வியாழன், 28 மே, 2020

சிறுமிகளைக் காப்பாற்றிய யானை.. வீடியோ

மின்னம்பலம் : அருணாசலப் பிரதேசத்தின் லோகித் மாவட்டத்திலுள்ள தேசு நாளா ஆற்றில் மாட்டிக்கொண்ட இரண்டு சிறுமிகள், யானைகள் மூலம் மீட்கப்பட்டனர். சிறுமிகளில் ஒருவருக்கு 16 வயது, மற்றொருவருக்கு 14 வயது. “தொடர் மழையினால் ஆற்றில் நீரோட்டம் ஓட்டம் கடுமையாக உள்ளது. இந்த ஆற்றில் இரண்டு சிறுமிகள் மாட்டிக்கொண்டனர் என்ற தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம் விரைவாகச் செயல்பட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது இரண்டு சிறுமிகளும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று நகரத்தின் துணை கமிஷனர் பிரின்ஸ் தவான் கூறியுள்ளார். தேசு நாளா ஆற்றின் அருகில் இருக்கும் மத்துவா முகாமில் பலர் இவ்வாறு மாட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் அந்த இடத்தை காலி செய்து மக்களை வெளியேற்றுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். - பவித்ரா குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக