திங்கள், 8 ஜூன், 2020

கருணா பிரபாவுக்கு எழுதிய கடிதம் : 32 இயக்க பொறுப்பாளர்களில் ஒருவர் கூட மட்டக்களப்பு அம்பாரை ... கிடையாது

Reginold Rg : மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட சிறப்பு தளபதி கேணல் கருணா அம்மானால் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 2004 ஆண்டு எழுதப்பட்ட கடிதம்.....
மதிப்புக்குரிய தலைவர் அவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலை தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன் பொதுவாக எமது போரில் வரலாற்றில் எங்கள் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டம் பெரும் பங்காற்றியுள்ளது என்பதை எவருமே மறுக்கவோ மறைக்கவோ முடியாது அது மட்டும் அல்ல பல படுகொலைகளையும் அழிவுகளையும் எங்கள் மாவட்டங்கள் சந்தித்துள்ளன இதுவரை நடந்த போராடதில் 6800 மட்டக்களப்பு அம்பாரை போராளிகள் களத்தில் வீரச்சாவு அடைந்துள்ளார்கள் இவர்களில் கிட்டதட்ட 4000 வீரர்கள் உங்களின் கட்டளையை ஏற்று வந்து யாழ் வன்னி மண்ணில் வீரச்சாவு அடைந்துள்ளார்கள்
நாங்கள் வன்னி களமுனையில் போரிட்டு கொண்டிருந்த போதெல்லாம் பல பல பிரதேசவாத கருத்துக்களையும் சிக்கல்களையும் விமர்சனங்களையும் எதிர் கொண்டு வந்திருக்கிறோம்
இவைகள் யாவும் உங்களுக்கு தெரிந்த விடயங்கள் இருந்தாலும் உங்கள் மீதுள்ள பக்தியின் காரணமாக எல்லா விடயங்களையும் சமாளித்தே வந்திருக்கிறோம் தற்போது இந்த பிரச்சினை பெரிதாகி விட்டுள்ளது
இதற்காக காரணத்தையும் உங்களுக்கு தெளிவாக்க கடமை பட்டுள்ளேன்


இதுவரை 32 தமிழீழ பொறுப்பாளர்கள் உங்களால் நியமிக்கப்பட்டுள்ளார்கள் இவர்களில் எவருமே மட்டக்களப்பு அம்பாரையை செந்தவர்கள் கிடையாது போர் மிக உக்கிரமான நடைபெற்ற காலங்களில் இங்குள்ள மக்களும் போராளிகளும் இதை உணர்ந்து கொள்ள விட்டாலும் தற்போது ஏற்பட்டுள்ளது இந்த அமைதியான சூழ்நிலையில் இதை அனைவரும் அவதானித்து பல கேள்விகளை எழுப்புகிறார்கள்
43இதற்கு நாங்கள் பதில் கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம் அதுமட்டுமல்ல இதுபோன்ற வெளி மாவட்ட தமிழீழ துறை பொறுப்பாளர்கள் இங்கு வேலை செய்வதால் பல சிக்கல்கள் உருவாகி கொண்டே இருக்கின்றன அவர்களால் எங்களின் மக்களின் உணர்வுகளையோ போராளிகளின் உணர்வுகளையோ புரிந்து கொள்ள முடியாது இதைவிட பெரிய விடயம் பிரதேசவாதம் இதுபற்றி தமிழீழ துறை பொறுப்பாளர்களுககு அறவே தெரியாது இவ்வாறு இருக்கும் போது இவர்களால் எவ்வாறு இங்கு நிர்வாகம் செய்ய முடியும் இதை விட வேதனையான விடயம் என்னவென்றால் இவ்வளவு தமிழீழ நிர்வாக துறை பொறுப்பாளர்களும் சொகுசு வாகனங்களில் உலா வரும்போது 400 மேற்பட்ட மட்டக்களப்பு அம்பாரையை சேர்ந்த ஜெயந்தன் படையணி போராளிகள் வன்னி களமுனை காவலரண்களில் சென்றி பார்க்கிறார்கள்
இது எந்தவகையில் நீதியாகும் இந்த சமாதான காலங்களில் எந்தவொரு வீரனும் தனது சொந்த இடத்தில் இருப்பதையும் தனது உறவுகளோடு இருப்பதையுமே விரும்புவான் இதைப்பற்றி அங்குள்ள பொறுப்பாளர்கள் சிந்திப்பதாக தெரியவில்லை இன்று இந்த வாய்ப்பான காலத்தில் அந்த போராளிகள் எதுவித வளர்ச்சியும் அற்ற நிலையில் காவலரண்களில் முடக்கப்பட்டு கிடக்கிறார்கள் இனி ஒருபோதும் இங்கிருந்து படைநகர்த்துவதையோ இங்குள்ள வீரர்கள் அங்கு வந்து மடிவதையோ இங்குள்ள பெற்றோர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் இதை நீங்களும் நன்கறிவீர்கள் என்னை பொறுத்தவரை இதுவரை காலமும் வட தமிழீழ மக்களுக்காக விலை மதிக்க முடியாத உயிர்களையும் கொடுத்து திருப்திகரமாக கடமை செய்துள்ளதாகவே உணர்கின்றேன் தற்போது இந்த வாய்ப்பான காலகட்டத்தில் கிழக்கு மக்களுக்கு கடமை செய்வதையே விரும்புகின்றேன் அது மட்டும் அல்ல இந்த மக்களுக்காக இங்கு போரிட்டு இவர்களின் காலடியில் மடிவதையே எமது இறுதி லட்சியமா கொண்டுள்ளேன் இந்த விடயத்தில் எவரும் தலையிடுவதை நான் விரும்பவில்லை தமிழீழ நிர்வாக பொறுப்பாளர்களை தவிர்த்து நேரடியாக உங்களின் கீழ் சுதந்திரமாக இங்கு பணியாற்றுவதையே விரும்புகிறேன்
இதனால்தான் இங்கு புலனாய்வுத்துறையும் நிறுத்தியுள்ளேன்
நாங்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லவோ உங்களை வெறுக்கவோ இல்லை மாறாக உங்களை எங்களின் கடவுளாகதான் பார்க்கிறோம் சிலவேளை இந்த முடிவு உங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தலாம் இதற்காக உங்களிடம் மன்னிப்பும் கேட்க்கிறேன் ஏனெனில் இங்குள்ள மக்களினதும் போராளிகளினதும் உணர்வுகளுக்கு மதிப்பளியாமல் அவர்களின் அபிலாசைகளை சுட்டிக்காட்டாமல் இருந்த வரலாற்று தவறை நான் விட விரும்பவில்லை இதனால்தான் இம்முறை உங்களுக்கு தெளிவாக உணர்த்துகிறேன்
இங்குள்ள மக்களை நீங்கள் நேசித்தால் இங்குள்ள போராளிகள் பொறுப்பாளர்கள் மீது நம்பிக்கை இருந்தால் எங்களை உங்களின் தலைமையின் கீழ் நேரடியாக சுதந்திரமாக செயற்பட விடுங்கள் இவ்வாறாக கருணா தலைவர் வே .பிரபாகரன் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக