வெள்ளி, 26 ஜூன், 2020

இன்று ம பொ சிவஞானம் பிறந்த நாள் . பலரும் அறியாத செய்திகள்


 Elengovan K Dev இவர் காங்கிரஸில் இருந்தபோது பிராமணர் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.
 நீதிக்கட்சியை எதிர்பதே குறிக்கோளாக கொண்டவர்
காங்.கட்சி போட்டியிடாதபோதும் அதன் சார்பாக சுதந்திரா கட்சி போட்டியிட்டது .
அந்த தேர்தலில் ஆட்சிஅதிகாரத்திற்கு வரக்கூடாது என்ற நிலைப்பாட்டால் நீதிக்கட்சி வரவிடக்கூடாது என்பதற்காக சுயேட்சை வேட்பாளர் சுப்பராயனை முதல்வராக்க துடித்தவர்
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காலையில் கலந்து கொண்டு மாலையில் விலகி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்தவர் இந்தி போராட்டம் காங் .எதிர்ப்பு என்று விளக்கம் அளித்தவர்
1929 ல் சைமன் கமிசனில் இந்தியர் எவரும் இல்லை என்று சைமன் கமிசனை காந்தி புறக்கணித்தபோது பிராமணருடன் சேர்ந்து அறிக்கை அளிக்க தயாரானவர் மபொசி
1946 ல் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் இவருக்கு வழங்கபட்ட இடம் நரசிம்மராவ்க்கு ஒதுக்கபட்டதால் அவர் தெலுங்கர் என்ற பிரச்சாரத்தை தொடங்கியவர் மபொசி

1949 ல் காங். இருந்துகொண்டே தமிழரசுக்கழகத்தை ஆரம்பித்தவர்
1952 ல் இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டத்தை பெரியார் முன்னெடுத்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி பலகைகளை சுத்தம்பண்ணி இந்தி எழுத்துகளை தமிழரசுகழகம் தெரியவைக்கும் என்றவர் மபொசி

நாகலாந்தில் ஆங்கில ஆட்சிமொழியாக்க கொண்டுவந்த தீர்மானத்தை பிரிவினைவாதம் என்று எதிர்த்தவர் மபொசி
ராஜாசியின் குலக்கல்வியை ஆதரித்தவர் மபொசி

மாநில பிரிவினையின் போது நடந்த போராட்டங்களையும் போராடியவர்களையும் மறைத்து புறம்கூறி தான் மட்டுமே போராடிபெற்றதாக கதை எழுதியவர் மபொசி

1967 ல் திமுகவுடன் ராஜாஜி சேர்ந்தபோது தமிழரசுகழகமும் கூட்டணியில் இடம்பெற்றது மபொசி அண்ணாவிடம் மந்திரி பதவிகேட்க விடுதலை நாளிதழில் மபொசிக்கு மந்திரியா? என்ற பெரியாரின் கட்டுரையை பார்த்து பெரியாரை சந்தித்துவிட்டு வரச்சொன்னார் அண்ணா

அண்ணா மறைவிற்கு பின் கலைஞரின் ரசிகனாய் பின் எம்ஜிஆரின் ஆதரவாளராகி மேல்சபை பதவி வாங்கியவர் மபொசி
அன்று நாளிதழ்களில் மபொசி இருக்கையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு அண்ணாவின் தம்பி வந்திருக்கிறேன் ஏதாவது பதவி கொடுங்க என்ற கார்டூன் பிரபலம்

இவர் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு இவரின் நூல்களை அரசுடமையாக்கியவர் கலைஞர்

தமிழ் தமிழ் தேசியம் என்ற பெயரில் நீதிக்கட்சி திராவிட எதிர்ப்பை கொண்ட மபொசியை அன்று இயக்கியது மிட்டாமிராசுகள் ஜமீன்தார்கள்
இன்று இவர் வழியில் பலர் அந்நிய முதலீட்டில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக