புதன், 17 ஜூன், 2020

சென்னைக்குக் கூடுதலாக 3,000 செவிலியர்கள்!

சென்னைக்குக் கூடுதலாக 3,000 செவிலியர்கள்! மின்னம்பலம் :  சென்னையில் கொரோனா பரவல் உயரும் நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் கொரோனா சிகிச்சையில் பணியாற்ற கூடுதலாக 3,000 செவிலியர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் கொரோனா சிகிச்சையில் பணியாற்ற கூடுதலாக 3,000 செவிலியர்கள் வரவழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு மருத்துவத் தேர்வு வாரியத்தின் மூலமாக 2,000 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக