புதன், 20 மே, 2020

உஸ்மான் ரோடு... யார் இந்த உஸ்மான்? Khan Bahadur Sir Mohamad Usman

Mitheen : சென்னையின் மிக முக்கியமான ஒரு சாலையின் பெயர் உஸ்மான் ரோடு.யார் இந்த உஸ்மான்.
Khan Bahadur Sir Mohamad Usman
1916 ம் ஆண்டு ஜஸ்டிஸ் பார்ட்டி என அழைக்கப்பட்ட நீதிக் கட்சியில் சேர்ந்த உஸ்மான் சில ஆண்டுகளிலேயே சென்னை மாகானப் பொதுச் செயலாளராகத் தேர்வானார்.
1920 ல் நீதிக் கட்சி வேட்பாளரான உஸ்மான் சென்னை நகர முஸ்லிம் தனித் தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினரானார்.
1932-1934 திரு .பொப்பிலி ராஜா மாகாண பிரதம மந்திரியாக இருந்த போது உஸ்மான் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
உஸமான் முனைப்புடன் செயல்படுத்திய முக்கிய சீர்திருத்தங்கள்.
 சென்னை சிறுவர் குற்றவாளிகள் பள்ளிச் சட்டம் 1925ஐ கொண்டு வந்தார்.இதன் காரணமாகவே சிறுவர் குற்றவாளிகள் கல்வி பயில முடிந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1927 ம் ஆண்டு.இச்சட்டத்தின் வாயிலாக ஒப்பந்தக்காரர்களாலும் தரகர்களாலும் இன்னலில்லாமல் தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு பெற்றனர்.
1930ம் ஆண்டு விபச்சார ஒழிப்புச் சட்டம்.

காவல்துறை சீர்திருத்த நடவடிக்கைகள் .ஆயுதப்படை,மாவட்ட புலனாய்வு அமைப்புகள் விரிவாக்கம்,செனானையைப் போல மதுரை திருச்சி நகர காவல் பிரிவுகளில் மாற்றம் ஆகியவை அவரின் முக்கிய செயல்பாடாக இருந்தது.
பெண்கள் தர்ம நிதியத்தின் பொதுச் செயலாளர்,1924ல் சென்னை நகர ஷெரீப்,திரைப்பட தனிக்கை குழு உறுப்பினர்,சிறுவர் சாரண சங்கத்தின் சென்னை மாகாணத் தலைவர்,
இந்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் என பல செயல்களில் தன்னை ஈடுபடுத்தியிருக்கிறார்.
1934ல் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனக்குப் பதிலாக ஏ.டி.பன்னீர் செல்வத்தை அந்த பதவியில் நியமிக்க மாகாண பிரதமரிடம் பரிந்துரை செய்தார்.
நாடு விடுதலைக்குப் பின் 1952-1954 ஆண்டுகளில் சென்னை சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு பெற்று 1960 வரை அப்பதவியில் இருந்திருக்கிறார்.
1-2-1960 ல் உஸ்மான் சென்னையில் காலமானார்.
தகவல்களை எடுத்துக்கொள்ள உதவிய நூல்.சேயன் இப்ராஹீமின் முதல் தலைமுறை மனிதர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக