ஞாயிறு, 21 ஜூன், 2020

“சலுகை சாதிகளும் கல்வியும்” - ஜெ.ஜெயரஞ்சன்

   மின்னம்பலம் : கொரோனா ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து பொருளாதார பாதிப்புகள், புலம்பெயர் தொழிலாளர் விவகாரம், மக்களின் அவதி குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் விரிவாகப் பேசி வருகிறார். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததை விமர்சித்த அவர், எவ்வாறெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்பதை தனது பார்வையில் முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் இன்று (ஜூன் 21) இடஒதுக்கீடு, சாதி, கல்வி ஆகியவை எவ்வாறு ஒன்றோடு ஒன்று தொடர்பில் உள்ளன என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரம் குறித்து பேசிய அவர், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் உள்ள அம்சங்களை விமர்சித்தார். முழு பேச்சையும் கீழே உள்ள காணொலியில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக