வியாழன், 21 மே, 2020

தாயின் சேலையை கிழித்து.. கழுத்தை நெரித்து.. அந்த பாழாய்போன குடிதான்!.. கன்னியாகுமரி ..

m.dailyhunt.in : கன்னியாகுமரி: பெற்ற தாயின் சேலையை கிழித்து உருவி.. அவரது கழுத்தையும் நெரித்து கொல்ல முயன்றுள்ளார் மகன்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த நாசமா போன குடிதான்!!! மகன் அம்மாவின் புடவையை கிழித்ததும், கழுத்தை நெரிப்பதும் வீடியோவாக வெளிவந்து மிகப்பெரிய அதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
டாஸ்மாக் 55 நாட்களாக திறக்காத தமிழகத்தில் வன்முறை எண்ணிக்கை குறைந்தே இருந்தது.. யாரும் வீடுகளை விட்டு வராததாலும், கொரோனா அச்சத்தாலும் திருடுவதும், பெண்களை மானபங்கப்படுத்துவதும் இல்லாமல் இருந்தது.
ஆனால் டாஸ்மாக்கை திறந்த அன்றே மாவட்டங்களில் ரத்தவாடை வீச தொடங்கிவிட்டது.. கொலை, குத்துகள், சர்வசாதாரணமாக இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன.. நாளுக்கு நாள் குடிமகன்களின் அட்டகாசமும் பெருகியபடியே உள்ளது.
தாய் குடிமகன்குடிக்க பணம் தர மறுத்த பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளார் இளைஞர்.. இந்த வீடியோதான் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பனங்கரை பகுதியை சேர்ந்தவர் வினோ... கூலி தொழிலாளி.. கடை திறக்காத வரை வீட்டுக்குள்ளேயே பெட்டி பாம்பாக கிடந்தவர், கடை திறந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்.
> நிவாரண நிதி
தண்ணி அடிக்க பணம் கேட்டு தொல்லை பண்ணுவது, பிறகு மூக்கு முட்ட குடித்துவிட்டு வந்து திரும்பவும் பணம் கேட்டு அடிப்பது என்று இதே வேலையாக இருந்திருக்கிறார்.. இந்நிலையில், அரசு வழங்கிய 1000 ரூபாய் நிவாரண தொகையை அம்மா வாங்கி வந்திருக்கிறார்.. அந்த பணத்தை தண்ணி அடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.. வீட்டு செலவுக்கும், சாப்பாட்டுக்கும் பணம் இல்லை என்று சொல்லி, அதை அவர் தர மறக்கவும், வினோவுக்கு ஆத்திரம் வந்துள்ளது.
 > பணத்தை வீட்டில் எங்கு வைத்தாலும் வினோ தேடி கண்டுபிடித்து எடுத்து கொண்டு போய்விடுவதால், அந்தம்மா ஜாக்கெட்டுக்குள் பணத்தை வைத்திருந்திருக்கிறார்.. இதனால் கோபமடைந்த வினோ, அம்மாவின் சேலையை பிடித்து இழுத்து, ஆடைகளை களைந்து பணத்தை எடுக்க முயன்றுள்ளார்.. பிறகு அவரது கழுத்தை நெரித்து பிடித்தார்.. இதில் வலி தாங்காமல் அம்மா சத்தம் போடவும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து வினோவிடமிருந்து பத்திரமாக மீட்டனர்.
>இப்படி புடவையை கிழித்து, இழுத்து அடாவடி செய்தபோது வினோ போதையில் இருந்தார்.. மேற்கொண்டு தண்ணி அடிக்க பணம் தேவைப்படவும்தான் கொலை செய்ய முயன்றுள்ளார்.. இந்த சம்பவத்தை அங்கிருந்தோர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டனர்.. இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.. இன்னும் எத்தனை குடும்பம் இந்த குடியால் நாசமாக போகிறதோ!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக