செவ்வாய், 30 ஜூன், 2020

வடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுடுமணலில் உருளவிட்டு கொலை செய்தார்கள் .. கருணா பேட்டி.. வீடியோ


 புலிகளின் முன்னாள் தளபதி கேர்னல் கருணா அவர்களின் இந்த காணொளி பேட்டி பல விடயங்களை கூறுகிறது ..
குறிப்பாக ,கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 60 பெண் போராளிகள் வடக்கு புலிகளால்  நிர்வாணமாக்கப்பட்டு சுடு மணலில்  உருளுமாறு சித்திரவைதை செய்யப்பட்டு  பின்பு கொல்லப்பட்டார்கள் . .
மேலும் இந்த பேட்டியில் அவர் கூறும்போது :
புலிகள் இயக்கம் ஒரு குறு நில பரப்பிற்குள்  எப்படி தள்ளப்பட்டார்கள்?
இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு அவர்கள் எப்படி வந்தார்கள் ?
யார் கொடுத்த வாக்குறுதிகள் அடிப்படையில் முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்தார்கள்?
கிழக்கு மாகாணத்தில் இன்று கூட ஒரு தமிழன் கூட சிங்கள கட்சிகளில் தேர்தலில் வெற்றி பெறவில்லை . ஆனால் வடக்கு மாகாணத்தில் சிங்கள கட்சியான யு என் பியில் இருந்து விஜயகலா மகேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார்
வடக்கில் என்னதான் தமிழை பற்றி பேசினாலும் ஒரு சிங்கள கட்சி உறுப்பினரை வடக்கு தமிழ் மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் . அவரும்  புலிகளை சொல்லித்தான் வந்திருக்கிறார்
இந்த இடத்தில கிழக்கு மாகாண மக்களை நீங்கள் பாராட்டவேண்டும்.
மட்டக்களப்பு அம்பாறை மக்களுக்காக நான் நிறைய சேவை செய்துள்ளேன்.
நான் 24 வருடம் ஆயுதம் தூக்கி போராடி இருக்கிறேன் . 10 வருடம் பாராளுமன்றத்தில் இருந்து குரல் கொடுத்திருக்கிறேன்
இன்று மட்டக்களுப்பு மாவட்டத்தில் இருந்த குடிதண்ணீர் பிரச்சனயில் இருந்து மின்சார மற்றும்  போக்குவரத்து பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைதிருக்கிறேன்.

இன்றும் கூட மட்டக்களப்பு மாவட்ட குடிதண்ணீர் திட்டம் நடந்து கொண்டு இருக்கிறது . அது என்னால்தான் எனபதை புரிந்து கொளல்வேண்டும் . 
இது போன்ற பல முக்கிய கேள்விகளுக்கு உண்மையிலேயே இந்த காணொளி பதில் கூறுவதாக இருக்கிறது.
எந்த ராணுவ ஆய்வாளரும் கூறுவார்கள் . கிளிநொச்சி ராணுவ முகாம் எப்படிபட்டது என்பதை கூறுவார்கள்
அதை கைப்பற்றியது எனது தலைமையில்தான்!
திரு கருணா அவரகள் என்ன சொன்னாலும் பொய் என்ற முடிவுக்கு வருபவர்களுக்கு அந்த மனோ நிலை ஒரு வசதியாகத்தான் இருக்கும்
 ஆனால்  உண்மைகள் எப்போதும் உறங்காது .. காலம் கடந்தாவது அவை வெளிவரும் . எனபதை இவரின் பேட்டியை பார்க்கும்போது தோன்றுகிறது.
மொத்தமாக புலிகள் இயக்கம் ஒரு சர்வாதிகார  இயக்கம் என்பதில் மாற்று கருத்து இல்லை .
அந்த இயக்கத்தில் இருந்த பலரும் தெரிந்தோ தெரியாமலோ இந்த பாசிச வலைக்குள் சிக்குண்டுவிட்டார்கள் .
அதில் இருந்து பலரும் காலத்துக்கு காலம் விடுபட்டு விட்டார்கள்
இன்னும் பலர் அந்த பாசிச மயக்கத்தில் இருந்து விடுபடாமல்  புலிகளின் பணத்தை கையாடல் செய்து  வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருப்பவர்களாகும்.
இந்த புலிகளின் பணத்திற்காக இன்றும் தமிழகத்தில் பலர் புலி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள் ...
வேறு சிலர் கடந்த காலத்தில் தங்களின் புலி ஆதரவு என்பது ஒரு தவறு என்று தெரிந்தும் அதை மூடி மறைக்க இன்று அடிக்கடி பிரபாகரன் புகழ் பாடுகிறார்கள்  இந்த ரகத்தினர் பெரிதும் பெரியார் பெயரையும் உச்சரிப்பவர்களாகும்.
இந்த காணொளி பலரின் சந்தேகங்களை தெளிவாக்க உதவும் .இது ஒரு பழைய காணொளிதான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக