ஞாயிறு, 28 ஜூன், 2020

ஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல்

நக்கீரன் : கரோனா பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. கரோனா புதிய நோயாக இருக்கின்ற காரணத்தால் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கரோனா எப்படி பரவுகிறது  என்று இதுவரை முழுமையாக நிபுணர்கள் தெரிவிக்கவில்லை இருந்தும் மக்களைக் காக்க அரசு இயந்திரம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நோய்களை குணப்படுத்துவது பற்றி ஸ்டாலின் ஏதாவது சொல்லியிருக்கிறாரா? என்னைப் பற்றியும், அரசை பற்றியும் குறை கூறி அறிக்கை விடுவதுதான் ஸ்டாலினின் வேலை. பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளே திணறிக் கொண்டிருக்கிறது. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. மருத்துவ நிபுணர்களுடன்  ஆலோசித்து பின் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.
அதேபோல் சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு சென்ற ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அனுமதியைப் பெற்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும். பொதுமக்களுக்குத் தொந்தரவு தர வேண்டாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக