வியாழன், 18 ஜூன், 2020

புலியின் மீது சவாரி விட்டவர்கள் பல ரகம் . .. புலிகளின் இஸ்லாமியர்கள் மீதான போர்குற்றங்கள் ..


Nilaviniyan Manikkam :புலியின் மீது சவாரி விட்டவர்கள் பல ரகம் . உண்மையாகவே புலியால் சொல்லொணா துன்பம் அனுபவித்தவர்கள் பெரும்பாலும் தாங்கள் புலி இயக்கத்தை பற்றி கொண்டிருந்த அபிப்பிராயங்கள் பலவும் மிக தவறானவை என்பதை காலம் கடந்தாவது புரிந்து கொண்டார்கள் .
புலி இயக்கத்தை வைத்து பணம் சேர்த்தவர்கள்தான் இன்றும் தங்கள் வியாபாரத்தை தொடர துடிக்கிறார்கள்.
இவர்களால் ஸ்ரீ லங்கா அரசை எதிர்த்து பெரிதாக குரல் எழுப்பி விட முடியாது. ஸ்ரீ லங்கா அரசின் மீதுள்ள பயம் மட்டும் காரணம் அல்ல . அதை விட முக்கியமான பல விடயங்கள் உள்ளன.
முதலில் இவர்கள் மீதெல்லாம் எக்கச்சக்கமான சட்ட விரோத குற்றங்கள் அல்லது  சந்தேகங்கள் பல நாடுகளிலும் உள்ளன . எந்த நேரமும் எந்த வழக்கு பாயுமோ எந்த வில்லங்கத்தில் மாட்டுவோமோ என்ற பயம் ஒருபக்கம்.
புலி மாபியா பண கொடுக்கல் வாங்கல் தகராறுகள் இத்தாலிய மாபியாக்களை மிஞ்சும் அளவுக்கு உள்ளது . அடிக்கடி மேற்கு நாடுகளில் இடம்பெறும் சூட்டிங்ஸ் மற்றும்  விபத்து போன்றவைகளின் பின்னணியில் இந்த பங்கு பிரித்தல்களும் உண்டு.
இலங்கை அரசு மீது போர்குற்ற விசாரணை என்பது  ஒரு பொழுது போக்கு நாடகம். இரு பகுதியினரும்  அறிந்த விடயம் அது .
போர் குற்ற விசாரணை என்றால் வெறுமனே ஸ்ரீ லங்கா அரசு மீது மட்டுமல்ல.. ..  புலிகள் மீதும் போர்குற்ற விசாரணை நிச்சயம் வரும்.
குறைந்த பட்சம் புலிகளின்  முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இன சுத்திகரிப்பு குற்றச்சாட்டுக்கள் .எல்லாம்   மிக மிக பாரதூரமானவை என்பது எல்லோருக்கும் தெரியும் .

 அவற்றில் இருந்து புலிகளின் தொடர்பில் இருக்கும் பலரும் சிக்க கூடிய ஆபத்து நிச்சயம் இருக்கிறது.
இப்படி எல்லாம் விவகாரம் ரொம்ப வில்லங்கமாகவே இருக்கிறது.
இந்த நிலையில் எக்ஸ் புலிகள்   தாங்கள் இன்னும் ஒரு போராளி ரேஞ்சுக்கு இருக்கிறோம் என்று காட்டி கொள்ள உள்ள ஒரே வாய்ப்பு தமிழகத்தில் இருந்துதான் கிடைக்க வேண்டும்.
அதுதான் அவர்களின் ஒரே ஒரு ஆப்ஷன்.  வேறு வழி?
அடித்த காசை தக்கவைத்து கொள்ளவேண்டும் .
திருப்பி கேட்டு காரி துப்பும் மக்களிடம்  கூறிக்கொள்ள ஒரு விடயமாவது வேண்டும் ..  வேறு என்ன வழி?
இவர்களுக்கு   பாஜகவின் தொடர்பு வேற இப்போது இருக்கிறது .
அது முன்பும் இருந்தது .
உலகம் பூரா இவர்கள் கட்டி வைத்து   ஆண்டு கொண்டிருக்கும் கோயில்களும்  ஊர் சங்கங்கள் என்ற பெயரில் பேணப்படும் ஜாதி சங்கங்கள் எல்லாம் ஆர் எஸ் எஸ் க்கு நிலப்பாவாடை விரித்து வைத்தது
அந்த ஜோதியில் ஐக்கியம் ஆகிவிட்டார்கள் .
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்து புலிகள் மட்டுமல்லாது  கிறிஸ்தவ புலிகளுக்கும் தற்போது ஆர் எஸ் எஸ் மீது ஒரு மயக்கம் இருக்கிறது..
இவர்கள் திமுகவை தொடர்ந்து தாக்குவதன் ஒரே காரணம் இவர்களுக்கு தற்போது சுதந்திரமாக உச்சரிக்க கூடிய ஒரே ஒரு விடயம் திமுக கலைஞர் என்ற சொற்கள்தான் .
திமுகவையும் கலைஞரையும் வசை பாடுவது இவர்களுக்கு தற்போது உள்ள ஒரே ஒரு வியாபாரமாகும்.
தமிழகத்தில் இன்றும் புலிகளும் பிரபாகரனும்  ஒரு பேசுபொருளாக இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே நோக்கம்  . அதுதான் ஒரே வியாபாரம் .
தங்களின் மாபியாவை மக்களின் கோபத்தில் இருந்து தப்ப வைக்க இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் தமிழக அங்கீகாரம்தான் . அது உண்மையான அங்கீகாரமாக இல்லாவிடினும் பரவாயில்லை . ஒரு குறைந்த பட்ச பேசு பொருளாக்த்தான் இருக்கவேண்டும் என்பதுதான்.
இவர்களின் நயவஞ்சக நோக்கங்களை முறியடிக்க அவர்களை ஒரே அடியாக தலை முழுகி விடவேண்டும் . மறந்து போயும் அவர்கள் ஒரு பேசு பொருளாக தமிழகத்தில் இருக்ககூடாது .அது தமிழகத்திற்கு மாபெரும் கேடு விளைவிக்கும்.
புலம் பெயர் தமிழர்களையும் இலங்கை தமிழர்களையும் மீண்டும் மீண்டும் அவர்களின் நச்சு வலையில் சிக்க வைத்துவிடும் .

 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக