சனி, 2 மே, 2020

மருத்துவர் பிரதீபா உயிரிழப்பு .. கொரோனா தடுப்பு கிட்ஸ் பற்றாக்குறை காரணமா..

tamil.news18.com/ :கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்த இறுதியாண்டு மாணவி விடுதியில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிப்பவர் பிரதீபா. பிரதிபாவின் சொந்த ஊர் வேலூர் ஆகும். கொரோனா காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், கொரோனா தடுப்பு பணிக்கு தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு பணியில் ஈடுபடுபவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் விடுதியில் தங்கி பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்த மாணவி பிரதீபா, கடந்த 16-ம் தேதி முதல் பணி முடித்துவிட்டு பெரம்பூரில் உள்ள வீட்டிற்குச் செல்லாமல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியர் விடுதியில், தனியாக அறை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்.



இன்று காலை வழக்கம்போல் பணிக்கு செல்வதற்கு பிரதிபாவின் தோழி அறையை திறக்க முற்பட்டுள்ளார். அப்போது பிரதீபா உள்பக்கமாக தாழ்பாள் போட்ட காரணத்தினால் நீண்ட நேரமாக அழைத்தும் கதவை திறக்கவில்லை. இதனையடுத்து சக மாணவிகள் மற்றும் காவலாளிகள் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது, பிரதீபா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று பார்க்கும் போது உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை இணை ஆணையர் சுதாகர் ,கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மாணவியின் உடலை கீழ்ப்பாக்கம் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மாணவி பிரதீபா நேற்று இரவு பெற்றோரிடம் செல்போனில் பேசி வந்ததாகவும், கொரோனா காரணமாக வேலைப்பளு அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதன்பின் இன்று காலை பிரதீபாவின் தோழி பார்க்கும் பொழுது இறந்து கிடந்த உள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக பிரதீபா தங்க வைக்கப்பட்ட அறை தற்காலிகமாக அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை என்று தெரியவந்துள்ளது. அறையில் எந்தவித தற்கொலை கடிதங்களும் இல்லை எனவும் மேலும் பிரதீபாவின் செல்போன் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரதீபா எந்த முறையில் மரணமடைந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே பிரதீபா இறப்பதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்புப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை எனவும், உணவு போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் உள்ளன.

மேலும், பல மருத்துவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பிரிவில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவ மாணவி இறந்து கிடப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக பிரதீபா இயற்கையாக இறந்தாரா? அப்படியெனில் இயற்கையாக இறப்பதற்கு காரணம் என்ன? கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


splco.me/tam : கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்த இறுதியாண்டு மாணவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரதீபா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவருகிறார். கொரோனா காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பணியில் ஈடுபடுபவர்கள் வீட்டிற்கு செல்லாமல் விடுதியில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்த மாணவி பிரதீபா, கடந்த 16-ம் தேதி முதல் பணி முடித்துவிட்டு பெரம்பூரில் உள்ள வீட்டிற்குச் செல்லாமல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியர் விடுதியில், தனியாக அறை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை வழக்கம்போல் பணிக்கு செல்ல வேண்டிய பிரதிபா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சக மாணவிகள் மற்றும் காவலாளிகள் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் பொழுது, பிரதீபா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.


உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபொது பிரதீபா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் உடலை கீழ்ப்பாக்கம் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர், காவல்துறை இணை ஆணையர் சுதாகர் ,கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதீபா மரணம் குறித்து சக மருத்துவர்கள் கூறும்போது, “பிரதீபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்புப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள், உணவு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படாததால், மேலும் பல மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்” என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக