ஞாயிறு, 17 மே, 2020

சாலையை அடைத்த அறிவாளிகள் . திட்டச்சேரி ..

ராஜா பாலகிருஷ்ணன் நாகப்பட்டினம் : கொரோனா கொடுமையை விட
இவனுங்க கொடுமை பெரும் வேதனையா இருக்கிறது....!!
நாகை மாவட்டம் திட்டச்சேரியின் மேற்கு சன்னாநல்லூர் சாலையை வாகனங்கள் செல்லாத அளவிற்கு முழுவது அடைத்து விட்டார்கள் ...
திட்டச்சேரியின் கிழக்கு பக்கம் காரைக்கால் சாலையில் வாழ்மங்களம் முழுவதும் அடைத்து விட்டார்கள்.....
திட்டச்சேரியின் தெற்கு நாகப்பட்டினம் சாலை பனங்குடியில் அடைத்து விட்டர்கள் .....
திட்டச்சேரி திருமருகல் வழியாக ஆண்டிபந்தல் சாலையை அடைத்து விட்டார்கள்.....
இப்போது திருமருகலில் விஷம் குடித்த ஒருவரை அவசர சிகிச்சைக்காக எந்த மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு சாலைகளை அடைத்து மக்களை சித்திரவதை செய்து துன்புறுத்தி வரும் இந்த அரசு செய்யும் அவலங்களை என்னவென்று சொல்வது .......
அவசர சிகிச்சைக்காக செல்ல முடியாத அளவிற்கு சாலைகளை அடைத்த இந்த அரசு மதுக்கடைகளை மட்டும் திறந்தது ஏன்....!???
ஓட்டு போட்ட மக்களை திரும்பி கூட பார்க்காத எங்கள் ஆற்றல் மிகு எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ....

எங்களுக்கு கிடைத்த எம்எல்ஏ மாதிரி இந்த தமிழ்நாட்டில் வேறெந்த தொகுதி மக்களுக்கும் கிடைத்ததில்லை ...
ஏன்னா எங்கள் எம்எல்ஏ செயல்பாடு அப்படி ...‌‌
நடக்கிற கொடுமைகளையெல்லாம் பார்த்தால் இதுக்கு கொரோனாவே பரவாயில்லை என்று தோன்றுகிறது.....
நல்ல அரசு , அந்த அரசுக்கு சொம்படிக்கிற நல்ல எம்எல்ஏ .....
வாழ்க_ஜனநாயகம் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக