வெள்ளி, 22 மே, 2020

இன்று பாஜகவில் இணைகிறார், விபி துரைசாமி

இன்று பாஜகவில் இணைகிறார், விபி துரைசாமி தினத்தந்தி : விபி துரைசாமியிடம் இருந்து நேற்று திமுக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது.
சென்னை, பாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலாளருமான வி.பி.துரைசாமியின் பதவி நேற்று பறிக்கப்பட்டது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தான் பாஜகவில் இன்று இணைய இருப்பதாக விபி துரைசாமி தெரிவித்துள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காலை 9.30 மணிக்கு தமிழக பாஜக தலைமையகமான கமாலயம் சென்று பாஜகவில் விபி துரைசாமி இணைய உள்ளார். திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர் திமுகவின் முக்கியப் பொறுப்பான துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக