக்கமுள்ளு - தொட்டாவாடி (ம), தொட்டா சுருங்கி.
உறுமாகாயி - சேரய்க்க (ம), கொய்யாப்பழம்.
ஏச்சிருமர - பனைமரம், தாளிமரம் (ம).
ஒத்த - ஓட (ம), நாணல்.
கக்காளி - தக்காளி (ஆப்பிள் தக்காளிக்கு கள்ளுத்தக்காளி என்று சொல்வதுண்டு).
கஞ்ஞிநாரங்ஙமர - செறுநாரகம் (ம), எழும்மிச்சம் மரம்.
காச்சாடி - காற்றாடி (Casuarinas tree).
காஞ்சிர - காஞ்ஞிமரம் (ம), எட்டி மரம்.
காயலு - முளெ (ம), மூங்கில்.
காவாத்துபள்ளி - காச்சில்வள்ளி (ம), காய்ச்சில் கிழங்கு.
குன்ன - கொன்னமரம், இதழி.
கும்முளு - கும்பிள்மரம்(ம), காளான்.
கும்மெ - கூணு (ம), காளான்.
குருமுளாவு பள்ளி - குருமிளகு வள்ளி/ செடி.
குவளெ - பாடத்தாளி (ம) மரம்.
கொங்ஙெபுளிமர - புளியமரம்.
கொடபனெ - குடை பனை.
சண்ணணமர - சந்தனமரம்.
சாயெசொப்பு - தேயிலை.
சீரமுளாவு - காந்தாரி (ம), மிளகாய்.
நிந்திரிபாயெ - நேந்திரன் வாழை.
நேவிலு - நாவல்.
பஞ்சாரக்காய்மர - சாம்பக்காய்.
பந்தருபயினெ - காட்டுத்தக்காளி.
பப்பாயி - பப்பாளி, கறுமூஸ் (ம).
பாம்புசேனெ - காட்டுசேனை.
பாலுகியாங்குவள்ளி - சக்கரைவள்ளி கிழங்கு.
பிலாவு - பலா மரம்.
பூஞ்ச/பூஞ்சாவு - பீர்க்கங்காய்.
பூத்தாளி - ஆம்பல்.
பயினணெ - கத்திரிக்காய், வழுதினகாய் (ம).
பூட்டிமர - ஈட்டி மரம்.
மதிரநாரங்ஙெ மர - சீனி நாரங்காய் மரம்.
மாங்குளு - பாயல் (ம), நீர்ப்பாசி.
முடிச்சி/குச்சி காடு - புதர் காடு, குற்றிக்காடு.
இறெச்சி - இறைச்சி.
உறுளகியாங்கு - உருளை கிழங்கு.
கட்டெரி - மூங்கில் அரிசி.
கண்டல் சக்க - பலாப்பிஞ்சு, இடிசக்க (ம).
காவாத்து கியங்கு - காய்ச்சில் கிழங்கு.
குருமுளாவு - குருமிளகு, நல்ல மிளகு.
கொங்ஙப்புளி - கொங்கப்புளி, வாளன் புளி (ம).
சாளெ - மத்தி மீன்.
சிறாவு - சுறா.
சீருக - சீரகம்.
செம்பறபி(வி)த்து - மல்லி.
நுச்சு - குருணை அரிசி, நுச்சரிசி, பொடியரி(ம).
பஞ்சபில்லு - கேழ்வரகு, முந்தாரி (ம).
போண்டெ - பலாக்கொட்டை, சக்ககூரு (ம)
பொள்ளுள்ளி - வெள்ளை வெங்காயம்.
மஞ்ச - மஞ்சள்.
மரக்கியாங்கு/ பூளெ - மரவள்ளிக்கிழங்கு, கப்பக்கிழங்கு(ம).
மோணி - வாழைப்பூ, வாழைக்கூம்பு(ம).
அண்டெலு - பரண், அட்டாலி.
அத்தாறுபாய் - அத்து அறுவாய், பரம்பு.
உலாக்கெ - உலக்கை.
உறுளு - உறுளை, கப்பி, pulley.
ஒலெ - அடுப்பு, ஒலை அடுப்பு, ஓவிலி அடுப்பு.
கயிலிநெதாம்பு - அகப்பை, கரண்டி, தவிக்கண (ம), கை நெதாம்பில் எடுத்துப்போடு (கொங்கு வழக்கு).
கறங்ஙை - க(உ)றங்கை, தொட்டில்.
சிராயி - சிரவை, தேங்காய் துருவி.
தஞ்சி - பை (தஞ்சம் புகுமிடம் தஞ்சி).
தாணி - இரும்பு பாத்திரம்.
தூசி - ஊசி.
ஞெக்குபு(வி)ளாக்கு - டார்ச்லைட், ஞெக்கி தள்ளுதல், அழுத்தி தள்ளுதல் என்ற பொருளில் ஞெக்கிவிளக்கு.
நெய்த்துகட்டிலு - கயிற்றுக்கட்டில், சூரி கட்டில், கயிற்றில் நெசவு நெய்த கட்டில் நெய்து கட்டில்.
பொட்டி - பெட்டி.
பச்சி - மண்பாண்டம்.
படிபு(வி)ளாக்கு - வடி (குழல்) விளக்கு.
ப(வ)ண்டி பு(வி)ளாக்கு - வண்டி விளக்கு, லாந்தல் விளக்கு.
முட்டெபுளாக்கு - முட்டை விளக்கு, குண்டு பல்ப்.
மோருகடயிஞ்ச கோலு - கடகோல்(ம), மத்து.
அருவெ - அரிவாள்.
இடுமுட்டி - சுத்தியல், இடிக்க பயன்படும் முட்டி இடுமுட்டி, சம்மட்டி.
இராங்கோலு - அரம்.
ஈரிச்சவாள் - அறுப்பு வாள், ரம்பம்.
நேங்ஙலு - நேஞ்ஞில் (ம), ஏர் கலப்பையின் பிடி நேஞ்சில்.
நொக -நுகம்.
கச்செரி - காவல் நிலையம்.
கச்செரிகூடு - சிறை கூண்டு.
கத்தாபீசு - அஞ்சல் அலுவலகம்.
கத்து - கடிதம்.
பணபூடியெ - வங்கி. (பணத்தை பூட்டியை).
குப்பெய - சட்டை.
சேலெ - சேலை.
திலெமுண்டு - தலைமுண்டு (உருமாலை), தட்டம் (ம).
முலெகுப்பெய - ஜாக்கெட்.
உறுட்டெ - உறுட்டை (ரோடு ரோலர்).
காளபண்டி/ முரிபண்டி - காளை/ முறி வண்டி.
சுவாந்தபச்சு - பொது (அரசு) பேருந்து.
தீபண்டி - தீவண்டி, தீயணைப்பு வண்டி.
பாண்டி/ தெப்ப - சங்காடம், தெப்பை, ferry, raft.
பொட்டெபண்டி - மோட்டார் வண்டி.
பச்சினெபுள்ளெ - சிற்றுந்து, வேன்.
பஞ்சல - வஞ்சலை, பல்லக்கு.
பீமான - விமானம்.
மூன்னுசக்கரபண்டி - மூன்று சக்கர வண்டி, ஆட்டோ.
ஈச்செபக - ஈச்சம் பழம்.
உண்டெ - உருண்டை.
ஓமப்பொடி - மிக்சர்.
கஞ்ஞிநாரங்ங - எழுமிச்சம்பழம்.
பயாங்கஞ்ஞி - பழங்கஞ்சி.
பலபிக்கோத்தி - பிசுக்கோத்து.
பாயச - பாயசம்.
புட்டு - புட்டு.
பொள்ளப்ப - வெள்ளை அப்பம்.
மொட்டெ - முட்டை.
அரெகல்லெ - அரைஞாண்.
அரெபட்டெ - அரைப்பட்டை, பெல்ட்.
ஓலெ - ஓலை, கம்மல்.
காலுசங்கலெ - கால் சங்கிலி, கொழுசு, பாதசரம்.
சிலாம்பு - சிலம்பு.
திலெசவிரி - தலை சவுரி, வார்முடி (ம).
திலெபூவு - தலை பூ, பூ ஸ்லைடு (ம).
மூப்பொட்டி - மூக்குத்தி.
மாலெ - மாலை.
முடிச்சுளெ - முடிச்சுளை, மாட்டல்.
அப்பெபிரல் - பெருவிரல், தள்ளுவிரல்(ம).
அருவு - அளகம், பெண்கள் தலைமுடி.
ஏய்ரு - நகம்.
ஓம - முடி, ரோமம்.
கய்குளாக்கி - கைக்குழ (ம), கைக்குழை (கைவிளக்கு), மணிக்கட்டு, கணுக்கை.
காது - காது, செவி.
குஞ்சி - காது சவ்வு.
சாணெதிலெ/களாறெ - சொட்டை தலை. கஷண்டி (ம).
சிரி - உதடு, சுண்டு (ம).
தாகெக்குளசிரி - தாழேயுள்ள சிரி, கீழ் உதடு.
திலெ - முடி.
பீரிய - பூரிகம் (ம), புருவம்.
பீலியெ - கண் பூளை.
மடாம்பு - மடம்பு (ம), மழுங்கிய பகுதி.
முட்டுதிராட்டெ - முட்டுதிரட்டை, மூட்டுக்கிண்ணம். முட்டுசிரட்ட (ம). தேங்காய் தொட்டி சிரட்டை. சிரட்டை கிண்ணம் போல் உள்ளதால் தமிழில் சிரட்டை கிண்ணம் ஆனது.
ஆனெபாண்டு - பாண்டு (நோய்), ஆனெ (பெரிய); பெரிய நோய்.
கண்ணுப(வ)ருத்த - கண்வலி.
கண்ணுமொட்டெ - பொட்டைக்கண். போளக்குரு(ம).
குட்டரோகம் - குட்டம், குஷ்டம்.
குருப்பு/ பசூரி - அம்மை, வசூரி (ம).
கொக்கெசும - ஆழ்ந்த இருமல், கக்குவான்.
சுமெரோக - காசநோய்.
திலெசுணாங்கு - பொடுகு, தாரன்(ம).
திலெநோவு - தலைவலி.
தூறேலு - தூறல் (ம), வயிற்றுப்போக்கு.
பல்லுகடச்சிலு - பல்கொடச்சல்.
பள்ளெகடி - வயிறு வலி.
பாளிச்ச அடிக்கிஞ்சொ - எரிச்சல், தீப்புண்.
போளுரி - தேமல், சொறி, சிரங்கு.
அலாப்பு - தலதலன்னு கொதித்தல்.
அலாம்பு - குழப்பம்.
இட்ட - இட்டம், விருப்பம்.
கட்டகால - கெட்டகாலம், கஷ்ட காலம்.
குத- (குதை), சுகம்.
தங்கட - சங்கடம், தங்கடம்
தந்தோச - சந்தோசம், தந்தோசம்.
தமாசி - தமாசு.
துருத - துரிதம்.
நட்ட - நட்டம் ( நொட்டை சொல்லுதல் - குறை சொல்லுதல்).
அஞ்சு - ஐந்து.
இராண்டஞ்சு - இரண்டஞ்சு.
இராண்டுநூறு - இரண்டு நூறு.
இராண்டு பத்து - இரண்டு பத்து.
எவ்வது - எழுபது.
எட்டுநூறு - எண்ணூறு.
ஒஞ்சு - ஒன்று.
அங்குடுக்கு - அப்புறம், மறுபுறம், மறுபக்கம்.
அயாவுளு - சந்தனமுண்டு (ம), சந்தனவேட்டி.
ஆணிகல்லு - ஆலிப்பழம் (ம), ஆலங்கட்டி.
ஆண்டுதிவச - ஆண்டுதிவசம்.
ஆபி - ஆவி.
இங்குடுக்கு - இப்புறம், இந்தப்புறம்.
இடேலி - நடுவில், இடையில்.
இன்னாளு - முன்னாள்.
இன்னும் - இனியும், மறுபடியும், மீண்டும்.
ஈறுகோலு - ஈறுகோலி, ஈர்க்கிலி (ம).
உருக்கு - மூர்ச்சை,.
ஊருந்து - இழஞ்ஞு (ம), ஊர்ந்து.
உச்செமுறுக்க - நடு உச்சி.
உஞ்ஞெ - உஞ்சை மர பஞ்சு.
உதறிச்சு - உதறல், குதறல்.
உருவ - உருவம், பிம்பம் (ம).
எம்பாடு - குறெ (ம), தாராளம், அல்பம்.
கடவு - கதவு, கடவு.
கடிஞ்சுளு - கடிஞ்ஞுல் (ம), கடுஞ்சுள் - தலைப்பேறு.
கனேட்டெ - தணுக்கட்டெ (ம),
கவுரிமண - வியர்வை நாற்றம், கௌவுச்சி நாற்றம்.
கறிமுதேலு - கறிமசால்.
காஞ்ஞெலுகாறெ - படே ஆள், மிகைப்படுத்தி கூறுபவன்.
குயேலுபொள்ள - குழாய் நீர்.
கூச்ச - கூச்சல், ஓசை.
கொம்புதாலி - இறுக்கு கால் (ம), Spanner.
கோரெ - - கோரைப்பல், தெற்றுப்பல்.
சாலயுள - சாலப்பொருத்தம் என்றால் அதிகப்பொருத்தம் என்ற பொருளில், அதிகமுண்டு (ம).
சாலுக்கு - சாலாக்கு, திமிர், நிரக்கு (ம) - விலைப்பட்டியல்.
சுவாந்த்திலெ - செந்தலை, செம்பட்டைத்தலை.
சொல்லெ - சொல்லை, தோட்டி.
நாயிகோர்ணெ - நாய் குரணை.
நேர உதிச்ச - சூர்ய உதயம்.
நேரிச்ச - நேர்ச்ச.
நேரெ - நேருக்கு நேராக.
நேறாய்செ - ஞாயிற்றுக் கிழமை.
நோக்கெலுகுறவு - நோட்டக்குறைவு.
பச்சிபோய - ஒட்டிப்போயிள்ள.
படிபோண்டு - கதவு நெலவு, சன்னல் சட்டம், முகத்துவாரம், அழி(ம).
பந்தெரு - பந்தல்.
பயாகால - பழங்காலம், பண்டு காலம் (ம).
பள்ளெ - பள்ளம், செரிவு (ம).
புள்ளெ - குட்டி (ம), புள்ளை, பிள்ளை.
பறெயிட்டு - தட்டுட்டு, அலமாறித்தட்டு (Shelf).
பிதேப்பு - புதப்பு (ம), போர்வை.
புதநாய்செ - புதன் கிழமை.
புள்ள ஆயிந்தாக்கு - இளமை, செறுப்பத்தில் (ம).
பயிச்சபணி - உச்சி கழிஞ்சு செய்யும் பணி, மிச்சம் வச்சப்பணி.
முச்சியுள - கூம்பிப்போயிள்ள.
*** (ம) - மலையாளம்.
உதவி:- பணியர் மொழி - மலையாளம் நிகண்டு.
*** (ம) - மலையாளம்.
உதவி:- பணியர் மொழி - மலையாளம் நிகண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக