வெள்ளி, 15 மே, 2020

திரைப்படங்கள் நேரடியாக ஸ்ட்ரீமிங்கில் வெளியாவது ஏமாற்றம் தருகிறது: பிவிஆர் அதிகாரி

.hindutamil.in : திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டைத் தாண்டி நேரடியாக
ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிடுவது தங்கள் தர்பபு ஏமாற்றம் அளிக்கிறது என பிவிஆர் பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி கமல் கியான்சந்தானி கூறியுள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் அத்தனையும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக திரையரங்குகள் மூடப்பட்டு மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை உருவாகியுள்ளதால் சில தயாரிப்பாளர்கள் ஊரடங்கால் வெளியாக முடியாமல் போன தங்களின் திரைப்படங்களை நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட முனைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை அமேசான் ப்ரைம் தரப்பு, தங்கள் தளத்தில் 7 புதிய திரைப்படங்கள் நேரடியாக வெளியாகவுள்ளது என அதிரடியாக விளம்பரம் செய்தது

இதற்கு இந்தியாவின் மிகப்பெரிய மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்களில் ஒரு நிறுவனமான பிவிஆர் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய பிவிஆர் பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி கமல் கியான்சந்தானி, "சில தயாரிப்பாளர்கள் நேரடியாக ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிடுவது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் ஸ்ட்ரீமிங் தளங்களில் திரைப்படங்கள் வெளியாவது இது முதல் முறை அல்ல. கடந்த பல வருடங்களாகவே திரையரங்க வெளியீடு, வளர்ந்து வரும் புதிய தளங்களால் தொடர்ந்து போட்டியை சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது.
தொடர்ந்து சினிமா ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் பெற்று வருகிறது. திரையரங்குகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, அதற்கு ஏற்றவாறு தங்கள் திரைப்படஙகளின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ள அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம்" என்றார்.
முன்னதாக வியாழக்கிழமை அன்று அமிதாப் பச்சனின் குலாபோ சிதாபோ திரைப்படம் ப்ரைமில் நேரடியாக வெளியாவது குறித்த அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து து பிரபல மல்டிப்ளெக்ஸ் நிறுவனமான ஐநாக்ஸ், அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக