செவ்வாய், 9 ஜூன், 2020

சர்க்காரியா கமிசன் என்றொரு சதி கமிசன் .. வரலாறு

Ravindirandmk  : வரலாறு புவியியல் தெரியாது ... ஆனால் திமுக வ குறை சொல்ல மட்டும் தெரியும் என்ற வாட்ஸ் அப் குரூப்.. பாரதிய ஜல்சா பார்ட்டி.. மற்றும்
நடுநிலை என்ற பெயரில் பார்ப்பானியத்துக்கும்.முரட்டு முட்டு கொடுப்பவர்களுக்கு ஆன பதிவு..
சர்க்காரியா கமிசன் ஊழலுக்காக போடப்பட்டதா?
100% சத்தியமா இல்லை
1975 எமெர்ஜென்சி நாளிலிருந்து கலைஞரை மிசாவிற்கு ஆதரவு கோரி இந்திரா பலமுறை தூதுவர்கள் அனுப்பியும் கலைஞர் தீவிரமாக எமர்ஜென்சியை எதிர்த்தார்
ஸ்டாலின்,மாறன் உட்பட 25000 கட்சிக்காரர்களை கைது செய்தும் கலைஞர் பணியவில்லை
இறுதியாக கலைஞரின் புகழை துவம்சம் செய்ய முடிவெடுத்த இந்திரா பயன்படுத்திய ஆயுதமே சர்க்காரியா கமிசன்.
1972 ல் MGR மூலம் பக்தவச்சலம் தயாரித்து கொடுத்த ஊழல் பட்டியலை 1976 ல் தூசித்தட்டி எடுத்து கலைஞரின் மக்கள் செல்வாக்கை துடைக்க பயன்படுத்திய ஆயுதமே சர்க்காரியா கமிசன்
கோபாலபுரம் வீட்டிற்கு வருமான வரி அலுவலர்கள் வந்து கலைஞரிடம் துளைத்து எடுத்தனர். பின்னர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் துழாவி எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினர்
முரசொலி அலுவலகம் சென்றனர். சோதனை என்ற பெயரில் நாசம் செய்தனர். எதுவும் கிடைக்கவில்லை

கோபாலபுரம், முரசொலி அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரம் வீட்டில் இருந்து ரொக்கமாகவோ நகையாகவோ எதுவுமே அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அனைத்து பத்திரிகைகளும், வானொலியும் மாறி மாறி பேசியது கலைஞர் ஊழலில் சிக்கிவிட்டார் என்ற செய்திதான்
மிகவும் தந்திரமாக மக்களிடத்தில் கலைஞரின் பிம்பத்தை உடைக்க இந்திரா அரசு மிக அதிகளவில் செலவு செய்து ஊடகங்களில் பெரிய விளம்பரம் தந்தது
எமெர்ஜென்சியின் கதாநாயகனாக திகழ்ந்த கலைஞரை கொடியவனாக, ஊழல்வாதியாக, கறைபடிந்த அரசியல்வாதியாக சித்தரித்தது மத்திய அரசும் ஊடகங்களும்.
எந்த BC/SC இனத்துக்காக கலைஞர் பாடுபட்டாரோ கலைஞருக்கு அந்த வக்கீல்கள் யாரும் கலைஞருக்கு உதவ முன் வரவில்ல
ஆனால் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என்று தஞ்சாவூரை சேர்ந்த பிராமணர் ஜி ராமசாமி அய்யர்தான் உதவிக்கு வந்தார்
சாந்தி பூஷன்,KK வேணுகோபால் போன்ற உச்சநீதி மன்ற வக்கீல்களும் வந்தனர்
கலைஞரின் கோரிக்கையை ஏற்று உலகப் புகழ் யாழ்ப்பாண வக்கீல் ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற ஈழத் தமிழரும் ஒரு ரூபாய் கூட வாங்காம வாதாட வந்தார்
அனைத்து வக்கீல்களும் தங்களது வாதத்திறமையால் இந்திராவின் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக பின்னப்பட்ட விசாரணையே இந்த வழக்குகள் என நிரூபித்தனர்
முக்கியமாக வீராணம் குழாய் ஊழல் குற்றச்சாட்டில் குறுக்கு விசாரணை அனுமதிக்கப்பட்டதால் எதையுமே நிரூபிக்க முடியாமல் விசாரணைக் கமிஷன் திணறியது.
எம்.ஜி.ஆர் மற்றும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரையும் குறுக்கு விசாரணைக்கு அனுமதி அளிக்கவேண்டும் ..
என்று கலைஞர் தரப்பு வக்கீல்கள் பலமுறை கோரிக்கை வைத்தும்
நீதிபதி மறுத்துவிட்டார்.
காரணம் கலைஞர் மீது பொய் குற்றச்சாட்டு சொல்ல அப்போதைய இந்திரா அரசால் நிர்பந்திக்கப்பட்ட அத்தனை அரசு IAS அதிகாரிகளும் மாட்டிக் கொள்வார்கள் என்பதால்தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக கமிசன் முன் ஆஜரான எம்ஜிஆர் தனக்கு ஊழல் பற்றி எதுவும் தெரியாது என்றும் சேலம் கண்ணன் கொடுத்த ஊழல் புகார் பட்டியலையே தான் கவர்னரிடம் கொடுத்ததாக சொன்னதுதான் உச்சக்கட்ட நகைச்சுவை
குறுக்கு விசாரணையே இல்லாத சர்க்காரியா விசாரணை கமிசனுக்கு என்ன பெயர் வைக்கலாம் ..நீங்களே முடிவு செய்யவும்.
மேலும் சர்க்காரியா கமிசனில் எம்ஜிஆரால் குற்றம்சாட்டப்பட்ட நெடுஞ்செழியன், மாதவன், ப உ சண்முகம் மற்றும் பலர் அதிமுகவில் சேர்ந்ததால் ஊழல் செய்யாத புனிதர்களானார்கள்.
இந்திராவின் ஷா கமிஷன் விசாரணையை போன்றே சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் விரக்தியில் குப்பையில் தூக்கிப்போடப்பட்ட ஒன்றுதான்
சர்க்காரியா கமிசனில் எதையும் நிரூபிக்க வக்கில்லாதவர்கள் தாங்கள் பட்ட அவமானத்தை மறைக்க ..
தங்களது கையாலாகாத தனத்தை மூடிமறைக்க பயன்படுத்தும் வார்த்தையே " விஞ்ஞான ஊழல் " கதை
விஞ்ஞானம் என்றால் நிரூபிக்க கூடியது எனப் பொருள். அதன் அர்த்தம் கூட புரியாத பொறுக்கிகளை காறி உமிழ்ந்து விட்டு வேலையை பாருங்கள் உடன் பிறப்புகளே
Ravindirandmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக