ஞாயிறு, 28 ஜூன், 2020

திமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா!


திமுகவில் நான்காவது எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா!
மின்னம்பலம் : திமுக எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் நலத் திட்ட உதவிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செஞ்சி, திண்டிவனம் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளை விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மஸ்தான் ஒருங்கிணைத்து வந்தார்.
இந்த நிலையில் “
மஸ்தானுக்கு சில நாட்களாக காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மஸ்தானுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தற்போது, அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து, ரிஷிவந்தியம் தொகுதி வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி ஆர்.டி.அரசு ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது அக்கட்சியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக