சனி, 6 ஜூன், 2020

ஆனையிறவு முகாம் தாக்குதல் எப்படி சாத்தியமானது ? கிழக்கு போராளிகளின் குரல் ..

எதிரிகளின் சிம்ம சொப்பனம் உண்மையான சமர்க்கள நாயகன் மட்டக்களப்பு மண் ஈன்றெடுத்த மாவீரன் கருணா அம்மான் புலிகளின் வரலாற்றை எழுதுவதென்றால் கருணா என்ற கதாநாயகன் இல்லாமல் எப்படி எழுத முடியும் பெரும் சமர்க்கள நாயகனாக கிழக்கின் விடிவெள்ளியாக இளைஞர்களின் ஹீரோவாக ஜெயசிக்குறு இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எங்கள் மட்டு மண்ணின் மைந்தன் உண்மையாக இருந்த இந்த காவல் தெய்வத்தையும் இவன் படையையும் சீண்ட அந்த புலிப்படையையே காணாமல் போனது வரலாறு ஆக இத்தனை காலமும் புலிகளை பாதுகாத்த காவல் தெய்வம
Reginold Rgi : ஆனையிறவு பெரும் தளத்தை கைப்பேற்றியது யார்ர தலைமையில் என்று IBC தமிழ் ஆவணப்படுத்தினால் அது பால்ராஜ்
அதே மட்டக்களப்பில் இருந்தது ஒரு சாமானியன் Reginold
ஆவணப்படுத்துகிறான் பால்ராஜ்யே கப்பாற்றியவன் கிழக்கான் கருணாவும் அவண்ட வீரம்மிக்க கிழக்கு போராளிகளும் என்று
நிச்சயமாக ஆனையிறவு பெரும் தளத்தை கைப்பேற்றுவது என்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல 20000 மேற்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணிகள் நிலை கொண்டிருந்த முகாம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் ஆனையிறவு விழும் என்று உண்மையிலே ஆரம்பத்தில் கருணா தலைமையிலான கிழக்கு போராளிகளை தலைவர் ஒதுக்கிதான் வைத்திருந்தார் பானு தான் தலைமை தாங்கினார் என்னதான் முயற்சித்தும் ஆனையிறவு புலிகளுக்கு கனவாகவே இருந்தது 19 நாட்கள் முயற்சித்தும் புலிகளால் கைப்பேற்ற முடியவில்லை சுதாரித்துக் கொண்ட தலைவர் கருணாவிடம் பொறுப்புகளை கொடுத்தார் கருணா தலைமையிலான ஜெயந்தன் படையணி ஆனையிறவு

 

முன்னரங்கு நிலைகளை உடைத்து கொண்டு ஆனையிறவு பெரும் தளத்தில் கால் பதித்தார்கள் போர் குணம் கொண்ட கிழக்கு போராளிகளின் போர் ஆற்றலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஸ்ரீலங்கா இராணுவம் திக்குமுக்கு ஆடியது கிழக்கு போராளிகள் செய்த தியாகத்தை மறந்து ஆனையிறவு பெரும் தளத்தை கைப்பேற்றிய கருணாவை தேசிய கொடி ஏற்ற அழைக்காமல் பானுவை அழைத்தார்கள் அங்கே தான் முதல் பிளவு தலைவர் நல்லவர் என்றால் கருணாவை தானே அழைத்திருக்க வேண்டும் இதில் வேதனைபட வேண்டிய விடயம் என்னவென்றால் ஆனையிறவு பெரும் தளத்தை கைப்பேற்றிய பெருமை தளபதி ஜிம்கிலி தாத்தா ராபேட் தீன்தமிழ் சாளி இவர்களை பின்னாளில் புலிகள்தான் கொலை செய்தார்கள் நன்றி மறந்தவர்கள் அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் உண்மையான மவீரனை துரோகி எண்டு சொல்கிறானுகள் என்ன பொறுத்தவரை கருணா மாவீரன்தான் ஆனையிறவு முகாம் மீதான கருணாவின் தலைமையில் இறுதித்தாக்குதல் வெகு சுலபமாக முடிவடைந்தது என்றே சொல்லலாம் புலிகள் தரப்பில் 34 போராளிகளே களப்பலியாகினர். ஆனால் அத்தளத்தைக் கைப்பற்ற,முற்றுகை நடத்திச் செய்த சண்டைதான் நீண்டதும் கடினமானதும். ஆனையிறவுக்காக ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்த ஸ்ரீலங்கா இராணுவதரப்பில் 5000+ மேற்பட்ட படையினர் கொலை செய்யப்பட்டதாக பின்னாளில் புலிகள் அறிவித்தார்கள்
 

1991 ஆண்டு தொடக்கம் 2000 ஆண்டு வரை இறுதியாக கருணா தலைமையிலான கிழக்கு படையணிகள் ஆனையிறவு முன்னரங்கு நிலைகளை உடைத்து கொண்டு 22.04.2000 ஆனையிறவை கைப்பேற்றினார்கள் வெறும் 34 போராளிகள் தான் வீரச்சாவு ஸ்ரீலங்கா இராணுவ தரப்பில் 600+ மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட இராணுவம் தப்பியோட தொடங்கியது வெற்றி கதாநாயகர்கள் கிழக்கு போராளிகளளே கிழக்கு போராளிகளும் கருணாவும் இல்லாமல் எப்படி தலைவர் வந்தார் நன்றி மறந்த கூட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக