சனி, 20 ஜூன், 2020

நடுத்தெருவிலேயே சாதிவெறியர்களால் அடித்து கொலை .. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் மேலப்பாளையூர்

Dharmadurai Re Mu : கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம்
மேலப்பாளையூர் கிராமத்தைச் சார்ந்த ராஜீ என்பவர் நடுத்தெருவிலேயே சாதிவெறியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18-06-20) இரவு 9 மணியளவில் மேலப்பாளையூர் கிராமத்திலிருந்து C.கீரனூர் கிராமத்து மெடிக்கலுக்கு மாத்திரை வாங்குவதற்காக ராஜீ s/o தியாகராஜன் மற்றும் புகழேந்தி s/o மணி மற்றும் வினோத்குமார் s/o வீராசாமி ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 
இவர்களுடைய வாகனம் C.கீரனூர் பேருந்து நிருத்தம் அருகில் செல்லும்போது வேகத்தடையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த C.கீரனூர் படையாச்சி தெருவை சார்ந்த கான்டீபன் s/o தனசேகரன் என்பவர் இவர்களை வழிமறித்து எங்கே செல்கின்றீர்கள் aநீங்கள் எந்த ஊர் என்று கேட்டுள்ளார். அதற்கு தாங்கள் மேலப்பாளையூர் காலனியை சார்ந்தவர்கள் என்றும் மாத்திரை வாங்க செல்கின்றோம் என்றும் கூறியுள்ளனர். 

அப்போது பறத்தேவிடியா பசங்களா உங்களுக்கு என்னடா இங்கவேல என்று கான்டீபன் அவர்களுடைய வண்டி சாவியை எடுத்துள்ளார். புகழேந்தி வண்டிசாவியை கொடுங்கள் நாங்கள் போகவேண்டும் என்று கேட்டுள்ளார். இல்லை தரமுடியாது என்று கூறிக்கொண்டே புகழேந்தியை கன்னத்தில் அடித்துள்ளார் மேலும் நீங்க எங்க வேனாலும் போய் சொல்லுங்க என்று கான்டீபன் ஆவேசமாக திட்டியுள்ளார். 


அப்போது அருகில் இருந்த ராஜீ வண்டி சாவியை கான்டீபன் கையிலிருந்து பிடிங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கான்டீபன் பறத்தேவிடியா நாய்களா கையிலிருந்து சாவியை பிடுங்கும் அளவுக்கு உங்களுக்கு தைரியம் வந்துவிட்டதா என்றுகூறி ராஜீவை எட்டி நெஞ்சில் உதைத்துள்ளார். அப்போது அவரோடு வந்த 1.சேட்டு(வார்டு உறுப்பினர்) 2.இளஞ்செழியன்(டிரைவர்) 3.தனசேகரன்(கோனார் மகன்) 4.சரன்ராஜ் s/o சண்முகம் 5.விஜயகுமார் s/o சுப்ரமணி 6.சசிகுமார் s/o செம்பையன் ஆகியோர்களும் கான்டீபனோடு சேர்ந்துகொண்டு புகழேந்தி மற்றும் ராஜீ மற்றும் வினோத்குமார் ஆகிய மூவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்கள். 

ராஜீவின் நெஞ்சில் காலால் எட்டிஎட்டி அனைவரும் உதைத்துள்ளனர். இதனால் நெஞ்சை பிடித்துக்கொண்டு நிலைகுலைந்து தரையில் சாய்ந்துள்ளார் ராஜீ. இந்த சம்பவத்தை கேள்வியுற்று ஓடிவந்த செல்வகுமார் s/o சின்னசாமி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ராஜீவை தூக்கிவந்து விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவர்கள் வந்து பார்த்ததில் ராஜீ தாக்கப்பட்டதில் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். புகழேந்தி மற்றும் வினோத்குமார் கடுமையாக தாக்கப்பட்டதால் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக