வியாழன், 7 மே, 2020

ஒரு திமுக காரரின் குமுறல்... இது தான் திமுக வின் ஆணிவேர்)

கிளாடிஸ் கிளாடிஸ்:  முந்தாநாள் வந்தார்கள் நேற்று பிரிந்தார்கள் இன்று இணைந்தார்கள்.
இவர்கள் திமுக எனும் இயக்கம் தோன்றியதிலிருந்து இன்றுவரை அதற்காகவே உழைத்த தொண்டர்களும்
அனைத்து தோல்விகளிலும் துவளாமல் கட்சி பக்கம் நின்ற தொண்டர்களும்
இயக்கத்துக்கு எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அதை தங்கள் உழைப்பாலும் களச்செயல்பாடுகளாலும் ஒத்த ரூபாய் ஆதாயமின்றி உழைத்த உழைக்கின்ற தொண்டர்களும்
தான் சார்ந்த இயக்க ஆதரவை தன் தலைமுறைகளும் தொடர உழைத்த தொண்டர்களும்..
இயக்கத்தின் தோல்விகளுக்கு பொய்யாக கட்டமைக்கப்பட்ட புழுகுரைகளுக்கும் எதை வைத்து யாரை வைத்து கலைஞரின் புகழுக்கு களங்கம் விளைவித்தார்களோ அவர்களின் உண்மை முகத்தின் திரைகிழிக்கக்கூடாதென உத்தரவு போடுகிறார்கள்..
இந்த தொண்டர்களைவிடவா மேற்சொன்னவர்கள் உயர்வு??
இந்த தொண்டர்கள் எதை பேசவேண்டும் பேசக்கூடாது என்பதற்கா மேற்சொன்னவர்கள் கட்டளை பிறப்பிக்கிறார்கள்??
கட்சியில் உள்ள கூட்டணிக்கட்சி மற்றும் இயக்கங்கள் சொன்ன பல தகவல்கள்தான் விபுலிகள் பிரச்சினையில் திமுகவும் அதன் தலைமையும் குற்றமற்றவர்கள் என்பதை பெருமளவு நிரூபித்தன என்பது உண்மைதான்..ஆனா அத நீங்க எப்ப சொன்னீங்க தெரியுமா??
சங்கிகள் பொய்பரப்பும் போது சொல்லல
ஊடகங்கள் பொய் பரப்பும் போது சொல்லல
சீமான் என்கிற மகாபொய்யன் பொய்களாக மேடை தோறும் தூற்றிய போது சொல்லல
மே 17இயக்கம் கலைஞரின் உண்ணாவிரதத்தை கேலி பேசியபோது சொல்லல.

வைகோவோடு நெடுமாறன் போன்ற கீழ்த்தர பிழைப்புவாத அரசியல் செய்தோர் ஊர்தோறும் புளுகிய போது சொல்லல..
இப்பத்தான் ஆட்சியில் இல்லாத இந்த ஆறேழு வருடங்களாத்தான் சொல்றீங்க
உண்மைகள் தெரிந்தும் நீங்க இதுக்கு முன்னாடி ஏன் சொல்லலன்னு கூட திமுக தொண்டன் உங்களைப்பாத்து கேக்கலியே..
ஏன் தெரியுமா?
நீங்களும் இப்ப இந்த இயக்கத்துக்கு ஆதரவா இருப்பதாலத்தான்..அவனுக்கு நன்றி உணர்ச்சி இருக்கு..ஆனா நீங்க
இதுக்கு முன்னாடி கூட இருந்தீங்க பிறகு பிரிஞ்சீங்க அப்புறம் சேர்ந்தீங்க அப்படிப்பட்ட நீங்க காலமெல்லாம் இயக்கத்திலே இருந்த தொண்டனப்பாத்து நீ அதெல்லாம் பேசக்கூடாதுன்னு கட்டளை போடுறீங்க.
ராஜீவ் கொலையானதும் திமுககாரன் ஓட ஓட விரட்டினாங்களே வீட்ட சொத்துக்களை சேதப்படுத்தினாங்களே..அதையே காரணமா வச்சி திமுக மீது பழிபோட்டு ஆட்சி விரல்நுனிக்கருகில் இருந்த போது பறித்தாங்களே
..அந்த வேதனையை அனுபவித்த தொண்டனுக்கு விபுலிகளை விமர்சிக்க அருகதையில்லைன்னா இங்க யாருக்குமே வி புலிகளை ஆதரித்து பேச யோக்கியதையே இல்ல.அப்பவும் அவன் உள்ளபடிதான் சொன்னனே தவிர பொய்யாய் திரித்து கூறல..
விபுலிகளால் இந்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டது குறிப்பா தமிழகத்தில் நினைத்து பார்க்கமுடியாத மாற்றங்கள். மாற்றம்னு சொல்வதை விட சீரழிவுன்னே சொல்லலாம்.
திமுக இழுத்துக்கொண்டூவந்த முன்னேற்றத்த மகோரா என்பவர் பின்னோக்கி இழுத்து கொண்டுவிட்டார்.சரி அவரோடு போகட்டும்னு பாத்தா விபுலிகளின் ராஜீவ் கொலை ஆகக்கழிவான ஒரு ஈத்தரயை ஆட்சியில் அமர்த்தியது..
ஆக எப்படிபாத்தாலும் தமிழக அரசியல் சீரழிவிற்கு பெரும்காரணமாக அமைந்த விபுலிகளைப்பற்றி விமர்சிக்கவே கூடாதுன்னு இயக்கத்தின் தோல்விக்காக கண்ணீர் வடித்த தொண்டர்களுக்கு நீங்கள் அதிகாரக்கட்டளையிடுகிறீர்கள்.
அவர்களைப்பற்றி திமுக தொண்டன் பேசாம யார் பேசுவது? பேசமுடியும்?
திமுக என்கிற இயக்கத்தின் தோல்விகள் ஒருபோதும் அவர்களின் எதிரிகளால் அமைய வில்லை மாறாக துரோகிகளால் எழுதப்பட்டது??அத்தகையவர்களின் துரோகங்களை பேச ஆரம்பித்தால் பலரின் முகமூடி கிழியும்.
இன்றைய கூட்டணி கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அன்றைய மவுனமும் துரோகத்திற்கிணையானதுதான்.
அதையும் திமுக தொண்டன் பேசல..அவனுக்கா நீங்கள் கட்டளையிடுகிறீர்கள் எதைப்பேசவேண்டுமென்று?
நீயார் இதைப்பேச என்று சிலர் நினைக்கலாம்.
கட்சி தேர்தல் அரசியலில் பங்கு பெற்ற காலத்திலிருந்து குடும்பத்திற்கு கூட உழைக்காமல் கட்சிக்கு கடைசி வரை ஒத்த பைசா கூட பலன் பெறாமல் உழைத்த கலைஞர் மேல் கொண்ட அளவற்ற பாசத்தினால் கலைஞர்மீது சிறு குறைகூறினாலும் மொத்தக்குடும்பத்தையும் எதிர்த்த பல தொண்டர்களில் ஒருவனின் மகன் என்கிற முறையில் பேசுகிறேன்..
நீங்கள் வழக்கம்போல் இப்போதும் கட்டளையிட்டுக்கொண்டேயிருங்கள் அந்த தொண்டர்களுக்கு..
(இது கிளாடிஸ் கிளாடிஸ் என்பவரின் பதிவு உணர்ச்சியுள்ள ஒரு திமுக காரரின் குமுறல் இது தான் திமுக வின் ஆணிவேர்)

1 கருத்து:

  1. பெயரில்லா7 மே, 2020 அன்று 10:41 AM

    நூறு சதவீதம் உண்மை, கலைஞரின் வழியிலேயே இதற்கான விடை இதோ - போனோர் வந்தோர் எல்லாம் - அற்ற குளத்து அருநீர் பறவை போன்றோர் - ஆதாயம் தேடி அலைந்தோர் ஆவர், உண்மைத்தொண்டன் - கொட்டியும், ஆம்பலும் போல - கஷ்ட காலத்திலும் கூடவே நின்றவன். அவன் வாயடைக்க அவனிலும் மேலாக உரிமை பெற்றோர் இங்கு ஒருவரும் இல்லை. கிளாடிஸ் தாங்கள் திரும்ப திரும்ப “ஒத்த ரூபாய் ஆதாயமின்றி” எனக் குறிப்பிடவே தேவையில்லை, உண்மைத் தொண்டன் ஒரு நாளும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதே இல்லை. அவனின் முதலீடு, லாபம், ஆதாயம் அனைத்தும் கலைஞர் என்ற ஒருவர்தான். அவரே சகலமும் அவர் ஏற்றிய திமுக என்னும் தீபம் இன்றும், நாளையும் அணையாமல் காப்பதும் அவனே ! அவன் உரிமையை பறிப்பதென்பது கலைஞரின் கைகளில் கூட இல்லை.

    பதிலளிநீக்கு