சனி, 27 ஜூன், 2020

சாத்தான்குளம் .வணிகர் சங்கங்கள் .. பறிபோகும் தமிழக வணிக மேலாண்மை ..

Muruganantham Ramasamy : சாத்தான் குளம் காவல்படுகொலையில் நாம் வணிகர்சங்கங்களின் பங்கை கவனித்தோமா..?
தமிழக வணிகர் சங்கங்கள் ஒரு சாதியின் பேரக்குழுக்களாகத்தான் இயங்கி வருகின்றன.. கொல்லப்பட்டவர்களின் அதே சாதி.. ஆனால் அவர்களின் பிணம் காணுமுன் காவல்நிலையம் பக்கம் கூட செல்லவில்லை.. இத்தனைக்கும் தவறாமல் சந்தா வாங்கி விடுவார்கள்.. உள்ளூர் காவல்துறையினரிடம் காரியம் சாதிக்க வணிகர்சங்கத்தின் தலைவர்கள் வைத்திருக்கும் சுமூக உறவுக்கான விலை இது..!
வேறெந்த தொழிற்குழுக்களைக்காட்டிலும் இந்த வணிகர் சங்கங்கள் அமைப்புரீதியாக வலுவானவை.. இருந்தும் கூட சாதாரண சிறுவணிகர்களுக்காக ஒரு ஆணியையும் பிடுங்குவதில்லை என்பது வெளிப்படை.. இருவரையும் காவல்துறை அழைத்துச்சென்ற போது வணிகர் சங்க நிர்வாகிகள் காவல் நிலையம் சென்று கைதுக்கு என்ன காரணம் எனக்கேட்டிருந்தால் போதும்.. இருவரும் செத்திருக்க மாட்டார்கள்.. அதிகபட்சம் வழக்கோடு பிரச்சனை முடிந்திருக்கும்.. ஆனால் அப்போது செல்லாமல் பிணத்தை பார்த்தபின் அவர்கள் பாடும் பிலாக்கனம் அருவெறுப்பாக இருக்கிறது.
இன்று பா.ஜ.க வின் எச்.ராஜா வணிகர் சங்கங்களை அந்நியக்கைக்கூலி என்கிற அளவுக்கு பேசியிருப்பதன் பின்னணி தெளிவானது.. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் வணிகத்தில் கோலோச்சும் தமிழ் சாதிக்குழுக்களின் மீது மார்வாரிகள், குஜராத்தி பனியாக்கள், ஜெயின்கள் இவர்களுக்கு ஒரு கண்.. இவர்களின் கூலிப்படைகள் பா.ஜ.க மற்றும் சங்பரிவாரங்கள்.. தமிழகத்தின் வணிகர்சங்கங்களில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியாத வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாக இதே தூத்துக்குடியில் "இந்து வணிகர் சங்கம்" என்ற பெயரில் ஒரு உடைப்புக்குழுவை

பா.ஜ.க ஏற்படுத்தியது.. சென்னை சவுகார் பேட்டை, கோவை சுக்கிரவாரப்பேட்டை ஆகிய இடங்களிலில் முன்பு நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு பிழைப்பு நடத்திய மார்வாரிகளும் குஜராத்திகளும் இப்போது காலரை தூக்கிவிட்டுக்கொண்டு திரியக்காரணம் இந்து முன்னணி ராமகோபாலன், அர்ஜூன் சம்பத் போன்ற எலும்பு பொறுக்கிகளுக்கு அவ்வப்போது வீசி தங்கள் காவல்நாய்களாக வைத்திருக்கும் கொழுப்புதான்.. எந்த சேட்டு வீட்டு பையனும் தெருவிற்கு வரமாட்டான்.. ஆனால் அவர்களின் எலும்பை கவ்வியதற்கு ஈடாக சக தமிழர்களை கடிக்க மேற்சொன்ன கும்பல்கள் வரும்.. தமிழர்களின் வணிகத்தை சூரையாடுபவர்களுக்கு சாமரம் வீசுபவர்கள் இன்னொரு பக்கம் இஸ்லாமிய வணிகர்களை புறக்கணிப்போம் என்பார்கள்.. ஆனால் பில் இல்லாமல் நெ.2 வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் பனியாக்களைப்பற்றி வாய்திறக்க மாட்டார்கள்.. வரிஏய்ப்பு வணிகத்தில் மார்வாரிகளின் திறமைபற்றி பச்சைக்குழந்தைக்கும் தெரியும்.. இனால் அதை தேசவிரோதம் என எப்போதாவது எச்.ராஜா பேசியிருக்கிறானா? பேச மாட்டான்.. ஏனெனில் மார்வாரிகளின் எச்சைச்சோற்றில் வயிறு கழுவுபவன் எஜமானுக்கு எதிராக குலைக்க முடியாதல்லவா..? அதனால்தான் தமிழக வணிகர் சங்கங்களை பார்த்து குரைக்கிறான்..
சரி.. அவனை விடுங்கள்.. தமிழக வணிகர்சங்கங்களின் புரவலர்களான பல நாடார்கள் சங் பரிவாரங்களுக்கு படியளப்பவர்கள் என்பதுதான் இங்கே நகை முரண்.. சரவணா செல்வரத்தினம் தொடங்கி பலரும்.. தங்கள் வணிகத்தை சூரையாடுபவர்களின் வீட்டு வேட்டைநாய்க்கு உணவளித்து வளர்ப்பவர்கள்சக வணிகர்களை பிணமாகத்தான் காண வேண்டியிருக்கும்..
மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான அரசு தினசரி அதிகார வர்க்கத்தினால் எத்தி விளையாடப்பட்ட நடைபாதை வணிகர்களின் வணிக உரிமைகளை உறுதிப்படுத்த நடைபாதை வணிகர்கள் ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றி அவர்களுக்கும் தொழில்செய்யும் உரிமையை சட்டப்பூர்வமானதாக்கியது.. எந்த வணிகர் சங்கமும் அதற்காக நன்றி கூறிக்கூட நான் காணவில்லை.. ஆனால் தங்கள் அடிமடியில் கைவைக்கும் பா.ஜ.க வுக்கும் சங் பரிவாரத்துக்கும் வெண்சாமரம் வீசியதன் முதல் விலை ஜெயராஜூம், பெனிக்ஸூம்..
நாளை எடப்பாடியின் சாதியினரின் தொழில் வாய்ப்புகளையும் மார்வாரிகள் பறித்துக்கொள்ள எல்லா சாத்தியங்களும் உண்டு.. இரண்டு சாதிகளிலும் கணிசமான சங்கிகள் உண்டு.. நம் வீட்டுக்கருகில் வளரும் வெறிநாய்கள் இவை..
ஒருநாள் இவை வெறி கொண்டு நம்மை கடிக்கத் துரத்தும் போது நம் வீடுகளில் மார்வாரிகள் நுழைந்திருப்பார்கள்.. வெறிநாயை நாம் வேட்டையாடி திரும்புகையில் நம் கல்லா பெட்டியில் பீடா மென்ற படி அமர்ந்திருக்கும் மார்வாரியிடம் நம் பிள்ளைகள் மூட்டை தூக்கவோ, அட்டிபோடவோ, நின்றிருப்பார்கள்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக