வெள்ளி, 12 ஜூன், 2020

பார்ப்பான் ஞானியாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வம்...

Dhinakaran Chelliah : ஜாதி-வர்ணம்-குலம் என்பது பிறப்பினால் இன்றுவரை தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டும், சுமத்தப்பட்டும்
வரப்படுவது.ஆனால்,வர்ணம் என்பது பிறப்பினால் அல்ல,அது அவர்களது செயல்களாலும் குணத்தாலும் பெறப்படுவது என இந்து வேத வைதீக வர்ணாஸ்ரம தர்மத்தை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் கூறி வருகிறார்கள். இதை அவர்கள் நியாயப்படுத்த துணைக்கு அழைப்பது கீதையில் உள்ள ஒரு ஸ்லோகத்தை தான்.
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்
குண-கர்ம-விபாகஷ:
(பகவத் கீதை 4:13)
இத்தோடு நிறுத்தாமல், புராணங்களில் உள்ள ஒரு சில பாத்திரங்களின் பெயர்களைக் கூறி, இவர்கள் இந்தக் குலத்தில் பிறந்து செயல்களால் உயர் குலத்திற்கு மாறினர் என்பர். இது முற்றிலும்  பொய் என்பதை முந்தைய பதிவு ஒன்றில், ஶ்ரீ ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் எழுதிய ‘தர்ம விமர்சனம்’எனும் நூல் சொல்லும் விளக்கத்தை எழுதியிருந்தேன்.

ஜாதி-வர்ணம்-குலம் என்பது பிறப்பினால் மட்டுமே தீர்மானிக்கப்படுவது என்பதை தெளிவாக விளக்கும் இன்னொரு நூல் ஒன்றினை சமீபத்தில் வாசித்தேன்.இதை நிரூபிக்கும் வண்ணம் அந்த நூலில் ஏழு விதமான உதாரணங்களும் அதற்கான தனித்தனி விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. நூலின் பெயர் ‘வேதசாஸ்திர தத்துவம்’, எழுதியவர் மருவூர் கெ. கணேச சாஸ்திரியார்.1913 ல் வெளிவந்த இந்த நூலின் ஒரு சில பக்கங்களை பிண்ணூட்டத்தில் இணைத்துள்ளேன்.
காலம் காலமாக எளியவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறவர்கள்,இனிமேலாவது வர்ணம் குணம் மற்றும் செய்கையினால் தீர்மானிக்கப் படுகிறது என பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளல் வேண்டும்.இந்த தகவல் தொழில் நுட்ப காலத்தில் இனியும் பொய்கள் நிலைக்காது.
இந்து வேத வைதீகம் சனாதன தர்மம் என்பது மக்கள் வைதீக நூல்களைப் படிக்காகமல் உள்ள வரையே நீடிக்கும்!


A man belonging to a caste that is not touched, and willingly touching the three(higher) castes, shall be killed
-Vishnu Samhita(5.103)
Note: a page from Vishnu Samhita is attached on comments page for your reference
முதல் மூன்று வர்ணத்தவர்களை,
தீண்டத்தகாதவர்கள் தொட்டால் அவர்கள் கொல்லப்பட வேண்டும்
-விஷ்ணு சம்ஹிதா(5.103)
தீவீர இந்து வைதீக சனாதனவாதிகளே: உங்களது கோபமும் ஆத்திரமும் என் மீது திரும்புவதை விட இது போன்ற நூல்களை எழுதியவர்கள் மீதும், பிரிவினைகள் மட்டுமே உள்ள இந்து வேத வைதீக சனாதன தர்மத்தின் மீது திரும்பட்டும்.நான் நூலில் உள்ளதை உள்ளபடியே எழுதியிருக்கிறேன். விஷ்ணு சம்ஹிதா நூலின் 1907 ஆண்டு பதிப்பின் பக்கங்களை பிண்ணூட்டத்தில் இணைத்துள்ளேன்.இந்த நூலை மொழியாக்கம் செய்தவர் மன்மதநாத் தத் சாஸ்திரி அவர்கள்.

வைதீகமாயிருந்தாலும் லௌகீகமா யிருந்தாலும் அக்னியானது எப்படி மேலான தெய்வமாகவே யிருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞாநியாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வம்” மநுதர்ம சாஸ்திரம் 9:317
தீவீர இந்து வைதீக சனாதனவாதிகளே: உங்களது கோபமும் ஆத்திரமும் என் மீது திரும்புவதை விட இது போன்ற நூல்களை எழுதியவர்கள் மீது வரட்டும், நான் நூலில் உள்ளதை உள்ளபடியே எழுதியிருக்கிறேன்.மொழியாக்கம் தவறு,இது இயக்க வெளியீடு என்பவர்களுக்காக மநு தர்ம சாஸ்திர நூலின் 1865 ஆண்டு பதிப்பின் பக்கங்களை பிண்ணூட்டத்தில் இணைத்துள்ளேன்.

1 கருத்து: