புதன், 20 மே, 2020

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றை புலிகளின் மடியில் தேடாதீர்கள்!.. Rubasangary Veerasingam Gnanasangary :

செல்வம் வைரம் : தோழர் திலீபனின் மரணத்தை கொச்சைபடுத்துவதை தவிர்க்கவும் சொட்டு தண்ணீர் கூடுடிக்காமல் உயிர் நீத்தவர் திலீபன் இன்றும் கூட கண்ணாடி அணிந்திருக்கும் அவரது முகம் என் ஞாபகத்தில் உள்ளது...
Rubasangary Veerasingam Gnanasangary :  மரணத்தை யாரும் கொச்சைப் படுத்தவில்லை. ஆனால் தியாகம் என்று எங்களுக்கு பாடம் எடுக்காதீர்கள். வற்புறுத்தலின் பேரால் திலீபன் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.
திலீபனின் பிணத்தை வைத்து நடாத்திய திருவிழாக்கள் முடியும் தருவாயில் குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிருவர் கட்டாயப்படுத்தி தற்கொலை செய்துகொள்ள வைக்கப்பட்டனர். இலங்கை தொலைக்காட்சி ஊடகவியலாளட்கள் உட்பட புலிகளின் பாதுகாப்பில் இருந்த இராணுவத்தினர் சிலர் கொலைசெய்யப்பட்டு பொது மக்களுக்கு காட்சிப் படுத்தினர். மறுநாள் இந்திய இராவத்தினர் மீது தாக்குதல் நடாத்தி போரை ஆரம்பித்து வைத்தனர். முட்டாள் பிரபாகரனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒன்றா இரெண்டா எல்லாவற்றையும் மறந்துவிட...
 வளன்பிச்சைவளன் செல்வம் வைரம் அவர் தியாகத்தை யாம் கொச்சை படுத்துவதாக தாம் தவறாக எண்ணிக் கொண்டு உள்ளீர். உண்ணாவிரதம் ஆரம்பம் ஏன் என்பதே அன்று பிரபாகரன் பேச்சு வார்த்தை க்கு வரும் போது அவரை கைது செய்ய அல்லது சுட்டுக் கொல்ல தீட்சித் உத்தரவு அது நல்லெண்ண இந்திய அதிகாரிகள் அதை புலிகளுக்கு தெரியப் படுத்த அங்கு செல்வதை தவிர்க்க உண்ணாவிரதம் எனும் திசை திருப்பல் துவங்கப் பட்டது. புலிகள் திலீபனை பலி கொடுத்தார்கள் என்பதே உண்மை.....
 Arul Narayana : உங்களின் பதிவில் இருப்பது போல் 50 இலட்சம் மாதாமாதம் இந்திய அரசால் புலிகளுக்கு தரப்பட்டது என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்? *திமுக ஆட்சியை கலைத்ததில் சூனாசாமியை பற்றி மூச்சு கூட விடாமல் பாதுகாப்பதின் இரகசியமென்ன? * திலீபன் உண்ணாவிரதத்தை கூட கேவலப்படுத்தவும் உங்களுக்கு வருமென்றால் ...  மற்ற போராளி குழுக்கள் அந்த நேரத்தில் என்ன செய்து சாதித்து கொண்டிருந்தனர்? பிரபாகரனின் பிம்பத்தை உடைப்பதாக எண்ணி... உங்களின் பிம்பத்தை தான் உடைத்துக் கொண்டுள்ளீர்.....


 Rubasangary Veerasingam Gnanasangary: எனது கருத்து புலிகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் உண்மைக்குப் புறம்பான மாயத் தோற்றத்துக்கு எதிரானவை மாத்திரமே. என்னைப் பொறுத்தவரையில் ஈழப்போராட்டம் இந்திய இலங்கை ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பின்னர் நடந்தவை எல்லாமே self destruction/ சுய அழிவு. ....

Arul Narayana : எந்த பக்கம் அதன் எண் என்ன என்று சொல்லுங்கள் பதிவிடுகிறேன் இப்பொழுதே.. இந்திய இலங்கை உடன்பாடே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்பதை ஆசிரியர் வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களே கூறியுள்ளார்கள் எழுதியும் உள்ளார்கள் தோழர்....

 Rubasangary Veerasingam Gnanasangary : வீரமணி உட்பட திராவிட இயக்க தலைவர்கள் புலிக்கு தடவி விட்டதால்தான் எமக்கு இந்த நிலை ஏற்பட்டது. புலிகளால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு நன்மையை கூறிவிட்டு நீங்க எதவேனும்னாலும் பேசுங்க....

சிவசங்கரன் சுந்தரராசன் : 203 பக்கத்தில் பணம் கொடுப்பது மற்றும் பெறுவது பற்றி ஒப்பந்தத்தில் சேர்க்கச்சொன்னது பற்றியும் அதை கேட்டவுடன் ஆட்டம் கண்டுவிட்டதாகவும் அந்த தொகை கருப்பு பணமாக உங்களுக்கு மாதமாதமாக வரும். என்றும் இதை சேர்த்தால் இந்தியாநிலும் இலங்கையில் பெரியதொரு அரசியல் சூறாவளி ஏற்ப்படும் என்றும் பாலசிங்கமே ஏழுதியுள்ளார் என்பதை அறிக.....

வளன்பிச்சைவளன் Arul Narayana பக்கம் 196, 197, 198 வெளியிடுங்கள் உண்மை உலகறியட்டும்

 Arul Narayana : உலகிற்கு சொல்ல வருவதை உணர்த்துங்கள் தோழர்....

 Rubasangary Veerasingam Gnanasangary : self destruction என்று நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். ஒவ்வொரு தடவையும் சமாதான ஒப்பந்தங்களை முறித்து போரை ஆரம்பித்தவர்கள் புலிகளே. முள்ளிவாய்க்கால் பொதுமக்கள் மட்டும் தஞ்சம் அடைவதற்காக முன்கூட்டியே No fire zone என்று பிரகடனப் படுத்தப்பட்ட பிரதேசம். பிரபாகரன் எதற்காக அங்கே போய் ஒழியனும். புலிகளின் பிடியில் இருந்த மக்கள் தப்பியோடும்போது எதற்காக புலிகள் மக்கள்மீது தாக்குதல்கள் நடத்தினார்கள். அது சரி, புலிகள் சரணடையவில்லை என்று யார் உங்களுக்கு சொன்னார்கள்?...

 Arul Narayana : இந்திய உளவு நிறுவனங்களின் சதி என்று விடுதலை இராசேந்திரன் ஐயா புத்தகமே வெளியிட்டுள்ளார். புலிகள் ஒருபோதும் ஒப்பந்தங்களை மீறியதில்லை. மீறியது சிங்களம். அதிலும் "ரா" சதிகளும் உண்டு. No fire zone பகுதியில் புலிகள் போய் ஒளிந்து கொண்டார்கள் என்று எந்த அடிப்படையில் சொல்கின்றீர்? விளக்கவும் தோழர்...

வளன்பிச்சைவளன் : இதை பொறுமையாக வாசியுங்கள் 50 லட்சம் ராசீவ் தருவதாக வாக்களித்தும் பிரபாகரன் அதை ஏற்றுக் கொண்டதும் பின்னர் 203 பக்கத்தில் இந்த ஜென்டில் மேன் அக்ரிமெண்டை பிரபாகரன் எழுதி கேட்டதும் அது ஜென்டில் மேன் அக்ரிமென்டாக இருக்கட்டும் என ராஜீவ் கூறியதும் இப் பக்கங்களில் உள்ளன இது பட்டுவாடா சம்மந்தமான வெளிநாட்டு பத்திரிக்கை தகவல் எனது தொடரில் உள்ளது காண்க...

 Rubasangary Veerasingam Gnanasangary : ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றை புலிகளின் மடியில் தேடாதீர்கள். அந்த 50 லட்சம் கதை உண்மையானது. உளவு நிறுவனங்களின் சதிகளை விட்டுவிடுங்கள். தமிழ் மக்களின் உயிர் வாழும் அடிப்படை உரிமையைக்கூட மதிக்காத புலிகளின் ஏக பிரதிநித்துவ பாசிச நடவடிக்கைகளே எம்மை அழித்தது. தியாகு, சுபவீ, விடுதலை இராசேந்திரன் எல்லோரையும் ஈழத்து அழைத்து வாருங்கள். பழகிப் பார்ப்போம்....

 Rubasangary Veerasingam Gnanasangary பிரபாகரன் செத்துப்போன படங்கள் வீடியோகளை காண்பித்தும் அது பிபாகரன் இல்லை என்று சொன்னவர்களிடம் எதை நம்பவைக்க முடியும்?...

 வளன்பிச்சைவளன் : இதை பொறுமையாக வாசியுங்கள் 50 லட்சம் ராசீவ் தருவதாக வாக்களித்தும் பிரபாகரன் அதை ஏற்றுக் கொண்டதும் பின்னர் 203 பக்கத்தில் இந்த ஜென்டில் மேன் அக்ரிமெண்டை பிரபாகரன் எழுதி கேட்டதும் அது ஜென்டில் மேன் அக்ரிமென்டாக இருக்கட்டும் என ராஜீவ் கூறியதும் இப் பக்கங்களில் உள்ளன இது பட்டுவாடா சம்மந்தமான வெளிநாட்டு பத்திரிக்கை தகவல் எனது தொடரில் உள்ளது காண்க... சிவசங்கரன் சுந்தரராசன் : 201 மற்றும் 202 பக்கங்களை  சேர்த்து வாசிக்கவும்...

Arul Narayana : பணத்தை அடிப்படையாக வைத்தா பேச்சுவார்த்தை நடத்தினார்கள்? முழுவதும் படிங்க தோழர். ஏன் உங்களின் எண்ணம் அந்த பணத்தில் மட்டும் இருக்கிறது? எத்தனையோ விடயங்களை பேசியுள்ளார்களே. அதைப்பற்றி ஏன் பேசாமல் இருக்கின்றீர்? அந்த பணத்தை கூட ராஜீவ்தான் தருவதாக வாக்கு கொடுத்தது. புலிகளுக்கு, 50 இலட்சம் என்பது அன்று பெரிய தொகைதான் என்பதால் ஆச்சர்யபட்டார்களே ஒழிய அந்த பணத்திற்காக தங்களின் மக்களை விற்கவில்லை. மீண்டும் ஈழம் சென்றதும் பிரபாகரன் அவர்களின் சுதுமலை பிரகடனம் அதற்கு சாட்சி. முழுவதுமாக படியுங்கள் தோழர்...

சிவசங்கரன் சுந்தரராசன் : எழுதியது பாலசிங்கம் தான். திலீபன் உண்ணாவிரதம் செப்டம்பர்11. பிரபாகரனை தீட்சித் ஹர்ஹரத் சிங்கை சந்திக்க. 14 தேதி வரும் போது சுட்டுக்கொல்லுமாறும் சொன்னது செப்டம்பர் 9ல். திலிபன் உண்ணாவிரதம் தொடங்கியது என்பது பிரபாகரன் ஹர்ஹரத் சிங் அவர்களை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே பிரபாகரனால் அகிம்சை வழியில் பிரபாகரனால் திலீபன் கொல்லப்பட்டார். இதற்கு முன் யாழ் பல்கலைக் கழகத்தில் மதிவதனி உட்பட நான்கு மாணவிகள் சாகும் வரை உண்ணாவிரதம்  இருந்த போது கடத்தி உயிர் காப்பாற்றிய பிரபாகரன் தான் திலீபனை கொன்றார்....

Ruban Mariarajan :இன்றைய ஈழத்தின் இளசுகள்,போராட்டம் குறித்து உசுப்பேத்தும் தமிழ் அரசியல்வாதிகள் அறியவேண்டிய விடயங்களை எழுதுங்கள்.நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக