திங்கள், 8 ஜூன், 2020

பார்ப்பனிய ஆதரவில் அந்நாள் சீமான் ம.பொ.சி, இந்நாள் ம.பொ.சி சீமான் ! 😀

Saraboji எனினும் அது தமிழ்த் தேசிய உணர்வாக இல்லாமல் திராவிட இயக்க எதிர்ப்புத் தமிழ்த் தேசிய உணர்வாக இருந்தது.
அதனால் தான் 1950-51 முழுவதும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை ம.பொ.சி நடத்தினார். அம்மாநாடுகளில் விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு போன்றோர் திராவிட இயக்கம் குறித்தும்
அதன் தலைவர்கள் குறித்தும் மிகவும் தரக்குறைவாகப்(இப்போது சீமான் தனி மனித தாக்குதலில் ஈடுபட்டு ஒருமையில் பேசுவது போல) பேசியுள்ளனர்.
அம்மாநாடுகளுக்கு கள்ளக்குறிச்சி வழக்குரைஞர் தாத்தாச்சாரி போன்ற பணக்காரப் பார்ப்பனர்கள் நிதியுதவி செய்துள்ளனர்.
திராவிட இயக்க எதிர்ப்பு என்பது பெரியாரையோ, திராவிடர் கழக்கத்தையோ எதிர்ப்பது என்று பொருள் கொள்ள முடியாது. பார்ப்பனிய ஆதரவே திராவிட இயக்க எதிர்ப்பாக வெளிப்பட்டுள்ளது.
சீமான் எப்படி தெலுங்கர்களை, மலையாளிகளை ஒதுக்கி விட்டு மாறாகப் பார்ப்பனர்கள் தமிழர்கள் தான்(சங்கரப்பா😂) என்பதும் திமுகவைத் தீவிரமாகத் திட்டுவதும் மற்றக் கட்சிகளுக்குக் காதல் கடிதம் எழுதுவதுவமாக இருக்கிறாரே,மருத்துவ பட்ட மேற்படிப்பில் OBC இட ஒதுக்கீடு பறிபோனது குறித்து இப்போது வரை வாய் திறக்கவில்லையே!

திமுக நாடாளுமன்றத்தில் 10% இட ஒதுக்கீடுக்கு எதிராக வாக்களிக்க வில்லை என புதிய தலைமுறை நேர்காணலில் பச்சையாகப் பொய் சொன்னாரே அது மாதிரியான திராவிட இயக்க எதிர்ப்பு.
ம.பொ.சி நானறிந்த இராஜி எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்👇
"தமிழ்நாட்டிலே ஒரு சாரார், பிராமணர் தமிழர் அல்லர்; தமிழருக்கு அந்நியரான ஆரியரே என்று பிரச்சாரம் செய்தது ,
தலைவர் இராஜாஜிக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.
பிராமணர்-பிராமணரல்லாதார் எனும் வேற்றுமையைப் போக்குகின்ற குறிக்கோளுடன் தான் தமிழர் என்ற இன உணர்ச்சியை நான் வலியுறுத்துகிறேன் என்பதில் ராஜாஜிக்கு ஐயமிருக்கவில்லை(பக்கம் 350) என்பது ம.பொ.சி யின் கூற்று.
ராஜாஜிக்கு மட்டுமின்றி நமக்கும் எந்த ஐயமும் எழ இடமில்லாமல் ம.பொ.சி தன் நிலையை விளக்குகின்றார்.
ஆரிய திராவிட மோதல்கள் நடக்கும் போது நடுவில் வந்து இதே பாணியில் தான் அண்ணன் சீமான் திராவிடமே பொய் என்கிறார். ஒரு காலத்தில் அவர் இனத்தால் தான் திராவிடன் என்று பேசியதெல்லாம் வேறு கதை.
இவர்கள் இருவரின் நோக்கமும் ஒன்று தான் பார்ப்பணியத்திற்கு எதிராக இயங்கும் திராவிட இயக்கத்தின் பாதையைத் திசை திருப்புவது.
திராவிட இயக்க மேடைகளில் முருகனை விமர்சித்த இதே சீமான் பிறகு முப்பாட்டன் முருகன் என்றார். பின்னர் அதே போல மாயோன் என்றார், இப்போது பகவான் கிருஷ்ணனின் வந்து
நிற்கிறார். ஆடு மாடு மேய்ப்பது தவறில்லை பகவான் கிருஷணன் கூட ஆடு மேய்த்தார் என்கிறார்.
கிருஷ்ணனைப் பற்றி இதே சீமான் பேசிய பழைய காணொளிகள் குப்பைகளாக வலையொளியில் கிடக்கின்றன.
இப்படி அடிவருடிப் பிழைப்பவர்கள் தான்
பொதுபுத்தியில் இருக்கும் மக்களைத் தொடர்ந்து திசை திருப்ப கடினமாக உழைக்கிறார்கள் வாங்கிய கூலிக்கு.
ம.பொ.சி தன்னுடைய தமிழும் சமஸ்கிருதமும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்..
தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மதத்தால் இந்துக்களாக இருப்பார்களானால், அவர்கள் தங்கள் வேத மொழியான சமஸ்கிருதத்தை வெறுப்பது முறையோ நெறியோ ஆகாது(பக்கம் 19) (அட்ரா சக்க)
ம.பொ.சி சீமான் போன்றவர்களின் தமிழ்த் தேசியமும் பார்ப்பனியமும் இவ்வாறாகக் கை கோர்த்து நடக்கின்றன.
திராவிட இயக்கக் கோட்பாடுகளை எதிர்த்துக் கொண்டே தமிழ்த் தேசியம் பேசும் எவரும் பார்ப்பனியத்திற்கு தான் ஆதரவாக ஆகிவிடுவர் என்பதற்கு ம.பொ.சி யும், சீமானும் ஆகச் சிறந்த சான்று...
-
நன்றி Saraboji

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக