திங்கள், 8 ஜூன், 2020

ஜெ அன்பழகன் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

DMK MLA from Chennai J Anbazhagan health condition currently is described as criticalVelmurugan - tamil.oneindia.com: சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் உடல் நிலை மோசம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக குரோம்பேட்டை தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரேலா மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (61வயது) உடலி நலக்குறைவு காரணமாக ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா
அவருக்கு கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 3ம் தேதி முதல் செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90 சதவீதம் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு ஆரம்பத்தில் கவலைக்கிடமான நிலையில் அன்பழகனின் உடல் நிலை இருந்தது.

அதன்பிறகு அடுத்த இரண்டு நாட்களில் உடல் நிலை தேறி 40 சதவீதம் அளவுக்கு ஆக்ஸிஜன் தேவை குறைந்தது. இதன் மூலம் வெண்டிலேட்டர் உதவி இல்லாமல் சுவாசிக்கும அளவுக்கு மெல்ல மீண்டு வந்தார் இந்நிலையில் திங்கள்கிழமை மாலை முதல் உடல் நிலை கவலைக்கிடமான நிலைக்கு மாறி உள்ளது. இன்று காலையில் இருந்து மீண்டும் ஆக்ஸிஜன் தேவை அளவு அன்பழகனுக்கு அதிகரித்துள்ளது. ஜெ.அன்பழகனின் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன. அவரது ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன.அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக