செவ்வாய், 5 மே, 2020

அதிமுக அமைச்சரின் கள்ளப்பணம் தமிழ் இந்தி சினிமா கம்பனிகளுக்கு கந்து வட்டிக்கு ..

dddநக்கீரன் : ரூ.1815 கோடி மதிப்புள்ள டான்பிநெட் டெண்டரை இறுதி செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ’புகாரில் முகாந்திரம் இருப்பதாக மத்திய அரசே சொல்லிவிட்டது.  அந்த அமைச்சரை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்..’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த டெண்டர் விவகாரத்தில் வில்லங்கமான தலையீடு இருந்ததென்றும், அதனாலேயே,  தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு  ‘புழுங்கித் தவித்தார்;
வி.ஆர்.எஸ். கேட்டார்; டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்’  என கிசுகிசுக்கிறது கோட்டை வட்டாரம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில், சி பிளாக்கில் உள்ள  அந்த அமைச்சரின் அறையிலும், அதனை ஒட்டியுள்ள அறைகளிலும் தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் அதிரடி சோதனை நடத்தியபோதே, எவ்வளவு பணம் சிக்கியது? என்னென்ன பிடிபட்டது? என சர்ச்சை எழுந்தது.

அப்போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, தேர்தல் கண்காணிப்புக்குழு மற்றும் வருமான வரித்துறை மூலம் ரூ.139 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த 139 கோடி ரூபாயில், வருமான வரித்துறை பறிமுதல் செய்தது ரூ.55 கோடி என்று சொல்லப்பட்டது.   அப்போதும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 
கடந்த பிப்ரவரி மாதம் மதுரையை சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு தொடர்புள்ள 18 இடங்களில் சோதனை நடந்து, ரூ.77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது, பினாமிகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. அந்த நேரத்திலும்,  ‘எல்லாம் அமைச்சர்களின் பணம்’ என்று சில அமைச்சர்களின் பெயர் அடிபட்டது.  அன்புச்செழியனுக்கு கட்சியில் பொறுப்பு கிடைத்த பின்னணியில் அந்த அமைச்சர்  இருந்தார் என்று பேசப்பட்டது.
அரசியல் வட்டாரத்தில், “அந்த அமைச்சர்,  தனது  ‘யோகமான’ தம்பி மூலம், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்தி திரையுலகத்தினருக்கும், கோடிகளில் ‘பைனான்ஸ்’ செய்து வருகிறார். ஓரிரு தமிழ் சினிமாக்களில் தலை காட்டிய அந்தத் தம்பி, இந்தி படத்திலும் திறமை(?) காட்டி வருகிறார். ஆட்சி அதிகாரத்தின் மூலம் சம்பாதித்து, நாள்தோறும் மூட்டை மூட்டையாகக் கட்டி,   சினிமா தயாரிப்பாளர்களிடம் வாரியிறைக்கிறார்.. முறைகேடாக குவித்த அந்தப் பணமெல்லாம் வட்டியும் குட்டியுமாய் பெருகியபடியே இருக்கிறது.” எனச் சொல்கின்றனர்.
இந்தக் கரோனா காலக்கட்டத்தில், அதிமுக ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடப்பதன் பின்னணியில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவராக வெளிப்பட்டா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக