திங்கள், 1 ஜூன், 2020

வடிவேலு : அந்த வீடியோவால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்” -... வீடியோ


நக்கீரன் :வைகை புயல் வடிவேலு என பலராலும் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் வடிவேலு. சமீப ஆண்டுகளாக இவர் திரையுலகில் நடிக்கவில்லை என்றாலும் இவரது காமெடிகளை வைத்து உருவாகும் மீம்களின் மூலம் இன்னும் ட்ரெண்டிங்கில் இருக்கிரார்.
நடிகர் சிங்கமுத்துவும், வடிவேலும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். நில மோசடி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையேயான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனிடையே நடிகர் மனோபாலா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சிங்கமுத்து, வடிவேலு தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார் வடிவேலு.

புகாரளித்த கடிதத்தில், "நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
நடிகர் மனோபாலா நடத்தும் ‘வேஸ்ட் பேப்பர்’ என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னை பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னை பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக