ஞாயிறு, 7 ஜூன், 2020

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஷார்ஜா (39 வயது) திடீர் இறப்பு


tamil.indianexpress.com: கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39. சீரஞ்சீவி சார்ஜா மறைவுக்கு நடிகை பிரியாமனி, நடிகர் அல்லு சிரீஷ், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜா இன்று மதியம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சு பேச்சு இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். கன்னட நடிகர் சீரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால உயிரிழந்தது கன்ன திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தமிழ் நடிகை மேக்னாவின் கணவர். மேலும், சீரஞ்சீவி சார்ஜா நடிகரும் இயக்குனருமான அர்ஜூன் சார்ஜாவின் உறவினர்.

பெங்களூருவில் பிறந்த சிரஞ்சீவி சார்ஜா தொடக்கத்தில் சினிமா வியாபாரத்தில் இருந்தார். பின்னர், அவருடைய மாமா அர்ஜூன் சார்ஜா படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார். பின்னர், 2009-ம் ஆண்டு வாயுபுத்ரா என்றா படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படம் அர்ஜூன் சார்ஜாவின் சகோதரர் கிஷோர் சார்ஜாவால் இயக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக