வியாழன், 4 ஜூன், 2020

குஷ்பூ... லாக்டவுனில் எடைகுறைப்பு 50 வயதிலும் ...


சுடிதாரில் ஃபிரி ஹேர் படு பிஸி... Kalaimathi- tamil.filmibeat.com/ : சென்னை: நடிகை குஷ்புவின் க்யூட் எக்ஸ்பிரஷன்களை பார்த்த நெட்டிசன்கள் பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மும்பையை பூர்விகமாக கொண்ட நடிகை குஷ்பு, இந்தி படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்த அவர், தமிழில் வெற்றி கொடியை நாட்டினார். 80, 90களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்த குஷ்பு, ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பலருடனும் ஜோடி போட்டுள்ளார்.
பின்னர் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக்கொண்டு தமிழ் நாட்டிலேயே செட்டிலான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ளார்.

இப்போதும் டிவி, சீரியல், சினிமா என படு பிஸியாக உள்ளார் குஷ்பு. ஆனாலும் குடும்பத்தினருடனும் நேரத்தை கழித்து வாழ்க்கையை சரியாக பேலன்ஸ் செய்து வருகிறார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் குஷ்பு, சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வரும் குஷ்பு, தனது கணவர் மீதான காதலையும் அடிக்கடி சமூக வலைதளம் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.





சுடிதாரில் ஃபிரி ஹேர்

அண்மையில் தனது கணவர் எடுத்த போட்டோக்கள் என சேலையில் அசத்தலாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது சுடிதாரில் ஃபிரி ஹேர் விட்டப்படி இருக்கும் கலக்கல் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் நடிகை குஷ்பு.
முகத்தை சுளித்தும் சிரித்தும் பல செல்பிக்களை ஷேர் செய்துள்ளார். அவரது க்யூட் எக்ஸ்பிரஷன்களை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு வயசே ஆகல மேடம், இன்னமும் அப்படியே இருக்கிறீர்கள் என பிரமித்துள்ளனர். அதே பழைய குஷ்பு மாதிரி இருக்கிறீர்கள் என்றும் க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ், ஸ்டன்னிங் லுக் என புகழ்ந்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்கள்.

 இதோபோல் மற்ற சில போட்டோக்களையும் ஷேர் செய்திருகிறார் குஷ்பு. ஃபுல் ஸ்லீவ் டாப்ஸ் அணிந்துள்ள குஷ்பு எந்த ஆபாரணமும் அணியாமல் சிம்பிளாக சிக்கென இருக்கிறார். எடை குறைந்து, அள்ளும் அழகில் உள்ள குஷ்புவின் இந்த செல்பிகளை பார்த்தும் ஜொள்ளுவிட்டுள்ளனர் நெட்டிசன்கள். ஸ்லீம் ஆகிட்டீங்களே.. ஸ்லீம் ஆகிட்டீங்களே.. தலைவர் படத்துக்காக ஸ்லீம் ஆகிவிட்டீர்களா என்றும், 90களில் நடித்த படங்களில் இருந்ததை போல ரொம்ப இளமையாக இருக்கிறீர்கள் என்றும் புகழ்ந்துள்ளனர் நெட்டிசன்கள். இந்த உடையில் ரொம்பவே அழகாக இருக்கீறீர்கள் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக