செவ்வாய், 23 ஜூன், 2020

கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு .. நைஜீரியா அறிவிப்பு

கொரோனாவிற்கு தடுப்பு மருந்துMageshbabu Jayaram - Samayam Tamil : உலகம் முழுவதும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் சூழலில் புதிதாக நைஜீரியா  நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறியுள்ளனர்.
;சீனாவில் தொடங்கி ஒட்டுமொத்த உலகையும் தனது கட்டுக்குள் கொண்டு விட்டதைப் போல் கொரோனா வைரஸ் நம்மை உணர வைத்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 4,74,467 பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 91,93,194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை தாண்டிவிடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத காரணத்தால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. />
இதற்கான ஆராய்ச்சிகளை பல்வேறு நாடுகளும் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் நைஜீரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி நைஜீரிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கோவிட்-19 ஆராய்ச்சி குழுவினர் கூட்டாக செய்தி வெளியிட்டுள்ளனர்.


“இந்தியாதான் உலகத்திற்கே மருந்து சப்ளையர்” சீன மருந்து நிறுவனம் பாராட்டு!

கார்டியன் நைஜீரிய இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடிலேகே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு மற்றும் பயோ இன்பர்மேடிக்ஸ் பிரிவின் மெடிக்கல் வைராலஜி நிபுணர் டாக்டர் ஓலாடிபோ கோலவோலே கூறுகையில், எங்கள் விஞ்ஞானிகளால் ஆப்பிரிக்க மக்களின் நலனிற்காக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளோம்.

இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைப்பதற்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் ஆகும். இதற்காக மருத்துவ ஆணையத்திடன் இருந்து பல்வேறு ஒப்புதல்களை பெற வேண்டியுள்ளது என்றார். இதேபோல் அடிலேகே பல்கலைக்கழக துணைவேந்தரும், பேராசிரியருமான சோலோமான் அடிபோலா கூறுகையில், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸிற்கு எங்கள் தோட்டத்தில் இருந்து மருந்து கண்டுபிடிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கள் குழுவினரின் திறன்களை இவ்வுலகிற்கு காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுப்போம் என்றார். மேலும் பிரிசியஸ் கார்னர்ஸ்டோன் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜூலியஸ் ஓலோகே கூறுகையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது உண்மை தான்.

இதனை பலமுறை பரிசோதனை செய்து பார்த்துள்ளோம். குறிப்பாக ஆப்பிரிக்க மக்களைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது. இருப்பினும் இனம் கடந்து அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது நிச்சயம் வேலை செய்யும். இந்த மருந்து போலி அல்ல. எங்கள் உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி. இதற்காக ஏராளமான அறிவியல்ரீதியான உழைப்பு செலவிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செப்டம்பரில் தொடக்கம்?!

தற்போதைய மக்கள்தொகையில் கொரோனா குணமாக்கும் மருந்தை விட, தடுப்பு மருந்து தான் அவசியம். இதன் காரணமாகவே எங்களின் ஆராய்ச்சியை தடுப்பு மருந்தை நோக்கி செலுத்தினோம் என்றார். தற்போது வரை 13 வெவ்வேறு கோவிட்-19 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை 100க்கும் மேற்பட்டோருக்கு அளித்து பரிசோதனை செய்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக