வெள்ளி, 12 ஜூன், 2020

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் சயான், மனோஜ் ஜாமீன் மனு! -நீதிமன்றம் விதித்த உத்தரவு!


kodanadu case... highcourt
நக்கீரன் : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ல் காவலாளியைக் கொலை செய்து கொள்ளையடித்ததாக சயான், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்த கோத்தகிரி போலீசார், அவர்களைக் கைது செய்தனர். இவர்களை ஜாமீனில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்டு, நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ஓராண்டுக்கும் மேல் சிறையில் உள்ள இருவரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் எட்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாலும், கீழமை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை ஏற்கனவே துவங்கி விட்டதாலும், தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், இருவரின் ஜாமீன் மனுவுக்கும் ஜூன் 19-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக