வெள்ளி, 15 மே, 2020

தமிழ் தேசிய அரிதாரம் பூசிய பார்ப்பனீயம் ... ஈழத்தின் இன்றைய உண்மை நிலை என்ன?


ஈழப்போர் முடிந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது ..
அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பி விட்டார்கள் .
அவர்கள் இனி எந்த காலத்திலும் போரை விரும்பமாட்டார்கள் .
கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் கணிசமான அளவு முன்னேறி விட்டார்கள்.
1995 இற்கு பின்பாக போர் நடந்த இடங்கள்  குறிப்பாக முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும்.

யாழ்ப்பாண குடா நாடு  1995 இல் இருந்து இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது.
இது ஒரு முக்கிய விடயம் . 1995 இல் சந்திரிகா அம்மையாரின் காலத்தில் யாழ்ப்பாண குடாநாடு புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது.
பலவிதமான கட்டுப்பாடுகள் இருந்தாலும் பாடசாலைகள் இயங்கின. மக்களுக்கு ஓரளவு நிவாரண உதவிகள கிடைத்தன.
பெரிதாக தொழில் வாய்ப்புக்கள் இல்லாதிருந்தும் அன்றாட வாழ்க்கை அரசு உதவியால் ஓடிக்கொண்டு இருந்தது.
இந்த காலக்கட்டத்தில் படித்து வந்தவர்கள் தற்போது உயர்கல்வி  தகுதிகளை பெற்று சமுகத்தை முன்னெடுத்து செல்லும் வல்லமை படைத்தவர்கள் ஆக உள்ளனர்.

ஈழத்தமிழர்கள் என்று  பொதுவாக கூறும்பொழுது பெரும்பான்மையான மக்கள் இந்த யாழ்ப்பாண குடாநாட்டிலே உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.

போர் முடிவுற்ற பின்பு  அங்குள்ள மக்களை இயல்பு  வாழ்க்கைக்கு திரும்ப விடாமல் எப்படியாவது குழப்பிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் புலம் பெயர் புலி ஆதரவாளர்கள் ஓரளவு முயன்று கொண்டே வந்தார்கள் .
இதில் அவர்கள் வெற்றி பெறவில்லை.

இதில் அடுத்த கட்டமாக ஒரு வஞ்சனையான வேலை திட்டத்தை அவர்கள் தமிழகத்தில் உள்ள தங்களின்  ஏவல் கூலிப்படைகள் மூலம்  முன்னெடுப்பதில் இன்று வரை வெற்றி பெற்று கொண்டே இருக்கிறார்கள்.

ஈழத்தில் இயல்பு வாழ்வு திரும்பி விட்டது என்ற உண்மையை மறைக்க புலம் பெயர் புலிகளும் அவர்களின் தமிழக அடியாட்களும் படாத பாடு படுகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து திரை உலகை சேர்ந்தவர்களோ இதர கலைஞர்களோ .இலங்கை செல்வதை ஒரு தமிழின துரோகம் என்ற ரீதியில் நச்சு பிரசாரம் செய்து தடுத்து விடுகிறர்கள்.

நமக்கேன் வீண் வம்பு என்று அவர்களும் ஒதுங்கி விடுகிறார்கள்.
முன்பு ஒரு முறை நடிகை அசின் போய்விட்டு வந்தபின் வாய் கூசாமல் அத்தனை தமிழக புலி ஆதரவு பெரும் தலைவர்களும் வசை மாரி பொழிந்தார்கள்
இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

அந்த மக்கள் சதா முள்ளி வாய்க்காலை எண்ணி உண்ணா நோன்ப்பு இருந்து உயிரை மாய்த்து கொள்ளவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்களா?

இவர்கள் வயிறு நிரம்புவதற்காக ... புலம் பெயர் புலிக்காசு வேண்டும் என்பதற்காக எந்த கலைஞர்கள் அங்கு போனாலும் உடனே அவர் ஒரு போர் குற்றவாளி என்பது போல தங்கள் சாமியாட்டத்தை தமிழகத்தில் தொடங்கி விடுவார்கள்.

இந்த குள்ளநரிகள் தப்பி தவறியும் ஒரு  இந்துமத சங்கியோ சாமியாரோ அங்கு போவதை எதிர்த்து ஒரு ஒற்றை குரல் கூட இதுவரை எழுப்பவில்லையே? ஏனிந்த ஓரவஞ்சனை?
கதா பிரசங்கிகளுக்கு  கோயில் புராண வசனகர்த்தாக்களுக்கு அமிர்ந்தானந்தமாயி . பிரம்மகுமாரிஸ். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் , சின்மயா மிஷன் இன்னும் என்னனவோ இத்ந்துத்வா கழிசடைகள் உள்ளனவோ அத்தனையும் அங்கு போய் பிராஞ்சுகளும் திறந்து வைத்து கொண்டு வேப்பிலை அடிக்கிறார்கள் .

இவர்களுக்கு எல்லாம் எந்த தடையும் இல்லை . ஆனால் தப்பி தவறி ஒரு கலைஞர்கள் போய்விட கூடாது.
எல்லாவற்றிலும் பார்க்க முக்கியமான விடயம் எந்த திருட்டு சாமியும் அங்கு போகலாம் நாள்கணக்கில் அவாள் மகிமை பேசலாம்  ஆனால் பெரியாரை பற்றியோ திராவிட கருத்தியல் பற்றியோ பேசிவிட முடியாது.
இலங்கை அரசாங்கம் அல்ல பிரச்சனை.
புலிவால்கள் தான் பிரச்சனை .
அவர்களின் தமிழக கூலிப்படைதான் அதை தடுக்கும் சுவர்!

புலிவால்களின் தமிழ் தேசிய கூட்டம் ஆர் எஸ் எஸ் இன் தமிழக முகம் எனபதில் எனக்கு துளி கூட சந்தேகம் கிடையாது.

இவர்களின் நோக்கம் சிந்தனை எல்லாம் ஒன்றுதான். தங்களின் ஜாதி அடையாளம் என்பது தங்களின் ஆஸ்தான சொர்க்கபுரி என்ற பார்பனீய சிந்தனைதான் அது.
பார்ப்பனீயம் என்பதே தெரியாத அளவு அது புலி வேசத்தில் அது வருகிறது    பார்பனீயத்தின் மீது தமிழ் தேசிய அரிதாரம்  தூவப்பட்டிருகிறது   .   ---. கலாநிதி         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக