வெள்ளி, 12 ஜூன், 2020

அன்னை இந்திரா காந்தி, மாநிலங்களவையில் 16-08-1983-ல் ஈழ விவகாரம் பற்றி ஆற்றிய உரை

அன்னைஇந்திரா காந்தி   - அமரர் அ.அமிர்தலிங்கம்
அன்னை இந்திரா ஆற்றிய உரை துணை தலைவர் அவர்களே! நான்
பாராளுமன்றத்தில் இறுதியாகப் பேசிய பின், இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத தமிழ் மக்களின் பிரதான அரசியற் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆன திரு. அ அமிர்தலிங்கம் யாழ்ப் பாணத்திலிருந்து டெல்லி வந்தார். அவர் என்னைச் சந்தித்தார். வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சருடனும், ஏனைய அமைச்சர்கள் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடனும் பேசினார்.
 இலங்கையில் சிறுபான்மைச் சமூகம் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டதைப் பற்றி நெஞ்சைத் தொடும் விவரங்களைத் தந்திருக்கிறார். இங்கு பேசிய உறுப்பினர்கள் போலவே நான் தனிப்பட்ட முறையிலும், எனது அரசாங்கமும் எனது கட்சியும் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளோம். இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற இனக்கொலை, துன்பம், அந்தி ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம். ஆனால் எமது உணர்ச்சி எவ்வளவு ஆழமாக இருந்தாலும் அரசாங்கம் கூடிய கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டி இருக்கின்றது. ஏனெனில் நாம் விருப்பமின்றியோ தயக்கமாகவோ, இருப்பதால் அல்ல, ஆனால் நாம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் எமது சொற்கள், எமது செயல்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவியாக இருக்குமா இன்றேல் தீமை பயக்குமா என்று யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.


இந்த இடத்தில், இலங்கையில் தனக்கு மனக் கவலையும் வெறுப்பும் ஏற்பட்ட போதும், என்னுடனும் ஏனையோருடனும் நடந்த உரையாடல்களில் திரு. அமிர்தலிங்கம் காட்டிய அரசியல் ஞானத்திற்கு என் உயாந்த பாராட்டை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தனது கட்சியின் சார்பில் எமது நல்லெண்ணச் சேவையைத் திரு அமிர்தலிங்கம் வரவேற்றுள்வார். இலங்கை அரசாங்கத்தோடு பேச்சு வார்த்தையைப் பொறுத்தவரை எமது சேவை, நிலைமையை மாற்றியிருப்பதாக அவர் புதுடில்லி வந்தவுடன் கூறினார். தனது கட்சியும் தமிழ் மக்களும் பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், எப்படியும் திருப்திகரமற்ற முந்திய வாக்குறுதிகளைப் புதுப்பிப்பதன் அடிப்படையில் நாம் பேச்சு வார்த்தையில் இறங்க முடியாதென்றும் ஆனால் இந்தியா அளிக்க முன்வந்த நல்லெண்ணச் சேவை ஓர் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.

தமது கட்சி பல வருடங்களாக ஒன்றுபட்ட இலங்கைக்கு உட்பட்டு தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை வென்றெடுக்க உழைத்ததாகவும், சிங்களப் பெரும்பான்மையின் உதாசினமும் வளர்ந்து வந்த விரோத மனப்பான்மையும்' தம்மைப் பொறுமையின் எல்லைக்குக் கொண்டு வந்து, அந்த அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்துவது பயனற்றதென்ற முடிவுக்குத் தாங்கள் தள்ளப் பட்டதாகவும் திரு. அமிர்தலிங்கம் பின் எம்முடன் உரையாடும் போது சுட்டிக் காட்டினார். ஆனால் எமது தலையீட்டினால் தாம் ஆலோசிக்கக் கூடிய புது வழி திறந்திருப்பதாக கூறினார்.

நான் முன்பு கூறியது போல் இப்பிரச்சனைக்குத் தீர்வு, மகாநாட்டு மேசையில்தான் காணப்பட வேண்டும். எப்படி, எப்போது தமிழ் தலைவர்களோடு மகாநாட்டை நடத்துவ தென்பதை இலங்கை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். உடனடித் தேவை மக்கள் மத்தியில் ஓர் பாதுகாப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஓர் நிரந்தரத் தீர்வைத் தேடும் முயற்சியையும் உடனடியாக ஆரம்பிப்பதும் அவசியமானதே. நாம் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதால் எந்த வழியில் நாம் உதவி புரிய முடியுமோ புரிய விரும்புகிறோம். ஓர் சமரசத் தீர்வு காணப்பட வேண்டுமானால் இரு தரப்பினரும் ஒருவரோடு ஒருவர் பேச வேண்டும். இதற்கு வழி வகுப்பதற்கு இலங்கைக்கு ஒரு தூதுவரை அனுப்ப நான் தயாராய் இருக் கிறேன். இப்போது நாம் ஜனாதிபதி ஜயவர்த்தனாவோடு தொடர்பு கொள்ளலாம். அதற்கிடையில் சென்னையில் சில நாட்கள் தங்கிய பின் திரு. அமிர்தலிங்கம், தமது கட்சியின்ருடன் ஆலோசனை நடத்துவதற்காக யாழ்ப்பாணம் செல்கிறார்.

இலங்கையில் ஏற்பட்ட சோகமான நிகழ்வுகள் பற்றி எமது நாட்டில் ஏற்பட்ட கவலையும் அக்கறையும் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியான நான்காவது வாரமாக வெளியிடப்படுகிறது. எம் தமிழ் நாட்டு சகோதர சகோதரிகள்னதும் எல்லா இடங்களிலும் இருக்கும் தமிழ் மக்களினதும் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம். இந்த நாட்டின் எந்த ஒரு பகுதியோ எந்த ஒரு அரசியற் பிரிவோ என்று இன்றி, நாடு முழுவதிலும் அரசியற் கட்சி வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு ஆழமான உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை இச்சபையில் இன்று நடந்த விவாதம் காட்டுகிறது.

 எமது நிலையிலுள்ள கஷ்டத்தையும் நுட்பத்தையும் உணர்ந்து இச்சபையின் கௌரவ உறுப்பினர்கள் நடந்து கொள்வதற்கு நான் நன்றி பாராட்டுகிறேன், இச் சூழ்நிலையில் தவிர்க்க முடியாத கட்டுப்பாட்டைக் கவனித்து பொதுவில் ஆதரித்திருக்கின்றனர். ஆனால் இக்கட்டுப்பாடு உறுதியோடு இணைந்தது. நாம் நிலைமையை மிகவும் உன்னிப்பாகவும் ஆவலோடும் அவதானித்து வருகின்றோம் பாராளுமன்றத்தினதும், இந்திய மக்களினதும் தொடர்ந்த ஆதரவோடு பேச்சு வார்த்தைக்கு ஏற்ற ஓர் சூழ்நிலையை உருவாக்க முடியுமென்று நம்புகிறோம். இதுவே வகுப்பு: விரோதத்தைப் போக்குவதற்கு முதற்படியாக அமைந்து, ஓர் நிலையான அரசியற் தீர்வுக்கு, ஆக்க பூர்வமான நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும். 16-08-1983-ல் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி, இந்திய மாநிலங்களவையில் ஆற்றிய உரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக