வியாழன், 21 மே, 2020

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக புலிகள் அரங்கேற்றிய கொடூரங்கள் .. முழு விபரம் . வீடியோ


 Soodram :  பிரபாகரன் யார்? : 78ஆயிரம் ஈழத்தமிழ் முஸ்லிம்களை காத்தான்குடியில் இருந்து துரத்தி,
140 ஈழத்தமிழ் முஸ்லிம்களை சுட்டுகொன்ற விடுதலை புலிகள் தலைவன் பிரபாகரன். தமிழினத்தையே கேவலப்படுத்தி தலைகுனிய வைத்த தமிழ்ப் பாசிசப் விடுதலைப்புலிகளின் படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்...
இந்த அரசியல்வாதிகள் பொய்யுரைப்பதன் காரணம் என்னவெனில் வெளிநாடுகளில் எஞ்சியிருக்கின்ற புலிப்பயங்கரவாதிகள் கொடுக்கின்ற பெருந்தொகைப்பணத்திற்காகவும், அரசியல் சுயலாபத்திற்காகவு மேயாகும்
தமிழ்நாட்டு மக்கள் உண்மைநிலையை அறியும் பொருட்டு புலிகள் செய்த அட்டூழியங்களை வீடியோ புகைப்பட ஆதாரங்களுடன் தருகிறோம்...
இதனைப் பார்த்து விட்டு தீவிரவாதிகளான அந்த அரசியல்வாதிகளிடம் உண்மை நிலையை தெரிவியுங்கள்... அப்போதாவது தீவிரவாதத்தை கைவிடுகிறார்கள் என்று பார்ப்போம்....
புலிகள் முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எமக்கு இரத்த கண்ணீரை வரவழைக்கும். கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்கை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம்..... இப்படி அவர்களின் காட்டுமிராண்டி கொலைகளை சொல்லக் கொண்டே போகலாம். புலிகள் செய்த படுகொலைகளில் சில...
இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு ; வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர்.
யாழ்ப் பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருயாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் 500 ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று ஒலிபெருக்கிகள் அலறிக்கொண் டிருந்தன.இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்
ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.
1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14,844. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள், முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.
முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாச லுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுத பாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக 9 நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள்.
ஏறாவூர், பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள், 36 பேர் பெண்கள், 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து 9 மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
அந்த வருடம் ஜூலை மாதம் 30 திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி அம்பாறை, முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக்  கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறை, அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் 9 முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர். இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150 இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். 20 வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.
990 ஆகஸ்டு-03 —-காத்தான்குடி படுகொலை
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல், ஹுஸைனிய்யாப் பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியானது.
-1991 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே பள்ளி வாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள் மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள் ஸுஹதாக்கள் தினமாக
பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள்
மக்கா புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனை வழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68 முஸ்லிம்களை குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ பாசிசப் புலி பயங்கரவாதிகள் வெட்டியும் சுட்டும் கொன்றனர்
03-08-1990 காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும் ஹுசைனியா தைக்காவிலும் தொழுகையிலீடுபட்டு கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலி பயங்கர வாதிகளால் சராமாரியாக சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பிணிகள் எல்லோருமாக 116 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலிகளினால் வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொல்லப்பட்டனர்
1992 ஏப்ரல் 29ம் நாள் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். 1992 ஜூலை 15ம் நாள் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப் பட்டனர்
1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படு கொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும். பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள்மீது மிகப் பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றனர். கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன. இக்கால பகுதில் பல பாசிச கொலை வெறியாட்டங்கள் அரங்கேறின ஆனால் இன்று பல கொலை வெறியாட்டம் போட்ட பாசிச பயங்கரவாத கும்பல் வேருடன் பிடுங்கி எறியப்பட்டது பயங்கரவாதிகள் அழித்து ஒழிக்கபட்டனர், பயங்கர வாத கொட்டம் அடங்கியது நாட்டில் அமைதியை விரும்பிய அனைவரும்மகிழ்ந்தனர். தமிழ் புலி பயங்கரவாதிகளை ஆதரித்தவர்கள் மாற்று சமூகத்துடன் நற்பண்புடன் இனியாவது பழக கற்றுகொள்ளவேண்டும் குறிப்பாக தமிழ்பேசும் முஸ்லிம்களுடன்
கிழக்கு முஸ்லிம்களை இனசுத்திகரிப்பு செய்த புலிகளின் வீர..??? வரலாறு
2006

ஆகஸ்ட் -01- மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை
முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது
ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது
சிறுவர் சிறுமியரின் பெண்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடு இன்றி கொத்தி கொதறி பிச்சு எறியப்பட்டனர் இந்த பயங்கர வாதபுலிகள் ஒரு மாதமே ஆன சிசுவை கூட விடவில்லை தலையில் அடித்து தலை சிதறடிக்கப்பட்ட பின் வீசி எறிந்தார்கள் புலி பயங்கரவாதிகள்
104 முஸ்லிம்கள் 03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
நியாயவாதிகளே, நடுநிலையாளர்களே, மனசாட்சி உள்ளவர்களே இதற்க்கு பதில் சொல்லுங்கள் இது நியாயமா?
சக தமிழ் இனத்தை கொன்று ஊரை விட்டு துரத்திய பிரபாகரன் தேசியத்தலைவனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக