செவ்வாய், 16 ஜூன், 2020

பாகிஸ்தான் காணமல் போன இந்திய அதிகாரிகள், காயங்களுடன் கண்டுபிடிப்பு


tamil.samayam.com : பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய உயர் அதிகாரிகள் 2 பேரைக் காணவில்லை. இது தொடர்பாகத் தீவிர விசாரணையை இருநாடுகளும் நடத்தி வந்தன. இந்நிலையில் இருவரும் கார் விபத்து வழக்கு ஒன்றில் சிக்கி காவல் நிலையத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. ;
பாகிஸ்தான் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு இந்திய அதிகாரிகளை இன்று காலை முதல் காணவில்லை எனப் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரகத்திற்குக் காலை புறப்பட்ட 2 பேர் எங்குத் தூதரகம் வந்தடையவில்லை எனத் தகவல்கள் தெரிவித்தன. இதனையடுத்து, வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தை தீவிரமாக கையாள முடிவெடுத்து பாகிஸ்தான் தூதரகத்துக்கும், அதன் அதிகாரி ஹைதர் ஷாவுக்கும் நண்பகலுக்குள் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், காணாமல் போனதாக சொல்லப்பட்ட இரண்டு ஊழியர்களும் காணாமல் போயுள்ள ஏழு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு சாலை விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.


அதுவும், பாகிஸ்தானின் SAMAA TV என்ற தொலைக்காட்சி, உயர்கமிஷன் கார் ஒன்று சாலை விபத்து வழக்கில் சிக்கியுள்ளதாகவும், செய்தி வெளியிட்டதையடுத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மேலும் இந்த இருவரையும், தப்பிக்க முயன்றபோது பொதுமக்கள் பிடித்துக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு ஊழியர்களுக்கும் உடலில் காயங்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு உள்ளன.அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் தாக்கப்பட்டார்களா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், அவர்களது கைதும் தாக்கப்பட்ட நிகழ்வும் ஒரு பதிலடி கொடுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

அதாவது, சில திங்களுக்கு முன்பு, இந்தியாவில் உளவு பார்த்ததற்காக இரண்டு பாகிஸ்தானியர்களை 24 மணி நேரத்தில் வெளியேறச் சொன்னது இந்தியா. அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையா இது என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் கிளம்பத் தொடங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக